சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியை மறுகட்டமைக்க திட்டமிட்டு அதற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற நினைக்கும் ஹர்திக் பாண்டியாவை டிரேட் மூலம் வாங்க முயற்சித்தது. மும்பை நிர்வாகம் அவர்கள் ஆயூஷ் மாத்ரேவை கேட்டதால் பின்வாங்கினார். இதனால் ஹர்திக் பாண்டியாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு அனுப்ப மும்பை அணி பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் ஹர்திக் பாண்டியா, “நான் சென்றால் சிஎஸ்கே அணிக்குதான் செல்வேன்” என பிடிவாதம் பிடிக்கிறார். இதன் காரணமாக வேறு வழியின்றி மும்பை நிர்வாகம் மீண்டும் சிஎஸ்கே அணி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறதாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கியமாக ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை ஒரு தரமான வீரரை கொண்டு நிரப்ப வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர் சரியாக இருப்பார் என்று அவரை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கில் சிஎஸ்கே அணி உள்ளது. இதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணியிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. வாஷிங்டன் சுந்தரை தாருங்கள்.. பதிலுக்கு சர்பராஸ் கான் அல்லது உர்வில் படேல் இருவரில் ஒருவரை வாங்கிக்கொள்ளுங்கள் என கூறியதற்கு குஜராத் அணி எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தது.
இந்த நிலையில், வாஷிங்டன் சுந்தரை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு புது உக்தியை கையில் எடுத்துள்ளது. சுந்தரையே அழைத்து பேசி, அவருக்கு டாப் ஆர்டர் பேட்டிங், பந்து வீச்சில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அவரிடம் வாக்குறுதி கொடுக்க முடிவு செய்துள்ளனராம். அதாவது குஜராத் டைட்டன்ஸ் அணியில் வாஷிங்டன் சுந்தர், ரஷித் கான், சாய் கிஷோர், மனவ் சுதார் என தரமான வீரர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கே பிளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்கும். அதில் அவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தர் நிரந்தரமாக இடம் கிடைக்கும் சிஎஸ்கே அணிக்கே வர விரும்புவார் என தெரிகிறது. இவர் ஏலத்திற்கு செல்ல விரும்பினாலும் அவரை குஜராத் அணி விடுவிக்கவே செய்யும். இதனாலேயே சிஎஸ்கே அணி வாஷிங்டன் சுந்தரிடம் நேரடியாக பேச முடிவு செய்துள்ளது.
ரவீந்திர ஜடேஜா கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக ஆல்-ரவுண்டர் பணியை திறன்பட செய்துள்ளார். அவரது இடத்தை சட்டென ஒரு வீரர் நிரப்புவது கடினமே. அதற்கு நல்ல அனுபவம் தேவை. அவை சிஎஸ்கே வாங்க முயற்சிக்கும் வாஷிங்டன் சுந்தரிடம் உள்ளது. அவர் இந்தியாவுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போதைய டி20 அணியில் அவரும் ஒரு முக்கிய வீரராக இருந்து வருகிறார். ஜடேஜா பங்களிப்பை சுந்தரால் கொடுக்க முடியும் என சிஎஸ்கே நிர்வாகம் நம்புகிறது. அதனாலேயே அவரை வாங்க முயற்சிக்கிறது.
மேலும், ஐபிஎல் 2027 ஏலத்தில் சில முக்கிய வீரர்களை குறிவைத்து களமிறங்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை எப்படியாவது வாங்க வேண்டும் என்பதும் முக்கிய இலக்காக இருப்பதாக கூறப்படுகிறது.
டிரேடிங் மற்றும் ஏலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பொறுத்து வீரர்களை தேர்வு செய்வதை விட, குறிப்பிட்ட சில வீரர்களை மட்டுமே குறிவைத்து அணியை மறுகட்டமைக்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஹாரி ப்ரூக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும், அக்சர் படேல் கிடைத்தாலும் அவரது வயது மற்றும் அணியில் உள்ள தேவையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.