SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை.. பொற்காலம் ஆரம்பம்

Shukra Nakshatra Peyarchi: செப்டம்பர் 11ஆம் தேதி சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி நடக்கிறது. இதனால், சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Sep 07, 2026, 08:29 IST | Updated: Sep 07, 2026, 08:35 IST
Join

Shukra Nakshatra Peyarchi: ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சுக்கிரன் அறியப்படுகிறார். சுக்கிரன் பகவான் 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  ராசி மட்டுமின்றி சுக்கிரன் பகவான் நட்சத்திர பெயர்ச்சியும் அடைகிறார். 

சுக்கிரன் பெயர்ச்சி

அந்த வகையில், செப்டம்பர் 11ஆம் தேதி தனது நட்சத்திரத்தை மாற்ற உள்ளார். சுக்கிரன் செப்டம்பர் 11ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்தில் இருந்து சுவாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். அங்கு அக்டோபர் 24ஆம் தேதி வரை பெயர்ச்சி அடைகிறார். சுவாதி நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு அறியப்படுகிறார். சுக்கிரன் ராகுவின் நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சி அடைவது சில ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றலை உண்டாகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

ரிஷபம் (Taurus Zodiac Sign)

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் உண்டாகும். உங்கள நல்ல பலன்களை சுக்கிரன் கொடுப்பார். சுக்கிரனின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலைமை மேம்படும. உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். ஆரோக்கியத்தில் சுற்று முன்னேற்றம் இருக்கும். 

கவலைகள் தீரும். தடைகள் நீங்கி, புதிய விஷயத்தை துவங்க சிறந்த காலமாக இருக்கும்.  தொழிலில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். கூட்டுத் தொழிலில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். குடும்பத்தினரிடம் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம். நிதி ஆதாயங்கள் உண்டாகும். பெற்றோரின் உதவி கிடைக்கும்.

கடகம் (Cancer Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு  பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் இருந்து வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். 

கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வழக்கு செயல்களில் அலைச்சல் உண்டாகும். ஆன்மீகப் பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். வெளியூர் பயணத்தில் புது விதமான அனுபவம் கிடைக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும்.

துலாம் (Libra Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வம் உண்டாகும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்பும் ஏற்படும். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். 

அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின்  ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

கும்பம் (Aquarius Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும்.  நீண்ட தூரப் பயணங்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். கட்டுமானத் துறைகளில் லாபம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படவும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். 

சமூகப் பணிகளில் மதிப்புகள் உயரும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் கைகூடும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES