SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

விநாயகர் சதுர்த்தி நாளில்...’இந்த’ 4 ராசிக்கு செம்ம லக்! யாருக்கு தெரியுமா?

இன்னும் சில நாட்களில் விநாயகர் சதுர்த்தி நாள் வரப்போகிறது. இந்த நாளில், எந்தெந்த ராசிகளுக்கு பலன் கிடைக்கப்போகிறது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Sep 09, 2026, 15:30 IST | Updated: Sep 10, 2026, 09:17 IST
Image Credit: Ganesh | X Page
Join

“எது தொடங்கினாலும், பிள்ளையார் சுழி போட்டு தொடங்கு” என்பார்கள். இந்தியாவை பொறுத்தவரை விநாயகருக்கு அவருக்கு கணேசன், பிள்ளையார், கணபதி என பல பெயர்கள் இருக்கிறது. அதே சமயத்தில், விநாயகரை வழிபட்டால், வாழ்வில் இருக்கும் தடைகள் நீங்கி, வாழ்வின் பல முக்கிய தொடக்கங்களை அமையும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட விநாயகரை வணங்கி வழிபடும் ஒரு நாள்தான், விநாயகர் சதுர்த்தி.

விநாயகர் சதுர்த்தி:

தடைகளை நீங்கி, அருள் வழங்கும் முதற்கடவுளான விநாயக பெருமான் அவதரித்த நாளாக இது கொண்டாடப்படுகிறது என கூறப்படுகிறது. தமிழ் மாதமான ஆவணி வளர்ப்பிறை சதுர்த்தி திதியில்தான் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பல பேர் களிமண்ணால் ஆன பிள்ளையார் சிலைகளை வீடுகளிலும், பொது இடங்களிலும் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவர். பிள்ளையாருக்கு பிடித்த, கொழுக்கட்டை, சுண்டல் போன்றவற்றை படையலாக போட்டு வழிபடுவோம். இந்த வருடத்தின் விநாயகர் சதுர்த்தி, வரும் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளிற்கு பிறகு சில ராசிகளின் தலையெழுத்தே மாற இருக்கிறது. அந்த ராசிகள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

மகரம்:

மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை, அவர்கள் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஒரு நல்ல செய்து வீடு வந்து சேரும். இவர்கள், சில நாட்களாக குடும்பம் மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக முயற்சி எடுத்து வந்த நிலையில், அந்த முயற்சிகள் சரியாக ஈடேறும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள், புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்து, அதன் மூலம் முன்னேற்றம் கிடைக்கக்கூடிய காலமாக இருக்கிறது என ஜோதிட நம்பிக்கைகள் கூறுகிறது. இவர்களுக்கு, புதிய தொடர்புகள் கிடைத்து அவை வருங்காலத்திலும் இவர்களுடன் பயணிக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | செப்டம்பர் 9 ராசிபலன்: இன்று யார் யாருக்கு பொன்னான நாள்?

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த விநாயகர் சதுர்த்திக்கு பிறகு புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். அவர்கள், வேலை அல்லது தொழிலில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படுவதற்கான சூழலும் அமையலாம்.

விநாயகர் சதுர்த்தி வழிபடுவது எப்படி?

ஏன் பிள்ளையாரை முதலில் வழிபடுகிறோம்?

நம்மில் பலர், எந்த சுப காரியம் தொடங்கும் முன்னரும் முதலில் பிள்ளையாரைத்தான் கும்பிடுகிறோம். இவ்வளவு ஏன், கோயிலுக்கு செல்லும் போது கூட, முதலில் பிள்ளையாரை வணங்கி விட்டுதான் பிற தெய்வங்களை வழிபட செல்கிறோம். இது ஏன் என்று எப்போதாவது சிந்ததுண்டா?

விநாயகரை வழிப்பட்டால், அந்த காரியம் வெற்றியடையும் என்பதன் காரணமாகத்தான் நாம் முதலில் விநாயகரை வழிபடுவதாக கூறப்படுகிறது.

விநாயகர் தடைகளை நீக்கும் தெய்வமாகவும் கருதப்படுகிறார். இதனால், நாம் செய்யப்போகும் இறை வழிபாடு எந்த இடையூறுமின்றி, முழுமையான பலனைத்தர வேண்டும் என்பதற்காகவே  முதலில் அவரை வணங்குகிறோம்.

மேலும் படிக்க | கடகத்தில் செவ்வாய் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு இக்கட்டான நேரம், சூதானமா இருங்க!

(பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES