• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /CSK-வில் இருந்து வெளியேறும் ஷிவம் துபே? என்ன காரணம்? முழு விவரம்

CSK-வில் இருந்து வெளியேறும் ஷிவம் துபே? என்ன காரணம்? முழு விவரம்

CSK Latest News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலீல் அகமதுவை தொடர்ந்து ஷிவம் துபேவும் வெளியேற விரும்புகிறாராம். அவர் யார்? என்ன காரணத்தினால் அவ்வாறு நினைக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

Written ByR Balaji
Published: Aug 23, 2026, 10:18 AM IST|Updated: Aug 23, 2026, 10:34 AM IST
joinshare
CSK-வில் இருந்து வெளியேறும் ஷிவம் துபே? என்ன காரணம்? முழு விவரம்

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

2

பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

3

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

4

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

5

உலக கெட்டில்பெல் சாம்பியன்ஷிப்: தங்கம், வெள்ளி வென்று கோவையைச் சேர்ந்த அமுதினி வசந்தி சாதனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஐபிஎல் 2027 சீசனுக்கான அணியை பலப்படுத்தும் வேலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தீவிரமாக இறங்கி உள்ளது. குறிப்பாக, ஏலத்தை மட்டும் நம்பாமல், டிரேடிங் மூலம் தேவையான வீரர்களை அணிக்குள் கொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் மூலம் சிஎஸ்கேவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த முயற்சி கைகூடாத நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியில் உள்ள வாஷிங்டன் சுந்தரை வாங்குவதற்கான முயற்சியில் சிஎஸ்கே நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருபுறம் அணியின் பலவீனங்களை சரிசெய்ய புதிய வீரர்களை வாங்க சிஎஸ்கே முயற்சி செய்து வரும் நிலையில், மறுபுறம் அணியில் உள்ள சில வீரர்களே வெளியேற விருப்பம் தெரிவித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

கலீல் அகமது

சிஎஸ்கே அணிக்காக கடந்த சீசனில் விளையாடிய கலீல் அகமது, தனது எதிர்காலம் தொடர்பாக அணியிடம் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சிஎஸ்கே அவரை ரூ.4.80 கோடிக்கு வாங்கியிருந்தது. ஆனால், 2026 சீசனில் ஆரம்ப போட்டிகளுக்குப் பிறகு காயம் காரணமாக அவர் அணியில் இருந்து விலகினார். காயத்தில் இருந்து மீண்டு கடைசி கட்டத்தில் அணிக்குத் திரும்பியபோதும், அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால், அணியில் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதாக நினைக்கும் கலீல் அகமது, அதிக தொகைக்கு தன்னை தக்கவைக்க வேண்டும் அல்லது டிரேடிங் மூலம் வேறு அணிக்கு அனுப்ப வேண்டும் என அவர் சிஎஸ்கே அணியிடம் கூறிவிட்டதாக கூறப்படுகிறது.

ஷிவம் துபேவும் வெளியேறுகிறாரா?

இந்த நிலையில், கலீல் அகமதுவை தொடர்ந்து, சிஎஸ்கே அணியின் முக்கிய ஆல்-ரவுண்டரான ஷிவம் துபேவும் டிரேடிங்கில் வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

சிஎஸ்கே அணியில் தனக்கு பெரும்பாலும் பேட்டிங் வாய்ப்பு மட்டுமே வழங்கப்படுவதாகவும், பந்துவீச்சில் தனது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு சரியாக கிடைப்பதில்லை என்றும் துபே அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில், தன்னிடம் ஆலோசனை செய்யாமல் தன்னை டிரேடிங் பேச்சுவார்த்தையில் பயன்படுத்த சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்படுவதும் அவரது அதிருப்திக்கு மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது.

இதனால், தன்னை டிரேடிங் மூலம் வேறு அணிக்கு அனுப்ப வேண்டும் அல்லது ஏலத்தில் விட வேண்டும் என ஷிவம் துபே தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேட்டிங்கில் அசத்திய துபே

2026 ஐபிஎல் சீசனில் ஷிவம் துபேவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. அவர் 13 போட்டிகளில் 12 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து, 38.57 என்ற சராசரியுடன் 158.82 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 270 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸ்களில் 24 பவுண்டரிகளும், 15 சிக்ஸர்களும் அடங்கும். ஆனால், பந்துவீச்சை பொறுத்தவரை அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

13 போட்டிகளில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே அவர் பந்துவீசினார். அந்த மூன்று போட்டிகளிலும் தலா ஒரு ஓவர் மட்டுமே வீசினார். இதற்கு மாறாக, இந்திய டி20 அணியில் இடம்பெறும் போது துபேவின் பந்துவீச்சு திறமையும் பயன்படுத்தப்படுகிறது. சில போட்டிகளில் அவருக்கு குறைந்தது 2 ஓவர்கள் வரை வழங்கப்பட்டுள்ளன.

இதனால், சிஎஸ்கேவில் தனது ஆல்-ரவுண்டர் திறமை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற எண்ணம் துபேவுக்கு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஏலத்திற்கு சென்றால் என்ன நடக்கும்?

ஷிவம் துபே டிரேடிங் அல்லது ஏலத்திற்கு கிடைக்கும் பட்சத்தில், அவரை வாங்க பல அணிகள் ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இடது கை பேட்டிங், அதிரடி ஆட்டம் மற்றும் தேவையான நேரத்தில் பந்துவீசும் திறன் ஆகியவை அவருக்கு கூடுதல் மதிப்பை கொடுக்கின்றன.

குறிப்பாக, இந்திய வீரர் என்ற அடையாளமும், டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடக்கூடிய ஆல்-ரவுண்டர் என்ற சிறப்பும் இருப்பதால், ஏலத்தில் அவருக்கான போட்டி அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், துபேவை சிஎஸ்கே தக்கவைக்குமா, டிரேடிங்கில் வேறு அணிக்கு அனுப்புமா அல்லது ஏலத்திற்கு விடுமா என்பதுதான் தற்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாக மாறியுள்ளது.

ஒருபுறம் புதிய வீரர்களை தேடும் சிஎஸ்கே, மறுபுறம் தனது முக்கிய வீரர்களை இழக்கும் சூழ்நிலையை எதிர்கொண்டால், ஐபிஎல் 2027 அணிக்கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL