SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சூரியன் பெயர்ச்சி: தீபாவளி முதல் 4 ராசிகளுக்கு குருவின் அருள்.. கோடீஸ்வர யோகம், வெற்றி!

Surya Peyarchi: தீபாவளி பண்டிகைக்கு பிறகு, சூரியன் நட்சத்திர பெயர்ச்சி நடக்க உள்ளது. ராகுவின் நட்சத்திரத்தில் நவம்பர் 6ஆம் தேதி சூரியன் பெயர்ச்சி அடைகிறார். அதன்பிறகு, குரு நட்சத்திரத்திரமான விசாகத்தில் பெயர்ச்சி அடைவார். இதனால், இந்த 4 ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும்.

Written By Umabarkavi K
Published: Oct 28, 2026, 03:03 PM IST | Updated: Oct 28, 2026, 03:09 PM IST
Join

Surya Peyarchi: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சூரியன் அறியப்படுகிறார். சூரியன் பகவான் ஒரு மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். சூரியன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் அவ்வப்போது தனது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அந்த வகையில்,  சூரியன் ராகுவின் நட்சத்திரமான சுவாதியில் அக்டோபர் 24ஆம் தேதி அன்று பெயர்ச்சி அடைந்தார்

சூரியன் சுவாதி நட்சத்திரத்தில் நவம்பர் 6ஆம் தேதி இரவு 9.08 மணி வரை நிலைத்திருப்பார். இதற்கு பிறகு, சூரியன் குருவின் நட்சத்திரமான விசாக நட்சத்தரத்தில் பெயர்ச்சி அடைவார்.  நவம்பர் 19ஆம் தேதி குருவின் நட்சத்திரத்தில் இருப்பார். இதனால், தீபாவளிக்கு பிறகு, சூரியன் நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு அமோகமாக இருக்கும். அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ரிஷபம் (Taurus Zodiac Sign)

சூரியன் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். வரவுகளால் சேமிப்புகள் உயரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இணைய பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். 

மனதில் இருந்த கவலைகள் குறையும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வீட்டிற்கு  தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். கணவன் மனைவியிடையே புரிதல் உண்டாகும்.

மேலும் படிக்க: குரு பெயர்ச்சி: 10 ராசிகள் மீது வெற்றி மழை, கொட்டிக்கொடுப்பார் குரு... சிக்கலில் 2 ராசிகள்

மிதுனம் (Gemini Zodiac Sign)

சூரியன் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். அரசுப் பணிகளில் இருப்பவர்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவக்கூடும். குடும்பம் சார்ந்த நடவடிக்கைகளில் நேர்மறையான உணர்வுகள் ஏற்படலாம். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். திறமைக்கான மதிப்புகள் உண்டாகும்.

கன்னி (Virgo Zodiac Sign)

சூரியன் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் உண்டாகும். நிதி நிலைமை மேம்படும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். அரசு வழி செயல்களில் பொறுமை வேண்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோர் ஆலோசனை நன்மை தரும்.  கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் அகலும். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். குடும்ப பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி முடியும்.

மேலும் படிக்க: கேது பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு வருமானம் அதிகரிக்கும், வெற்றிகள் குவியும்

துலாம் (Libra Zodiac Sign)

சூரியன் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் சுப பலன்களை பெறுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கருத்துகளுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களில் விவேகத்துடன் செயல்படவும்.  வாகன பராமரிப்பு செலவு உண்டாகும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். பெற்றோர்கள் வழியில் ஆதரவு பெருகும்.  உழைப்பிற்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். வாகன மாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES