Asian Games 2026, Men's Cricket : ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுத் தொடரின் ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றது.
📸 𝗠𝗮𝗿𝗰𝗵𝗶𝗻𝗴 𝗶𝗻𝘁𝗼 𝘁𝗵𝗲 𝗙𝗶𝗻𝗮𝗹 🏅
A commanding 1️⃣2️⃣4️⃣-run victory in the semi-final takes #TeamIndia into the Gold Medal match on Saturday 🇮🇳
Scorecard ▶️ https://t.co/DjHV9q6htT#AsianGames pic.twitter.com/kr6h7UlyyG— BCCI (@BCCI) October 1, 2026
இன்று நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டியில் வெல்லும் அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றும்.
இன்று நடந்த 2வது அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இஷான் கிஷன் மட்டுமே ஜொலித்தனர். சூர்யவன்ஷி 21 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர் என 38 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
இஷான் கிஷன் 46 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் என 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 13 ரன்களை எடுத்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை அடித்தது.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 9.5 ஓவர்களில் 45 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக நுவானிடு பெர்னாண்டோ 15 ரன்களை அடித்தார். 5 பேர் டக்அவுட்டாகினர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களையே எடுத்தனர். இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் ப்டடேல், அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
முன்னதாக முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நடப்பு சாம்பியனான இந்திய அணி மீண்டும் தங்கப் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதிப்போட்டி வரும் அக்டோபர் 3ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற இருக்கும். இப்போட்டி அன்று காலை 10 மணிக்கு நடைபெறும். அன்று அதிகாலை 5.30 மணிக்கு 3வது இடத்திற்கான (வெண்கலப் பதக்கம்) போட்டி நடைபெறும். இதில் வங்கதேசம் - இலங்கை அணிகள் மோத உள்ளன.
ஆசிய விளையாட்டுத் தொடர் வரும் அக்டோபர் 4ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளை SonyLiv தளத்திலும், செயலியிலும் நேரலையில் காணலாம். Sony Sports சேனல்கள் மூலம் தொலைக்காட்சியில் காணலாம்.
ஜப்பானில் ஆசிய விளையாட்டுத் தொடர் இறுதிப்போட்டி நடைபெறும் அன்றைய தினம், இந்தியாவில் இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெற இருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டி காலை 10 மணிக்கும், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி மதியம் 2 மணிக்கும் தொடங்கும்.