• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /Ranji Trophy: தமிழ்நாடு அணி மிரட்டல் வெற்றி... சுருண்டது உத்தரகாண்ட் - சாய் கிஷோர் ஹாட்ரிக்

Ranji Trophy: தமிழ்நாடு அணி மிரட்டல் வெற்றி... சுருண்டது உத்தரகாண்ட் - சாய் கிஷோர் ஹாட்ரிக்

ரஞ்சி கோப்பை தொடரில் உத்தரகாண்ட் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. இன்னிங்ஸ் வெற்றியால் 7 புள்ளிகளை பெற்று தமிழ்நாடு அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.

Written BySudharsan G
Published: Oct 20, 2026, 02:34 PM IST|Updated: Oct 20, 2026, 02:45 PM IST
joinshare
Ranji Trophy: தமிழ்நாடு அணி மிரட்டல் வெற்றி... சுருண்டது உத்தரகாண்ட் - சாய் கிஷோர் ஹாட்ரிக்
Image Credit: Tamil Nadu vs Uttarakhand, Ranji Trophy Match at Chennai | Image Source : X/@TNCACricket

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
CSK கேப்டனாக கே.எல். ராகுல்? ருதுராஜை கழற்டிவிட திட்டம்? என்ன நடக்குது?

CSK கேப்டனாக கே.எல். ராகுல்? ருதுராஜை கழற்டிவிட திட்டம்? என்ன நடக்குது?

2

Ranji Trophy: தமிழ்நாடு அணி மிரட்டல் வெற்றி... சுருண்டது உத்தரகாண்ட் - சாய் கிஷோர் ஹாட்ரிக்

3

வட கொரிய அதிபர் மரணம்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு! இது உண்மையா?

4

அண்ணன் சீர் திட்டம்: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்!

5

ஈரோட்டில் நர்ஸ் கொல்லப்பட்டது எப்படி? நகைக்காக சக ஊழியர் செய்த கொடூரம்.. விசாரணையில் பகீர்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Ranji Trophy 2026-27, Tamil Nadu vs Uttarakhand: ரஞ்சி கோப்பை 2026-27 சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டாம் சுற்று போட்டிகள் கடந்த அக். 18ஆம் தேதி நாடு முழுவதும் 19 மைதானங்களில் தொடங்கின. Elite பிரிவில் 32 அணிகளும், Plate பிரிவில் 6 அணிகளும் மோதுகின்றன. அந்த வகையில் Elite D பிரிவில் தமிழ்நாடு - உத்தரகாண்ட் அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் சாய் கிஷோர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அக். 18ஆம் தேதி நள்ளிரவில் மேக வெடிப்பு ஏற்பட்டது போன்ற அதி கனமழை சென்னையில் பெய்திருந்தது. எனவே, முதல் நாள் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருக்கும் என்பதால் அதை சாதகமாக்கிக்கொள்ள தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசியது.

மேலும் படிக்க | ஷமி இல்லை.. இந்திய அணிக்கு திரும்பும் மூத்த வீரர்? கவாஸ்கர் சொன்ன முக்கிய மேட்டர்

கவனம் ஈர்த்த குர்ஜப்னீத் சிங்

அதற்கு பலனமும் கிடைத்தது. உத்தரகாண்ட் அணியை முதல் இன்னிங்ஸில் தேநீர் இடைவேளைக்கு முன்னரே ஆல்-அவுட்டாகினர், தமிழ்நாடு பௌலர்கள். உத்தரகாண்ட் அணி 134 ரன்களையே எடுத்தது. அதிகபட்சமாக அவ்னீஷ் சுதா 54 ரன்களையும், மயங்க் மிஸ்ரா 33 ரன்களையும் எடுத்தனர்.

தமிழ்நாடு பந்துவீச்சைப் பொருத்தவரை குர்ஜப்னீத் சிங் 13 ஓவர்களில் 3 மெய்டன்களை வீசி 34 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டை கைப்பற்றினார். இதில் முதல் மூன்று விக்கெட்டு டாப் ஆர்டர் பேட்டர்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஒருவேளை இவர் தொடர்ச்சியாக சிறப்பாக பந்துவீசும்பட்சத்தில் இந்திய அணிக்கு தேர்வாகவும் அதிக வாய்ப்புள்ளது.

At tea, Uttarakhand are bundled out for 134, with Tamil Nadu firmly in control! 🔥 #RanjiTrophy #TamilNaduCricket #TNCA #TNCricket https://t.co/HhQpT4HDoE

— TNCA (@TNCACricket) October 18, 2026

மீண்டும் சொதப்பிய ஜெகதீசன்

கேப்டன் சாய் கிஷோர் 18 ஓவர்களில் 5 மெய்டன்களுடன் 40 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். ஆப்-ஸ்பின்னர் ஹேம் சுதேசன் 1 விக்கெட்டையும் எடுத்திருந்தார். முதல் நாளிலேயே பேட்டிங்கை தொடங்கிய தமிழ்நாடு அணி 2 விக்கெட்டை இழந்தது. விமல் குமார் டக்அவுட்டான நிலையில், மூத்த வீரர் நாராயண் ஜெகதீசன் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மீண்டும் ஒருமுறை நல்ல தொடக்கம் கிடைத்தும், ஆப்-ஸ்பின்னரிடம் ஆட்டமிழந்து வெளியேறினார் ஜெகதீசன். ரிஷப் பண்ட், துருவ் ஜூரேல் ஆகியோருக்கு பேக்-அப் விக்கெட் கீப்பர் பேட்டராக குமார் குஷாக்ராவை பிசிசிஐ பார்க்கிறது. தொடர்ச்சியாக நல்ல தொடக்கம் கிடைத்தும் பெரியளவில் ரன்களை குவிக்காததன் காரணமாகவே இந்தியா ஏ ஸ்குவாடில் கூட ஜெகதீசன் இடம்பெறவில்லை. இந்த சீசனில் அவர் பெரிய சதங்களை அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதானம் காட்டிய பிரதோஷ் - இந்திரஜித் ஜோடி

இரண்டாம் நாள் முழுவதும் தமிழ்நாடு அணி பொறுமையாக ரன்களை சேர்த்தது. அதிலும் குறிப்பாக 3வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த பிரதோஷ் ரஞ்சன் பால் - இந்திரஜித் ஜோடி நிதானமாக விளையாடியது. பவுண்டரிகளும் சொற்பமாகவே வந்தன.

மேலும் படிக்க | ஐபிஎல் 2027 மினி ஏலம்... தேதி குறிச்சாச்சு... ரெடியாகும் 10 ஐபிஎல் அணிகள்

ஆனால், அங்கும் இங்கும் ஓரிரு ரன்களை எடுத்த ஸ்கோரை இந்த ஜோடி உயர்த்தியது. இடது கை பேட்டர் பிரதோஷ் ரஞ்சனுக்கு நெருக்கடி கொடுக்க அவ்னீஷ், வலது கை பேட்டர் இந்திரஜித்திற்கு இடது கை ஸ்பின்னர்கள் மயங்க் மிஸ்ரா, ஜெகதீஷா சுசித் ஆகியோர் தொடர்ச்சியாக பந்துவீசியும் இந்த ஜோடி மிக ஒழுக்கமான ஆட்டத்தை கடைபிடித்தனர்.

சறுக்கிய தமிழ்நாடு அணி

இந்திரஜித் அரைசதம் கடந்தார், பிரதோஷ் அவரது 9வது சதத்தை பதிவு செய்தார். இதற்கிடையே, உத்தரகாண்ட் அணி 81வது ஓவரில் புதிய பந்தை எடுத்ததும் இந்திரஜித் விக்கெட்டை மயங்க் மிஸ்ரா எடுத்தார். 217 பந்துகள் பேட்டிங் செய்து 77 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். எதிர்பார்க்காத வகையில் மிக தாழ்வாக வந்த பந்தில் இந்திரஜித் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இந்திரஜித் ஆட்டமிழந்த பின்னர் தமிழ்நாடு அணி தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்தது.

Tamil Nadu are in a strong position at the end of Day 2, as Uttarakhand finish on 9/1 in their second innings, trailing by 170 runs. 💪 #RanjiTrophy #TamilNaduCricket #TNCA #TNCricket https://t.co/209G65U3ks

— TNCA (@TNCACricket) October 19, 2026

83வது ஓவரில் இந்திரஜித் ஆட்டமிழந்த நிலையில், 109வது ஓவரில் தமிழ்நாடு அணி ஆல்-அவுட்டாகிவிட்டது. அடுத்து 26 ஓவர்களில் 78 ரன்களை மட்டும் எடுத்து 8 விக்கெட்டை தமிழ்நாடு இழந்தது. தமிழ்நாடு அணியின் பின் வரிசை பேட்டிங் மிக சுமாராக உள்ளது என்பதையே இது வெளிக்காட்டுகிறது. தமிழ்நாடு அணி 313 ரன்களில் ஆட்டமிழந்தது.

ஸ்பின்னர்கள் தொடுத்த தாக்குதல்

179 ரன்கள் முன்னிலை பெற்ற தமிழ்நாடு அணி நேற்று (அக். 19) மாலை 7 ஓவர்கள் மட்டும் பந்துவீசியது. சாய் கிஷோர் நேற்றே பிள்ளையார் சுழி போல் ஒரு விக்கெட்டை எடுத்து உத்தரகாண்டின் சரிவுக்கு வித்திட்டார். தொடர்ந்து இன்று மூன்றாவது நாளில் மழை காரணமாக ஆட்டம் 15 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.

ஆட்டம் தொடங்கியதில் இருந்து தமிழ்நாடு அணி விக்கெட் எடுக்கும் முனைப்பிலேயே இருந்தது. ஆடுகளம் கடுமையான தேய்மானம் அடைந்ததன் காரணமாக ஸ்பின்னர்களை வைத்து மட்டுமே சாய் கிஷோர் தாக்குதலை தொடுத்தார். குர்ஜப்னீத் சிங் நேற்று (அக். 19) ஒரு ஓவரும், இன்று 4 ஓவர்களை தொடக்கத்திலும் வீசினார். சரவண குமார் 3 ஓவர்களை மட்டும் வீசினார். அதன்பின் வேகப்பந்துவீச்சாளர்கள் முழுமையாக ரெஸ்ட் எடுத்தனர் என்றே சொல்லலாம்.

சாய் கிஷோருக்கு அவர் 'ஸ்பின் ட்வின்' அஜித் ராமும் கைக்கொடுத்தார். மதிய உணவு இடைவேளையில் உத்தரகாண்ட் அணி 5 விக்கெட்டை இழந்திருந்தது. மதிய உணவு இடைவேளைக்கு பின் 5வது ஓவரில் இருந்து தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்தன. சாய் கிஷோரும், அஜித் ராமும் சேர்ந்து உத்தரகாண்டை பொட்டலம் கட்டினார்கள்.

சாய் கிஷோர் ஹாட்ரிக்

அதிலும் கேப்டன் சாய் கிஷோர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். 43வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட் எடுத்து விரைவாக ஆட்டத்தை நிறைவு செய்ய வித்திட்டார். லக்ஷயா ராய்சந்தானி ஸ்வீப் அடிக்க முயன்று போல்டானார். அடுத்து விக்கெட் கீப்பர் சௌரப் ராவத் முதல் சிலிப்பில் இருந்த இந்திரஜித்திற்கும், ஆதித்யா ராவத் விக்கெட் கீப்பர் ஜெகதீஷனுக்கும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Sai Kishore strikes big with a 5️⃣-wicket haul, including a sensational hat-trick against Uttarakhand! 🔥 #RanjiTrophy #TamilNaduCricket #TNCA #TNCricket https://t.co/kqMNAa1VXm

— TNCA (@TNCACricket) October 20, 2026

அடுத்து 45ஓவரில் தேவேந்திர சிங் போரா விக்கெட்டை சாய் கிஷோர் எடுக்க, அடுத்த ஓவரிலேயே கடைசி விக்கெட்டாக மயங்க் மிஸ்ராவை அஜித் ராம் ஆட்டமிழக்கச் செய்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களில் உத்தரகாண்ட் அணி ஆட்டமிழந்தது. 

இதனால் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 7 புள்ளிகளை பெற்று, D பிரிவின் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டது. ஹாட்ரிக் விக்கெட் எடுத்த கேப்டன் சாய் கிஷோர் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட், 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் என மொத்தம் 10 விக்கெட்டை எடுத்து மிரட்டினார்.

தமிழ்நாடு அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்

இருப்பினும் மிகப் பொறுமையாக பேட்டிங் செய்து சதம் அடித்து, அணிக்கு பெரிய முன்னிலையை பெற்றுத் தந்த பிரதோஷ் ரஞ்சன் பால் ஆட்டநாயகன் விருதை வென்றார். முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் முதல் இன்னிங்ஸ் பின்னடைவு காரணமாக தமிழ்நாடு அணி 1 புள்ளியையே பெற்றிருந்தது.

தற்போது இந்த போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியால் மொத்தம் 8 புள்ளிகளுடன் தமிழ்நாடு அணி உத்தரகாண்ட், ரயில்வேஸ், இமாச்சல் பிரதேசம், சண்டிகர் அணிகளை புள்ளிப்பட்டியலில் முந்தியிருக்கிறது. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்தால் மட்டுமே காலிறுதி செல்ல முடியும் என்பதால் தமிழ்நாடு அணி அடுத்தடுத்த போட்டிகளில் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தமிழ்நாடு அணிக்கு அடுத்த போட்டி...

தமிழ்நாடு அணி அடுத்த போட்டியில் ரயில்வேஸ் அணியை சந்திக்கிறது. வரும் அக். 26ஆம் தேதி இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இப்போட்டியை காணவும் பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி உண்டு.

மேலும் படிக்க | இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்.. BCCI அறிவிப்பு!

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket