• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /Asian Games 2026: இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது? ஃபைனலில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பா?

Asian Games 2026: இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது? ஃபைனலில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பா?

செப்.28ம் தேதி ஆசிய விளையாட்டு காலிறுதியில் இந்திய அணி குரூப் ஏ-வில் 2வது இடம் பிடிக்கும் அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில், ஆப்கானிஸ்தான், ஜப்பான் அல்லது நேபாளம் ஆகிய அணிகளில் ஒன்று எதிரணியாகும் வாய்ப்பு உள்ளது.

Written ByR Balaji
Published: Sep 25, 2026, 19:27 IST|Updated: Sep 25, 2026, 19:30 IST
joinshare
Asian Games 2026: இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது? ஃபைனலில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பா?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

2

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

3

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

4

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

5

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

2026 ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்கள் கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே காலிறுதியில் காலிறுதியில் களமிறங்க உள்ளது. ஆனால், அந்த போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளப்போகும் அணி எது என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இதற்கிடையே இந்தியா ஏற்கனவே ஜப்பானுடன் ஒரு டி20 போட்டியில் விளையாடியிருப்பதால், ஆசிய விளையாட்டு போட்டியிலும் ஜப்பானை எதிர்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.,

ஆசிய விளையாடு போட்டிகளில் ஆண்கள் கிரிக்கெட்டில் அனைத்து அணிகளும் ஒரே கட்டத்தில் இருந்து விளையாடுவதில்லை. தரவரிசை மற்றும் போட்டி அமைப்பின் அடிப்படையில் சில அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகளும் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. மற்ற அணிகள் குழு சுற்றில் விளையாடி, அதில் சிறப்பாக செயல்படும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

காலிறுதியில் இந்தியாவின் எதிரணி யார்?

குரூப் ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஜப்பான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்று அணிகளும் தங்களுக்குள் விளையாடும் போட்டிகளின் முடிவில், குரூப் ஏ-வில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணி இந்தியாவை காலிறுதியில் எதிர்கொள்ளும்.

அதாவது காலிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அல்லது ஜப்பான் அல்லது நேபாளம் அணி விளையாடும். குரூப் சுற்று முடிந்த பிறகே இந்தியாவின் காலிறுதி எதிரணி யார் என்பது உறுதியாகும்.

இந்தியா - ஜப்பான் போட்டி ஏற்கனவே நடந்ததே?

இங்குதான் பலருக்கும் குழப்பம் நிலவுகிறது. செப்டம்பர் 22 ஆம் தேதி இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையே ஒரு டி20 போட்டி நடைபெற்றது. ஆனால் அது ஆசிய விளையாட்டு போட்டியின் ஒரு போட்டி கிடையாது. இரு நாடுகளின் தூதரக உறவுகளின் 75 வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த சிறப்பு டி20 போட்டி நடத்தப்பட்டது, மழை காரணமாக போட்டி 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 ஓவர்களில் 32 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஜப்பான் 30 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே, செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - ஜப்பான் போட்டியையும், செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு காலிறுதியையும் ஒன்றாக குழப்பிக்கொள்ளக்கூடாது.

ஆசிய விளையாட்டில் மீண்டும் இந்தியா - ஜப்பான் மோதுமா?

குரூப் ஏ-வில் ஜப்பான் இரண்டாவது இடம் பிடித்தால், அந்த அணி காலிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ளும். அதனால் செப்டம்பர் 22ல் நடைபெற்ற சிறப்பு டி20 போட்டிக்கு சில நாட்களிலேயே, இந்தியா - ஜப்பான் மீண்டும் மோதும் சூழல் உருவாகலாம். ஆனால் ஜப்பான் குரூப் ஏ-வில் இரண்டாவது இடத்தை பிடிக்காவிட்டால், இந்தியாவின் காலிறுதி எதிரணி ஆப்கானிஸ்தான் அல்லடு நேபாளமாக இருக்கலாம்.

இந்தியா வென்றால் அடுத்து யார்?

இந்தியா செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறும் காலிறுதியில் வெற்றி பெற்றால், அடுத்ததாக அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியாவின் போட்டி பாதையில் இலங்கை மற்றும் குரூப் ஏ-வில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு இடையிலான காலிறுதி போட்டியின் வெற்றியாளர் அடுத்த சுற்றில் எதிரணியாக வரக்கூடிய நிலை உள்ளது.

இதனால் இந்தியா இறுதி போட்டிக்கு செல்ல வேண்டுமென்றால், முதலில் செப்டம்பர் 28 காலிறுதியிலும், பின்னர் அக்டோபர் 1ம் தேதி நடைபெறும் அரையிறுதியிலும் வெற்றி பெற வேண்டும்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

ஆசிய விளையாட்டு போட்டியின் பிராக்கெட்டிபடி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் காலிறுதி அல்லது அரையிறுதி சுற்றிலேயே மோதும் வகையில் இடம்பெறவில்லை. இரு அணிகளும் தங்களது போட்டிகளில் வெற்றி பெற்று முன்னேறினால், அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் வாய்ப்பு உள்ளது.

சுருக்கமாக

செப்டம்பர் 28: ஆசிய விளையாட்டு காலிறுதி - இந்தியா vs குரூப் ஏ-வில் 2வது இடம் பிடிக்கும் அணி.

இந்தியாவின் சாத்தியமான எதிரணி: ஆப்கானிஸ்தான் / ஜப்பான் / நேபாளம்.

அக்டோபர் 1: அரையிறுதி போட்டி

அக்டோபர் 3: இறுதி போட்டி

எனவே, செப்டம்பர் 28 ஆம் தேதி இந்தியா யாரை எதிர்கொள்ளும் என்பது குரூப் ஏ போட்டிகளின் முடிவில்தான் தெரியவரும். குறிப்பாக ஜப்பான் இரண்டாவது இடத்தை பிடித்தால், இந்தியா - ஜப்பான் அணிகள் ஆசிய விளையாட்டு போட்டியிலும் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer