SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

நவம்பரில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. வெற்றி, அதிர்ஷ்டம் கிடைக்கும்

Shukra Peyarchi November: நவம்பர் 5ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடக்கிறது. சுக்கிரன் பகவான் நவம்பர் 5ஆம் தேதி கன்னி ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதனால், 4 ராசிகளுக்கு 30 நாட்கள் அமோக வெற்றியை பெறுவார்கள். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Sep 05, 2026, 11:02 IST | Updated: Sep 05, 2026, 11:08 IST
Join

Shukra Peyarchi November: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சுக்கிரன் பகவான் அறியப்படுகிறார். சுக்கிரன் பகவான் 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றெரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரன் பகவான் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் பகவான் தற்போது சிம்ம ராசியில் இருக்கிறார். 

இந்த நிலையில், நவம்பர் 5ஆம் தேதி சுக்கிரன் பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். கன்னி ராசியில் சுக்கிரன் நீச்சம் பெற்றதாகக் கருதப்பட்டாலும், பல விசேஷ யோகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் தாக்கத்தால், இந்த பெயர்ச்சி  சில ராசிகளுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்

மேலும் படிக்க: செப்டம்பர் 14ல் புதன் பெயர்ச்சி.. இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்! பண மழை கொட்டும்

ரிஷபம் (Taurus Zodiac Sign)

ரிஷப ராசியின் அதிபதியாக சுக்கிரன் இருக்கிறார். இந்த பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வம்,  அதிர்ஷ்டத்தை கொடுக்கும். உங்களுக்கு இருந்து வந்த சிறு சிறு பிரச்னைகள் தீரும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் ஏற்படும். வெளியூர் வர்த்தக செயல்களில் சிந்தித்து செயல்படவும். விளையாட்டான பேச்சுகளை குறைத்து கொள்ளவும். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வழக்கு சார்ந்த அலைச்சல் ஏற்படும்.

கடகம் (Cancer Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும்.  குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். மனதளவில் இருந்த தயக்கத்தை தவிர்க்கவும். உணவு செயல்களில் கட்டுப்பாடு வேண்டும். கணவன் மனைவிக்குள் புரிதல் உண்டாகும். வணிக நடவடிக்கைகளில் லாபம் மேம்படும். யதார்த்தம் தாண்டிய கற்பனைகளை குறைத்து கொள்ளவும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் உண்டாகும்

மேலும் படிக்க: குரு பெயர்ச்சி: இன்று முதல் 3 ராசிகளுக்கு அள்ளிக்கொடுக்கும் குரு.. ராஜவாழ்க்கை ஆரம்பம்
 

கன்னி (Virgo Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை மேம்படும். உங்களுக்கு இருந்து தடைகள் நீங்கும். நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் திருப்தி உண்டாகும். புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதை குழப்பிய சில விஷயங்களுக்கு தெளிவுகள் பிறக்கும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மருத்துவத் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். வேளாண்மைத் துறைகளில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.

மீனம் (Pisces Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்கள் உருவாகும்.  நண்பர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். 

காப்பீடு சார்ந்த துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும். பழைய சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். புதிய நபர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுக்கவும்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க:  சுக்கிரனால் உருவாகும் சுப யோகம்! நாளை முதல் 4 ராசிகளுக்கு பொற்காலம்.. உங்க ராசி இருக்கா?

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES