SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்: 5 ராசிகளுக்கு குட் லக்!! நவம்பர் 22 முதல் நல்ல காலம் ஆரம்பம்

Sukran Peyarchi Palangal: துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் பொற்காலம் பிறக்கும். நவம்பர் 22 முதல் அதிகமான நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி இங்கே காணலாம்.

Written By Sripriya Sambathkumar
Published: Nov 20, 2026, 13:20 IST | Updated: Nov 20, 2026, 13:27 IST
Image Credit: Venus Transit Effects
Join

Sukran Peyarchi Palangal: மனித வாழ்வில் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், குடும்ப வாழ்க்கை ஆகியவற்றின் காரணி கிரமாக இருப்பவர் சுக்கிரன். இவர் தனது ராசி மற்றும் நிலையை மாற்றும்போதெல்லாம், மனிதர்களின் வாழ்வில் இந்த அம்சங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

சுக்கிரன் பெயர்ச்சி

நவம்பர் மாத இறுதியில், சுக்கிரன் தனது ராசியை மாற்றவுள்ளார். நவம்பர் 22 அன்று, சுக்கிரன் கன்னி ராசியிலிருந்து விலகி துலாம் ராசிக்குள் பெயர்ச்சி ஆகவுள்ளார். துலாம் ராசி சுக்கிரனுக்கு உரிய ராசிகளில் ஒன்றாகும். ஜோதிட சாஸ்திரப்படி, ஒரு கிரகம் தனது சொந்த ராசியில் பெயர்ச்சி ஆவது மிகவும் மங்கலகரமானதாகக் கருதப்படுகிறது.

சுக்கிரன் செல்வம், ஆடம்பரம், காதல், திருமணம் மற்றும் சுகபோகங்களுக்கு காரக கிரகமாவார். எனவே, அவர் துலாம் ராசிக்குள் நுழைவது சில ராசிக்காரர்களுக்கு சாதகமான வாய்ப்புகளை உருவாக்கக்கூடும். பணியில் இருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில்முனைவோருக்கு லாபம் அதிகரிக்கக்கூடும். மேலும், காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் பொற்காலம் பிறக்கும். நவம்பர் 22 முதல் அதிகமான நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி இங்கே காணலாம்.

மேஷம் (Aries):

சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பல வகைகளில் மிகவும் சாதகமாக அமையலாம். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும், மேலும் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவுக்கு வரக்கூடும்.

மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி: டிசம்பர் முதல் 4 ராசிக்கு அதிர்ஷ்ட காலம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும்!

ரிஷபம் (Taurus):

சுக்கிரன் ரிஷப ராசிக்கு அதிபதி என்பதால், அவர் துலாம் ராசிக்குள் நுழைவது ரிஷப ராசிக்கார்ரகளுக்கு மிகவும் மங்கலகரமான நிகழ்வாக இருக்கும். தொழில் வளர்ச்சிற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். மேலும் வணிகத்தில் லாபம் ஈட்ட வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலை மேம்படக்கூடும். உங்கள் வாழ்க்கையில் சுகபோகங்களும் ஆடம்பரங்களும் அதிகரிக்கக்கூடும்.

மிதுனம் (Gemini):

சுக்கிரன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும். காதல் உறவுகளில் இனிமை அதிகரிக்கும். திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் அமையலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறலாம், படைப்பாற்றல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கலாம்.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: நவம்பர் 22 முதல் கோடீஸ்வர யோகம்.. 4 ராசிகள் மீது பண மழை

சிம்மம் (Leo):

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் சுகபோகங்களும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும். வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொழில் மற்றும் வணிகத்தில் உங்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். உங்கள் நிதி நிலை வலுவடையும்.

துலாம் (Libra):

துலாம் ராசியில்தான் சுக்கிரன் நுழைகிறார். இதன் விளைவாக, சுக்கிரன் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு பலனளிப்பதாக அமையும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும், மேலும் உங்கள் ஆளுமை மிளிரும். பணியிடத்தில் உங்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம் அல்லது பதவி உயர்வு பெறலாம். வணிகத்தில் லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண உறவிலும் மகிழ்ச்சி பெருகக்கூடும்.

சுக்கிரன் பெயர்ச்சியின் முக்கியத்துவம்

ஜோதிடத்தில், சுக்கிரன் பொருள் சார்ந்த வசதிகள், காதல், செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் காரணியாகக் கருதப்படுகிறார். துலாம் ராசியில் இருக்கும்போது, ​​சுக்கிரன் வலிமையான நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த அம்சங்கள் தொடர்பான விஷயங்களுக்கு இந்த இடமாற்றம் சாதகமானதாகக் கருதப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராசி பரிவர்த்தன யோகம்: இந்த 3 ராசிகளுக்கு டிசம்பர் 16 வரை ஜாக்பாட்.. பணவரவு, தொழில் வளர்ச்சி

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

ZEENEWS TRENDING STORIES