• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /ஹர்திக் பாண்டியா வேண்டாம்... CSK இந்த 3 வீரர்களை வாங்க பிளான் போடலாம்...!

ஹர்திக் பாண்டியா வேண்டாம்... CSK இந்த 3 வீரர்களை வாங்க பிளான் போடலாம்...!

Chennai Super Kings : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை பெறுவதற்கு பதில், இந்த மூன்று வீரர்களை மற்ற அணிகளிடம் இருந்து டிரேட் செய்ய முயற்சிக்கலாம். இதன்மூலம் சிஎஸ்கேவின் பலவீனங்கள் குறையும்.

Written BySudharsan G
Published: Aug 09, 2026, 05:31 PM IST|Updated: Aug 09, 2026, 05:44 PM IST
joinshare
ஹர்திக் பாண்டியா வேண்டாம்... CSK இந்த 3 வீரர்களை வாங்க பிளான் போடலாம்...!

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தாராபுரத்தில் தவெக வெற்றி; குறைந்தது வெற்றி வித்தியாசம் - 3வது இடத்தில் அதிமுக

தாராபுரத்தில் தவெக வெற்றி; குறைந்தது வெற்றி வித்தியாசம் - 3வது இடத்தில் அதிமுக

2

57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

3

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

4

பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

5

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chennai Super Kings : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த மூன்று ஆண்டுகளாகவே கடுமையாக தடுமாறி வருகிறது. 2023ஆம் ஆண்டில் தோனி தலைமையில் 5வது ஐபிஎல் கோப்பையை வென்ற பின்னர் கடுமையான சரிவை சந்தித்துள்ளன.

சிஎஸ்கேவின் கடந்த 3 ஆண்டுகள்

  • 2024 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்கிய சிஎஸ்கே 5வது இடத்தில் நிறைவு செய்தது.
  • 2025 தொடரில் ருதுராஜ் காயம் காரணமாக பாதியில் விலக, தோனி மீதி போட்டிகளில் கேப்டனாக இருந்தார்.
  • ஆனாலும் சிஎஸ்கே கடைசி இடத்தில்தான் முடித்தது. 2026இல் ருதுராஜ் தலைமையில் சிஎஸ்கே 8வது இடத்தில் நிறைவு செய்தது.

    சீசன்நிறைவு செய்த இடம்கேப்டன்
    20245வது இடம் ருதுராஜ் கெய்க்வாட்
    202510வது இடம்ருதுராஜ், தோனி
    20268வது இடம் ருதுராஜ் கெய்க்வாட்

2027இல் சிஎஸ்கே எப்படி இருக்கும்...?

  • சஞ்சு சாம்சன் வருகையால் கடந்த ஆண்டே சிஎஸ்கே வலுபெற்றது. ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரெவிஸ், சிவம் தூபே, உர்வில் பட்டேல், அன்சுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன், அகேல் ஹொசன் உள்ளிட்ட சிறப்பான வீரர்கள் அணியில் இருக்கிறார்கள்.
  • தோனி விளையாடுவாரா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. கடந்தாண்டு ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
  • 2008ஆம் ஆண்டில் இருந்து தோனி இதுபோல் விளையாடாமல் இருந்ததே இல்லை. தற்போது ஸ்டீபன் பிளமிங் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகியிருப்பதால் தோனி வீரராக தொடர்வாரா அல்லது பயிற்சியாளர் பொறுப்புக்கு வருவாரா என்பதும் கேள்வியாக உள்ளது.

CSK are looking for a foreign Head Coach who prefers to stay away from the spotlight, media attention and unnecessary statements.
Basically, they want someone with the same low-key approach as Stephen Fleming.
(Rohit Juglan / Revsportz) pic.twitter.com/qvMJwo4LZW

— Thala Nation.07 (@THA7A_Forever) August 9, 2026

ஹர்திக் பாண்டியா டிரேட்

இந்தச் சூழலில்தான், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியாவை சிஎஸ்கே அணி டிரேட் மூலம் பெற முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

சிவம் தூபே, டிவால்ட் பிரெவிஸ் உள்ளிட்ட வீரர்களை கொடுத்து ஹர்திக் பாண்டியாவை வாங்கும் ஐடியாவில் சிஎஸ்கே இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், அஸ்வின் போன்றவர்கள் தூபேவை சிஎஸ்கே டிரேட் செய்யக்கூடாது என்றும் அவரை போன்று ஒரு வீரர் கிடைப்பது அரிதும் என்றும் பேசியிருக்கிறார்கள். தூபே இடது கை பேட்டர் மற்றும் மீடியம் பேஸ் பௌலரும் ஆவார்.

ஹர்திக் பாண்டியாவை பெற கேகேஆர் அணியும் போட்டிப் போட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. அப்படியிருக்க, சிஎஸ்கே அணி பாண்டியாவை பெறுவதற்கு பதில் இந்த மூன்று வீரர்களை முயற்சித்தால் ஓரளவு பயன் கிடைக்கும். அவர்கள் யார் யார் இங்கு காணலாம்.

1. சாய் கிஷோர்

  • குஜராத் டைட்டன்ஸ் அணியின் இடது கை ஸ்பின்னரான சாய் கிஷோர் ஏற்கெனவே சிஎஸ்கே அணியோடு பயணித்தவர். இவர் ஆல்-ரவுண்டரும் ஆவார்.
  • ஜடேஜா இல்லாத இடத்தில் ரூ.14.20 கோடிக்கு இளம் வீரரான பிரசாந்த் வீரை சிஎஸ்கே எடுத்தது. இந்த முறை இவரை தக்கவைக்குமா என தெரியவில்லை. எனவே சாய் கிஷோரை டிரேட் செய்ய முன்வரலாம்.
  • குஜராத் அணிக்கு தேவையான டாப் ஆர்டர் அதிரடி வீரரான உர்வில் பட்டேலை கொடுத்து கூட சாய் கிஷோரை பெறலாம். ஆனால் குஜராத் டிரேடுக்கு தயாராக இல்லை என கூறப்படுகிறது.

2. நிதிஷ் குமார் ரெட்டி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிச்சயம் இவரை டிரேட் செய்யவே செய்யாது என்றாலும் சிஎஸ்கே அணி ஹர்திக் பாண்டியாவுக்கு முயற்சிக்கும் வேளையில் இவரை முயற்சிக்கலாம்.

ஹைதராபாத் அணிக்கு நல்ல இந்திய பௌலர் தேவை. கலீல் அகமது அல்லது அன்சுல் கம்போஜ்ஜை கொடுத்து கூட நிதிஷ் குமாரை ரெட்டி கேட்கலாம். 

கூடவே ஷ்ரேயாஸ் கோபால் போன்ற இந்திய சுழற்பந்துவீச்சாளரையும் கொடுத்தும் டிரேட் செய்யலாம். ஆனால் இந்த டிரேட் கடினமான ஒன்றுதான்.

3. ஹர்ஷித் ராணா

  • கேகேஆர் அணியும் ஹர்ஷித் ராணாவை இப்போதைக்கு விடவே விடாது. இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக வளர்ந்து வருகிறார்.
  • சேப்பாக்கத்திற்கு ஏற்ற வீரர் ஹர்ஷித் ராணா. புதிய பந்திலும், டெத் ஓவர்களிலும் பந்துவீசக்கூடியவர் என்பதால் ஹர்ஷித் ராணா சிஎஸ்கே அவசிய தேவை.
  • எனவே, சிவம் தூபே மற்றும் கலீல் அகமது/அன்சுல் கம்போஜை கொடுத்து ஹர்ஷித் ராணாவை வாங்க சிஎஸ்கே முயற்சிக்கலாம்.
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த மூன்று வீரர்களையும் டிரேட் மூலம் பெறுவது 1% மட்டுமே சாத்தியம் எனலாம். இருப்பினும், அந்த வாய்ப்பையும் சிஎஸ்கே தவறவிடக்கூடாது.
Add Zee News as a Preferred Source
TAGS:
IPL