• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /சிஎஸ்கேவுக்கு நோ சொன்ன குஜராத்! சாய் கிஷோரை தட்டித்தூக்கும் ஆர்சிபி: பலே திட்டம்!

சிஎஸ்கேவுக்கு நோ சொன்ன குஜராத்! சாய் கிஷோரை தட்டித்தூக்கும் ஆர்சிபி: பலே திட்டம்!

சாய் கிஷோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க முயற்சி செய்வதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அது தோல்வியில் முடிந்ததாகவும், வேறொரு அணி அவரை வாங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Written ByR Balaji
Published: Sep 07, 2026, 07:19 IST|Updated: Sep 07, 2026, 07:24 IST
joinshare
சிஎஸ்கேவுக்கு நோ சொன்ன குஜராத்! சாய் கிஷோரை தட்டித்தூக்கும் ஆர்சிபி: பலே திட்டம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து வாங்கியது. இவருக்கு மாற்றாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை கொடுத்தது. இதையடுத்து ஜடேஜா இடத்தில் விளையாட வைக்க பிரசாந்த் வீர் என்ற உள்ளூர் வீரரை ரூ. 14 கோடி கொடுத்து வாங்கியது. ஆனால் அவர் ஜடேஜாவின் இடத்தை பூர்த்தி செய்யவில்லை. இது கடந்த சீசனில் சிஎஸ்கே அணியை பெரிதும் பாதித்தது. பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் தொடரை விட்டு வெளியேறியது.

ஜடேஜா இடத்திற்கு யார்?  

இந்த சூழலில்தான், ஜடேஜாவின் இடத்தை ஒரு தரமான வீரரை கொண்டு நிரப்ப சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிரேட் பேச்சுவார்த்தை மூலம் முயற்சித்து வந்தன. அதன் ஒரு பகுதியாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருக்கும் சாய் கிஷோருக்காக பேசி வந்தனர். குஜராத் அணியில் ரஷித் கான், வாஷிங்டன் சுந்தர் என பலரும் இருப்பதால், சாய் கிஷோருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், மனவ் சுதாரும் அந்த அணியில் இருக்கிறார். இதனால் பிளேயிங் 11ல் இடம் பெற இவர்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த சீசனில் விளையாட வாய்ப்பு கிடைக்காததால் சாய் கிஷோர் குஜராத் அணி மீது அதிருப்தியில் உள்ளார். இதனால் அவர் என்னை வேறு அணிக்கு அனுப்பி விடுங்கள் என அந்த அணியிடம் கூறிவிட்டாராம். இதனை அறிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை வாங்க தீவிரமாக முயற்சித்து வந்தது. அவருக்கு மாற்று வீரராக உர்வில் படேல் தருகிறோம் என டீல் பேசி உள்ளனர்.

CSK டீல் தோல்வி.. சீனுக்குள் வந்த RCB

இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி சிஎஸ்கேவின் டீலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் இதனால் இந்த டீல் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாகவும், தற்போது சாய் கிஷோரை வாங்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், லெக் ஸ்பின்னர்களால் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதால், சாய் கிஷோரை வாங்க ஆர்சிபி அணி முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

சாய் கிஷோருக்கு பதில் யார்?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மிடில் ஆர்டரில் களத்தில் நிற்க தரமான வீரர் ஒருவர் தேவைப்படுகிறார். இதனை புரிந்துக்கொண்ட ஆர்சிபி அணி ஜதேஷ் சர்மாவை கொடுக்க தயாராக இருக்கின்றனர். எனவே இந்த டீல் சுமூகமாக முடிய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சிஎஸ்கே-வின் மாற்று திட்டம் என்ன?

சாய் கிஷோர் விஷியத்தில் சிஎஸ்கே அணியின் டீல் தோல்வியில் முடிந்திருந்தாலும், அவர்கள் வாஷிங்டன் சுந்தருக்காக தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. இவருக்கு மாற்றாக சிவம் துபே மற்றும் சர்பராஸ் கானை ஆகியோரை சிஎஸ்கே அணி குஜராத் அணிக்கு கொடுக்க தயாராக உள்ளது.  

 

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL