• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /அக்சர் படேலுக்கு CSK குறி? பதிலுக்கு 2 வீரர்கள்! யார் யார் பாருங்க!

அக்சர் படேலுக்கு CSK குறி? பதிலுக்கு 2 வீரர்கள்! யார் யார் பாருங்க!

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேலை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Written ByR Balaji
Published: Aug 28, 2026, 17:09 IST|Updated: Aug 28, 2026, 17:13 IST
joinshare
அக்சர் படேலுக்கு CSK குறி? பதிலுக்கு 2 வீரர்கள்! யார் யார் பாருங்க!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2027 ஐபிஎல்லில் ஒரு தரமான கம்பேக்கை கொடுக்க திட்டமிட்டு வருகிறது. முதல் கட்டமாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளேமிங்கை நீக்கி உள்ளனர். இதை அதிகாரப்பூர்வமாக சிஎஸ்கே நிர்வாகமே தெரிவித்தது. ஆனால் திரைக்கு பின்னால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

குறிப்பாக ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதற்காக கடந்த 2026 ஐபிஎல்லில் பிரசாந்த் வீரை வாங்கினார். ஆனால் அவர் எதிர்பார்த்தை அளவிற்கு விளையாடவில்லை. இதனால் ஜடேஜாவின் இடத்திற்கு ஒரு தரமான வீரரை தேடி வருகின்றனர். அது இந்திய வீரராக இருக்க வேண்டும் என்பதிலும் சிஎஸ்கே தெளிவாக இருக்கிறது.

இதன் முதற்கட்டமாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் உள்ள வாஷிங்டன் சுந்தரை பெற சிஎஸ்கே பேச்சுவார்த்தை நடத்தியது. வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக சர்பராஸ் கான் அல்லது உர்வில் படேல் ஆகியோரில் ஒருவரை டிரேட் செய்ய தயாராக இருப்பதாகவும் சிஎஸ்கே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வாஷிங்டன் சுந்தரை எந்த காரணத்திற்காகவும் விடுவிக்கும் திட்டம் இல்லை என குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் திட்டவட்டமாக கூறிவிட்டது. இதையடுத்து, சாய் கிஷோர் அல்லது மனவ் சுதார் ஆகியோரில் ஒருவரை டிரேடிங் செய்ய முடியுமா என சிஎஸ்கே தரப்பு கேட்டதாகவும், அதற்கும் குஜராத் நிர்வாகம் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அக்சர் படேலுக்கு சிஎஸ்கே குறி

இந்த நிலையில்தான் சிஎஸ்கேவின் கவனம் டெல்லி கேபிடல்ஸ் அணியில் உள்ள அக்சர் படேல் மீது திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிஷப் பந்தை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இருந்து டிரேடிங் மூலம் மீண்டும் டெல்லி அணிக்கு அழைத்து வந்த நிலையில், அவரை கேப்டனாக்க டெல்லி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அக்சர் படேலின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழும்பி உள்ள நிலையில், அவரை சிஎஸ்கே நிர்வாகம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே அணியில் தற்போது சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்தில் முக்கியத்துவம் தேவைப்படுவதால், அக்சர் படேல் அணிக்குள் வந்தால் அவருக்கு முக்கிய பங்கு வழங்கப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சேப்பாக்கம் மைதானத்தின் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் அக்சர் படேலுக்கு கூடுதல் பலமாக இருக்கும் என சிஎஸ்கே கருதுவதாக தெரிகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் பங்களிக்கக்கூடிய அவர், சிஎஸ்கே அணியில் விளையாடினால் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

அக்சருக்கு பதிலாக யார்?

அக்சர் படேலை டிரேடிங் மூலம் பெறுவதற்கு, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மாற்று வீரர்களாக உர்வில் படேல் மற்றும் ராகுல் சஹார் ஆகியோரை வழங்க சிஎஸ்கே தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி அணிக்கு டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடக்கூடிய பேட்டர் தேவைப்படுவதால், உர்வில் படேல் அவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பார் என சிஎஸ்கே தரப்பு கணக்கிடுவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், ராகுல் சஹாரையும் சேர்த்து வழங்குவதன் மூலம் அக்சர் படேலை பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க சிஎஸ்கே முயற்சி செய்வதாக தெரிகிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL