• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /MI செல்லும் CSK வீரர்.. ரூ. 8 கோடிக்கு டீல்! பதிலுக்கு ஹர்திக் பாண்டியாவா?

MI செல்லும் CSK வீரர்.. ரூ. 8 கோடிக்கு டீல்! பதிலுக்கு ஹர்திக் பாண்டியாவா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஒருவரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 8 கோடிக்கு வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த டீல் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. அவர் யார்? இரு அணிகளின் டீல் என்ன என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.

Reported ByR BalajiEdited ByR Balaji
Published: Aug 20, 2026, 01:36 PM IST|Updated: Aug 20, 2026, 01:40 PM IST
joinshare
MI செல்லும் CSK வீரர்.. ரூ. 8 கோடிக்கு டீல்! பதிலுக்கு ஹர்திக் பாண்டியாவா?
Image Credit: Image Source: X

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

2

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

3

பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

4

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

5

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

மும்பை அணியின் கேப்டன் மாற்ற முடிவு: 2027 ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களது அணிகளை தயார் செய்ய தொடங்கி இருக்கிறது. வீரர்களை பரிமாற்றிக்கொள்ள அணிகளுக்கு இடையே தற்போதே பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. குறிப்பாக ஹர்திக் பாண்டியா எந்த அணிக்கு செல்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியை 2024 ஆம் ஆண்டில் இருந்து வழிநடத்தி வரும் ஹர்திக் பாண்டியாவால் அந்த அணிக்கு ஒரு கோப்பையை பெற்றுத்தர முடியவில்லை. மும்பை அணி நிர்வாகமும் 2020 ஆம் ஆண்டில் இருந்து கோப்பையை வெல்லாததால், 2027ல் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக ஹர்திக் பாண்டியாவை வெளியேற்றி கேப்டனை மாற்ற முடிவு செய்துள்ளது. அதேபோல் சில வீரர்களையும் புதிதாக அணிக்குள் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளனர்.

ஹர்திக் பாண்டியா டீல்: சிஎஸ்கே - மும்பை இடையே நீடித்த இழுபறி

ஹர்திக் பாண்டியா குறித்த டீல் பேச்சுவார்த்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடம் நடந்தது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி கேட்ட ஆயூஸ் மாத்ரே, சிவம் துபேவை சிஎஸ்கே அணி தர ஒத்துக்கொள்ளவில்லை. மாறாக துபே மற்றும் கலீல் அகமதுவை தருகிறோம் என கூறினர். இதனால் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல், இழுபறியாக இருந்து வந்தது. இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ஹர்திக் பாண்டியா, ”நான் சென்றால் சிஎஸ்கே அணிக்குதான் செல்வேன், இல்லையென்றால் என்னை ஏலத்திற்கு விட்டுவிடுங்கள், என்னை நிச்சயம் சிஎஸ்கே வாங்கும்” என தெரிவித்தார்.

கலீல் அகமதுவின் அதிருப்தி: ரூ.10 கோடி கோரிக்கையும் டிரேடிங்கும்

இந்த சூழலில், வேறு வழி இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை தொடர்ந்து வந்தது. இந்த நிலையில்தான், மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 8 கோடிக்கு கலீல் அகமதுவை வாங்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது கடந்த ஐபிஎல் சீசனின் முதல் சில போட்டிகளில்தான் விளையாடினார். அதன்பின் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகின்றார். இவரைவிட ஜூனியரான ஆகிப் நபி ரூ. 8.4 கோடிக்கு ஏலம் போன நிலையில், கலீல் அகமது ரூ. 4.80 கோடி மதிப்பிதான் சிஎஸ்கேவில் உள்ளார். இதனால் தன்னை ரூ. 10 கோடிக்கு தக்கவைக்க வேண்டும், இல்லையென்றால் என்னை டிரேட்டிங்கில் வெளியேற்றி விடுங்கள் என கலீல் சிஎஸ்கேவிடம் கேட்டிருக்கிறாராம்.

வீரர்கள் பரிமாற்றம் இல்லை... பணப் பரிமாற்ற டீல் மட்டுமே!

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி கலீல் அகமதுவை ரூ. 8 கோடிக்கு வாங்க டீல் பேசிய நிலையில், சிஎஸ்கே அணியும் அவரை அனுப்ப தயாராக உள்ளதாம். ஆனால் இது முழுக்க முழுக்க பண பரிமாற்றமாக இருக்குமே தவிர, வீரர்கள் மாற்றமாக இருக்காது என கூறப்படுகிறது. இதனால் ஹர்திக் பாண்டியா கலீல் அகமதுவுக்கு பதிலாக சிஎஸ்கே அணிக்கு வர வாய்ப்பில்லை. ஒருவேளை சிஎஸ்கே கூடுதலாக ஒரு தரமான பேட்ஸ்மேனை அனுப்பினால் மும்பை ஹர்திக்கை கொடுக்க வாய்ப்புள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL