அக்டோபர் 17ல் 'சுக்ராதித்ய ராஜயோகம்': இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண வரவும், தொழிலில் வெற்றி!
அக்டோபர் 17ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகத்தால் 4 ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம்.
ஜோதிடத்தில் கிரகங்களின் நிலை மாற்றங்களும் அவற்றுகிடையேயான சேர்க்கைகளும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. குறிப்பாக இரண்டும் கிரகங்கள் ஒரே ராசியில் இணைந்து பயணிக்கும் போது உருவாகும் யோகங்கள், அந்த ராசியின் தன்மைக்கு ஏற்ப பல்வேறு பலன்களை ஏற்படுத்தும்.
அந்த வகையில், அக்டோபர் மாதத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் ஒரே ராசியில் இணைவதால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாக உள்ளது. சுக்கிரனின் சொந்த ராசியான துலாமில் இந்த கிரக சேர்க்கை நிகழ இருப்பது கூடுதல் முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 17ல் கிரகங்களின் சேர்க்கை
சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். ஏற்கனவே துலாம் ராசியில் சுக்கிரன் இருப்பதால், சூரியனும் அங்கு நுழைந்ததும் இரு கிரகங்களும் ஒரே ராசியில் இணைகின்றன. சூரியன் அதிகாரம் தலைமை தன்னம்பிக்கை உள்ளிட்டவற்றையும் சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், உறவுகள், வசதிகள் உள்ளிட்டவற்றையும் குறிப்பதாக கருதப்படுகிறது. இதனால் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம் 12 ராசிகளுக்கும் சில தாக்கங்களை ஏற்படுத்தும். இருப்பினும், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் தொழில், பணவரவு மற்றும் வியாபாரத்தில் சாதகமான மாற்றங்களை கொண்டு வரக்கூடும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கிரக சேர்க்கை தொழில் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம். இதுவரை மேற்கொண்ட முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்கும் சூழல் ஏற்படலாம். பணியில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படுவதுடன், அவர்களின் திறமைக்கு அங்கீகாரமும் கிடைக்கலாம். வேலை மாற்றத்தை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வருமானத்தை அதிகரிக்கும் புதிய வழிகள் உருவாகலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் ஒவ்வொன்றாக முடிவுக்கு வரக்கூடும். கூட்டு தொழில் செய்து வருபவர்களுக்கும் லாபம் கிடைக்கக்கூடிய காலமாக இருக்கலாம்.
அதேநேரத்தில் பெரிய அளவிலான முதலீடு அல்லது பணம் தொடர்பான முடிவுகளை அவசரமாக எடுக்காமல் முழுமையாக ஆலோசிட்த்து செயல்படுவது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களின் குடும்பம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் இந்த யோகத்தின் தாக்கம் சாதகமாக இருக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும் வாய்ப்பு உள்ளது. சொந்த வீடுவாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு கொண்டிருப்பவர்களுக்கு அதற்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படலாம். பணியிடத்திலும் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கக்கூடும். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், வருமானத்திலும் முன்னேற்றம் ஏற்படலாம். நீங்கள் மேற்கொள்ளும் பணிகளை திட்டமிட்டு கவனமாக செய்து முடித்தால் எதிர்பார்த்ததைவிட சிறப்பான பலன்களை பெறும் சூழல் உருவாகலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் குறிப்பாக பண விஷயங்களில் சாதகமானதாக அமையலாம். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகுவதுடன், நீண்ட காலமாக கிடைக்கலாம் இருந்த பணம் கைக்கு வருவதற்கான வாய்ப்பும் உள்ளது. முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கலாம். நிதி நிலை மேம்படுவதற்கான சூழல் உருவாகும். வியாபாரம் செய்து வருப்வர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கக்கூடும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். அதே நேரத்தில் உங்களின் பணித்திறனும் உயர் அதிகாரிகளால் கவனிக்கப்படலாம். எந்தவொரு நிதி முடிவையும் எடுப்பதற்கு முன் அதுதொடர்பான அனைத்து தகவல்களையும் ஆராய்ந்து முடிவு செய்வது அவசியம். திட்டமிட்டு செயல்பட்டால் எதிர்பார்த்த இலக்குகளை அடையும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.
துலாம்
இந்த சுக்ராதித்ய ராஜயோகம் துலாம் ராசியிலேயே உர்வாகுவதால் இந்த ராசிக்காரர்களுக்கு அதன் தாக்கம் முக்கியமானதாக இருக்கலாம். தொழில் மற்றும் பணியிடத்தில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். சிலருக்கு ப்தவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் மூலம் லாபம் தரக்கூடிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்த பணிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் உருவாகும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் ஆர்வமும் ஏற்படலாம். வருமானத்திற்கான ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் உருவாக வாய்ப்புள்ளதால், பொருளாதார நிலையும் படிப்படியாக வலுப்பெறக்கூடும்.
பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.