• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /ஆன்மீகம்
  • /திருச்செந்தூர்: முருகனை தரிசிக்கும் முன்.. பக்தர்கள் அறிய வேண்டிய 3 விஷயங்கள்

திருச்செந்தூர்: முருகனை தரிசிக்கும் முன்.. பக்தர்கள் அறிய வேண்டிய 3 விஷயங்கள்

Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்வதற்கு பக்தர்கள் சில விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம், நீங்கள் சிரமமின்றி தரிசனம் செய்யலாம்.

Written ByUmabarkavi K
Published: Aug 07, 2026, 07:17 PM IST|Updated: Aug 10, 2026, 05:49 PM IST
joinshare
திருச்செந்தூர்: முருகனை தரிசிக்கும் முன்.. பக்தர்கள் அறிய வேண்டிய 3 விஷயங்கள்
Image Credit: Image Source: Chatgpt AI

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

2

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

3

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

4

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

5

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tiruchendur Murugan Temple: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது. தமிழகத்தின் முக்கிய ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக இக்கோயில் உள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயில்

கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

வைகாசி விசாகம்,தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். இதனால் கோயில் நிர்வாகமும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 இதற்கிடையில், பக்தர்களுக்கு சமீபத்தில் கோயில் நிர்வாகமும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், எந்த நேரத்தில் முருகனை தரிசிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கைபேசி பயன்பாட்டுத் தடை நடைமுறையில் உள்ளது. பொதுதரிசனம், ரூ.100 விரைவு தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை உள்ளிட்ட அனைத்து நுழைவு வழிகளிலும் பக்தர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.

எனவே, பக்தர்கள் தங்களது கைபேசிகளை தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், பக்தர்களின் வசதிக்காக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பல இடங்களில் கைபேசி வைப்பிடங்கள் (Mobile Deposit Counters) ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பரிசோதனையின்போது பக்தர்களிடம் கைபேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவை பாதுகாப்பு நடைமுறைகளின்படி பெறப்பட்டு/பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பு வைப்பகங்களில் வைக்கப்படும்.

திருச்செந்தூர் முருகன் கோயில் பூஜை விவரம்

பூஜை பெயர்பூஜை/அபிஷேக நேரம்
கோயில் நடை திறப்பு, விஸ்வரூப தீபாரனை, உதயமார்த்தாண்ட பூஜைஅதிகாலை 5 மணி
காலசந்தி பூஜை
 
காலை 8 மணி
கலச பூஜை (தங்க கவசம்)
 
காலை 10 மணி
உச்சிக்கால அபிஷேகம்
 
காலை 10.30 மணி
உச்சிக்கால தீபாராதனை 
 
மதியம் 12.00 மணி
சாயராட்சை பூஜை (தங்க கவசம்)
 
மாலை 5 மணி

அர்த்தசாம அபிஷேகம் (சந்தனக் காப்பு அலங்காரம்)


 

இரவு 8.15
பள்ளியறை தீபாராதனைக்குப் பின் நடை சாத்துதல் (சந்தனக் காப்பு அலங்காரம்)இரவு 9.00 மணி

முருகனை எப்போது தரிசிக்கலாம்?

  • திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண தரிசனத்திற்கு மாலை 6.30 மணி வரையும், பொது தரிசனத்திற்கு இரவு 7  மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
  • இதுவரை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, ஒன்பது கால பூஜைக்கு பிறகு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்பட்டது.
  • கட்டண தரிசனத்திற்கு இரவு 7.30 மணி வரையும், பொது தரிசனத்திற்கு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
  • விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் தரிசன நேரம் மாறுதலுக்குட்பட்டது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காரணம்:  திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன நேரம்
குறைக்கப்படவில்லை. கூட்ட நெரிசல் நாட்களில் மட்டுமே கோயில் உள்நுழைய நேரம் நிர்ணயம். கூட்ட நெரிசல் நாட்களில் நடை அடைக்க நள்ளிரவு 12 மணிக்கு மேலாகிறது. 

நடை சாற்றும் நடைமுறையை சரியாக பின்பற்றவே புதிய நடைமுறை என கோயில் நிர்வாகம் விளக்கம். எனவே, பக்தர்கள் மேற்கண்ட விஷயங்களை தெரிந்து கொண்டு, திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu