• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /நோ-பால் போட்டால் Free Hit ஏன்? கிரிக்கெட்டின் இந்த Rule எப்படி வந்தது? Explained

நோ-பால் போட்டால் Free Hit ஏன்? கிரிக்கெட்டின் இந்த Rule எப்படி வந்தது? Explained

கிரிக்கெட்டில் நோ-பால் வீசினால் Free Hit வழங்குவது வழக்கம். இது நாம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று. ஆனால் இந்த ரூல்ஸ் எப்படி வந்தது. பவுலர் Wide வீசினால் இதுபோன்ற ரூல்ஸ் இல்லையே? அது ஏன் நோ-பால் வீசினால் மட்டும் Free Hit? இது குறித்தே இத்தொகுப்பில் தெரிந்துக்கொள்ள இருக்கிறோம்.

Written ByR Balaji
Published: Sep 06, 2026, 15:32 IST|Updated: Sep 06, 2026, 15:40 IST
joinshare
நோ-பால் போட்டால் Free Hit ஏன்? கிரிக்கெட்டின் இந்த Rule எப்படி வந்தது? Explained

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கிரிக்கெட் போட்டிகளில் ஒரு பவுலர் நோ-பால் வீசும்போது, அதற்கான கூடுதல் ரன் மட்டுமின்றி அடுத்த பந்தில் பேட்டருக்கு Free Hit வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இது பேட்ஸ்மேனுக்கு பெரிய ஷாட் ஆடும் வாய்ப்பை உருவாக்கி அந்த அணிக்கு ரன்களையும் அதிகமாக்கிகொள்ள உதவுகிறது. ஆனால் நோ-பாலுக்கு மட்டும் ஏன் இந்த சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது? அதுவே பவுலர் Wide வீசும்போது ஏன் Free Hit வழங்கப்படுவதில்லை? இந்த விதி எப்போது கொண்டுவரப்பட்டது? இந்த Free Hit ரூல் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இங்கே.

நோ-பால் என்றால் என்ன?

Free Hit விதி குறித்து புரிந்துகொள்வதற்கு முன்பாக, முதலில் நோ-பால் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துக்கொள்வது அவசியம். அதாவது ஒரு பவுலர் கிர்க்கெட் விதிகளுக்கு மாறாக பந்தை வீசும்போது அது நோ-பாலாக அறிவிக்கப்படுகிறது. பவுலர் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட கோட்டிற்கு முன்பு காலை வைத்துதான் பந்துவீச வேண்டும் என்பது விதி. ஆனால் அதனை அவர் மீறும்போது அது நோ-பாலாக மாறுகிறது. அது ஓவரின் 6 பந்துகளில் ஒன்றாக கணிக்கிடப்படாது.

நோ-பாலுக்கு ஏன் Free Hit?

நோ-பால் என்பது பந்து வீச்சாளர் தரப்பில் ஏற்படும் ஒரு விதிமீறலாகும். இதனால் பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் ரன் வழங்கப்படுவதுடன், அடுத்த பந்தில் பேட்டருக்கு Free Hit வாய்ப்பும் கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் விதிமீறலால் ஏற்பட்ட சாதகமற்ற நிலைக்கு பேட்டிங் அணிக்கு ஒரு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Free Hit பந்தில் பேட்டர் சாதாரண முறையில் Bowled, Caught, LBW, Stumped உள்ளிட்ட dismissal முறைகளில் அவுட் ஆக முடியாது. இருப்பினும், Run Out உள்ளிட்ட சில வழிகளில் விக்கெட்டை இழக்க முடியும். இதனால் Free Hit பந்து வந்தாலே பேட்டர்கள் அதிக ரிஸ்க் எடுத்து பெரிய ஷாட்களை விளையாட முயற்சிப்பார்கள்.

Free Hit விதி எப்போது உருவானது?

இன்று சர்வதேச கிரிக்கெட்டில் முக்கியமான விதிகளில் ஒன்றாக இருக்கும் இந்த Free Hit விதி கிரிக்கெட்டின் ஆரம்ப கட்டத்தில் கிடையாது. இந்த விதியானது குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகள் வேகமாக பிரபலமடைந்த காலகட்டத்தில்தான் அறிமுகமானது.

நோ-பால் வீசுவதன் மூலம் பவுலர் விதிமீறல் செய்வதால், அதற்கான தண்டனையாக கூடுதல் ரன் வழங்கப்படுவது ஏற்கனவே நடைமுறையில் இருந்தது. ஆனால் பேட்டருக்கு அடுத்த பந்தில் விக்கெட் இழக்காமல் பெரிய ஷாட் ஆடும் ஒரு வாய்ப்பை வழங்கும் Free Hit விதி பின்னர் தான் கொண்டுவரப்பட்டது.

இந்த விதியின் முக்கிய நோக்கம், பவுலர்கள் நோ-பால் வீசுவதை கட்டுப்படுத்துவதும், அதே நேரத்தில் நோ-பாலால் பாதிக்கப்பட்ட பேட்டிங் அணிக்கு கூடுதல் வாய்ப்பை வழங்குவதுமாகும். குறிப்பாக T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒரு பந்து கூட ஆட்டத்தின் முடிவை மாற்றக்கூடியதாக இருப்பதால், Free Hit விதி போட்டிகளில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விதியானது 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் பந்து வீச்சாளர் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட கோட்டை தாண்டி காலை வைத்து வீசும் பந்துக்குதான் Free Hit கொடுக்கப்பட்டது. பின்னர் 2015 ஆம் ஆண்டில்தான் அனைத்து வகையான நோ-பாலுக்கும் (அதாவது டாஸாக இடுப்புக்கு மேல் வீசப்படும் பந்து, தலைக்கு மேல் வீசப்படும் பவுன்ஸ் பந்துக்கு) Free Hit வழங்கப்பட்டது.

Free Hit-ல் பேட்டர் எப்படி அவுட் ஆகலாம்?

Free Hit என்றாலே பேட்டரை அவுட்டாக்க முடியாது என்று நினைக்கக் கூடாது. அந்த பந்தில் சாதாரணமாக Bowled, Caught, LBW, Stumped போன்ற முறைகளில்தான் பேட்டரை அவுட் செய்ய முடியாது. நோ-பால் பந்துக்கு பொருந்தும் dismissal விதிகளே Free Hit பந்துக்கும் பொருந்தும்.

ஆனால், பேட்டர் ரன் எடுக்க ஓடும்போது Run Out செய்யப்படலாம். அதேபோல், பந்தை இரண்டு முறை அடிப்பது அல்லது Fielding-ஐ தடுத்தல் போன்ற சில குறிப்பிட்ட விதிமீறல்களிலும் விக்கெட் விழ வாய்ப்பு உள்ளது. எனவே Free Hit என்பது “அவுட்டே ஆக முடியாது” என்பதல்ல. குறிப்பிட்ட சில dismissal முறைகளில் மட்டுமே பேட்டருக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

Free Hit பந்தும் No Ball ஆகிவிட்டால்?

Free Hit பந்தும் No Ball ஆகிவிட்டால் என்ன நடக்கும்? Free Hit பந்தையும் பவுலர் மீண்டும் நோ-பாலாகவோ அல்லது Wide ஆக வீசினால் அந்த பந்து மீண்டும் Free Hit ஆகவே கருதப்படும். பவுலர் அந்த பந்தை சரியாக வீசும்வரை Free Hit தொடரவே செய்யும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் Free Hit கிடையாது

இந்த Free Hit ரூல்ஸ் என்பது டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த விதி கிடையாது. டெஸ்ட் போட்டிகளில் ஒரு பந்து வீச்சாளர் நோ-பால் வீசினால் எதிரணிக்கு ஒரு ரன் மட்டும் ரீ பால் மட்டுமே உண்டே தவிர்த்து Free Hit கிடையாது. இது ஒரு லாங் ஃபார்மெட் என்பதால் இந்த வடிவில் இந்த ரூல்ஸை மாற்றாமல் வைத்துள்ளனர். Free Hit முழுக்க முழுக்க டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலேயே எதிரொலிக்கும். இந்த வடிவ கிரிக்கெட் போட்டிகள் ஒரு பந்தில் கூட ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும் என்பதால் Free Hit மிகவும் சுவாரஸ்யமாக அமைகிறது.

அதிக நோ-பால் வீசிய டாப் 5 பவுலர்கள்

  1. பிரெட் லீ - 472 பந்துகள்
  2. பிடெல் எட்வர்ட்ஸ் - 325 பந்துகள்
  3. இஷாந்த் சர்மா - 314 பந்துகள்
  4. ஜாகீர் கான் - 299 பந்துகள்
  5. ஷான் பொல்லாக் - 289 பந்துகள்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், 'ஃப்ரீ ஹிட்' என்பது வெறும் கூடுதல் ரன்னுக்கான சலுகை மட்டுமல்ல; கிரிக்கெட்டின் வேகத்தையும், விறுவிறுப்பையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற ஒரு மாபெரும் விதி. பந்துவீச்சாளர்களின் சிறிய கவனக்குறைவு ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றிவிடும் என்பதை உணர்த்தி, அவர்களின் துல்லியத்தன்மையை இந்த விதி தொடர்ந்து சோதிக்கிறது. அதே வேளையில், ரசிகர்களுக்கு சிக்ஸர் மழையும், பேட்டர்களுக்கு அச்சமற்ற ஆட்டமும் கிடைப்பதால் குறுகிய வடிவ கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக ஃப்ரீ ஹிட் இன்று நிலைத்து நிற்கிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket