IND vs WI 2nd ODI, Gautam Gambhir: இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஓடிஐ போட்டி கௌகாத்தியில் நேற்று (செப்டம்பர் 30) பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
முதல் போட்டியை போன்று இப்போட்டியிலும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. 133 பந்துகளில் 223 ரன்களை குவித்த இந்திய கேப்டன் சுப்மான் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், "(போட்டி குறித்து) முற்றிலும் நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் பேட்டிங்கிற்கும் பந்துவீச்சுக்கும் இடையே இன்னும் கொஞ்சம் போட்டி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஏனென்றால், நீங்கள் கிரிக்கெட்டைப் பற்றி பேசுகிறீர்கள்... ஆனால், இது கிரிக்கெட் அல்ல, இது வெறும் பேட்டிங் மட்டுமே. இந்த ஆடுகளத்தில் ஒரு இளம் பந்துவீச்சாளர் பந்துவீசுவதையும், எதிரணி 400 ரன்களை எடுப்பதையும், பின்னர் நாம் அந்த 400 ரன்களை சேஸிங் செய்வதையும் கற்பனை செய்து பாருங்கள்.
4️⃣0️⃣6️⃣ reasons to NEVER count this team out 💙🫡
Watch the Highlights ▶️ https://t.co/em3SzwX98T#TeamIndia | #INDvWI | @mflone_ pic.twitter.com/jpMTZScNi6— BCCI (@BCCI) September 30, 2026
வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், சாதனைகளுக்கு இது சிறப்பாக இருக்கும்; ரசிகர்களுக்கு சிறப்பாக இருக்கும்; ஒளிப்பரப்பு செய்பவருக்கு சிறப்பாக இருக்கும். ஆனால், ஒரு உண்மையான கிரிக்கெட் ரசிகனாகவும், ஒரு பயிற்சியாளராகவும் நீங்கள் என்னிடம் கேட்டால், நான் பந்துவீச்சாளர்கள் மீதும் அனுதாபம் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற ஆடுகளத்தில் பந்துவீசும்போது அது பந்துவீச்சாளர்களுக்கு நியாயமானதாக இல்லை. எனவே, பந்துவீச்சாளர்கள் செயல்படுவதற்கு குறைந்தபட்சம் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும் என்பதற்காக, நாம் அவர்களுக்கு ஏதாவது சாதகத்தை அளிக்க வேண்டும்" என பேசியிருந்தார்.
பந்துவீச்சாளர்கள் வெறும் புள்ளிவிவரங்களால் மதிப்பிடாமல், திட்டங்களை அவர்கள் எவ்வாறு செயல்படுத்தினார்கள் என்பதை வைத்தே கணிக்க வேண்டும் என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். தற்காலிக பேட்டிங் சூழலில் அவர்களுக்கு ஆதரவு அவசியம்.
உலகக் கோப்பை போன்ற அழுத்தங்களை எதிர்கொள்ள, சம்பிரதாயமற்ற போட்டிகளில் அல்லாமல், தொடரை வெல்லும் நெருக்கடியான சூழல்களிலேயே ஆகிப் நபி, குர்னூர் பிரர் போன்ற இளம் வீரர்களுக்குக் கடினமான ஓவர்களை வழங்கிப் பழக்குவது இந்திய அணிக்கு உதவும் என்றார்.
மேலும் 2027 உலகக் கோப்பையில் இந்திய அணி பிளான் குறித்த கேள்விக்கு, "இன்னும் ஒரு வருடம் இருக்கிறது என சொன்னீர்கள். ஆனால், ஒரு வருடத்தில் ஐபிஎல் தொடருக்கு மூன்று மாதங்களும், இந்தியா - ஆஸ்திரேலியா (டெஸ்ட்) தொடருக்கு மூன்று மாதங்களும் ஆகும்.
எனவே, நடப்பு தொடருக்கு பிறகு, சுமார் 20 ஒருநாள் போட்டிகளிலேயே இந்தியா விளையாடும். 20 ஒருநாள் போட்டிகள் என்பது உண்மையில் அதிக எண்ணிக்கையல்ல. அதில் இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகளும்; ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 போட்டிகளும் அடங்கும். அதிக நேரம் இல்லை என நினைக்கிறேன்
எனவே, நாம் என்ன திட்டமிட்டாலும், என்னென்ன வாய்ப்புகளைத் தயாரித்தாலும், அதை முடிந்தவரை விரைவாகச் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக, ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்தியாவுக்கு என்னென்ன ஆப்ஷன்கள் இருந்தாலும், நமது இந்த பரந்த கண்ணோட்டத்தில் எந்த ஸ்குவாட் தயாராக இருந்தாலும், ஐபிஎல் தொடருக்கு பிறகுதான் அவர்களை விளையாட வைப்போம்.
எனவே, வெவ்வேறு ஆப்ஷன்களை முயற்சித்துப் பார்க்க இதுவே சரியான நேரம். இன்று ஆகிப் நபிக்கு வாய்ப்பு கிடைத்தது போலவே, ஜிம்பாப்வே தொடர் முடியும்வரை, மற்றவர்களுக்கும் வாய்ப்பளித்து, இந்த பார்மட்டில் அவர்களால் எவ்வாறு பங்களிக்க முடியும் என்று பார்க்க முயற்சிப்போம்" என்றார்.