ஐபிஎல் தொடரில் கடந்த மூன்று சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு எதிர்பார்த்த அளவில் அமையவில்லை. தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போன நிலையில், அணியின் பயிற்சியாளர் குழுவிலும் மாற்றம் செய்யப்பட்டது. நீண்ட காலமாக தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளேமிங்கிற்கு பதிலாக ஜாகீர் கான் புதிய தலைமை பயிறிச்யாளராக பொறுப்பேற்றுள்ளார்.
2027 ஐபிஎல் சீசனை இலக்காக கொண்டு அணியை மறுசீரமைக்கும் பணிகளில் ஜாகீர் கான் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சீசனில் சிஎஸ்கே சந்தித்த முக்கிய பிரச்சனைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் அணியின் கட்டமைப்பில் மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தக்வல் வெளியாகி உள்ளது.
கடந்த சீசனில் சிஎஸ்கேவின் முக்கிய பல்வீனங்களில் ஒன்றாக டெத் ஓவர் பந்து வீச்சு இருந்தது. கடைசி கட்ட ஓவர்களில் அதிக ரன்களை வழங்கியதால், பல போட்டிகளில் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் நேதன் எல்லிஸின் வருகை சிஎஸ்கேவுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் டி. நட்ராஜன் போன்ற அனுபவம் வாய்ந்த டெத் ஓவர் பந்து வீச்சாளரை அணிக்குள் கொண்டு வருவது குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசையிலும் மாற்றம் தேவைப்படுவதாக அணியின் புதிய நிர்வாகம் கருதுவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, பவர் பிளே மற்றும் மிடில் ஓவர்களில் போதுமான அதிரடி இல்லாதது அணியின் ரன் குவிப்பை பாதித்தது. இதனால் மிடில் ஆர்டரை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. உர்வில் படேல் மற்றும் டிவோல்ட் பிரேவிஸ் ஆகியோருடன் ஹேரி ப்ரூக்கையும் இணைத்து பேட்டிங் வரிசைக்கு கூடுதல் பலத்தை வழங்கும் திட்டம் இருப்பதாக கூறிப்படுகிறது.
குறிப்பாக, பெரிய இலக்குகளை சேஸ் செய்யும்போது மிடில் ஆர்டர் பேட்டர்கள் வேகமாக ரன்களை சேர்க்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
கடந்த சீசனில் சிஎஸ்கே எதிர்கொண்ட மற்றொரு சிக்கல் வெளிநாட்டு வீரர்கள் தேர்வு மற்றும் அவர்களது இடங்களில் தொடர்ச்சியான மாற்றங்களாக இருந்ததாக கூறப்படுகிறது. சில வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாததால் அணியின் காம்பினேஷனிலும் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்பட்டன.
இனி இந்த நிலை ஏற்படாமல் இருக்க, 2027 சீசனுக்கான நான்கு வெளிநாட்டு வீரர்களையும் முன்கூடியே அடையாளம் கண்டு, அவர்களை அணியின் முக்கிய காம்பினேஷனில் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர, டிரேடிங் மூலம் இந்திய இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வரவும் சிஎஸ்கே நிர்வாகம் முயற்சி மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக முழு நேர சுழற்பந்து வீச்சாளர் இடத்தில் நூர் அகமதுவுக்கு பதிலாக இந்திய வீரருக்கு வாய்ப்பு வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்தை வலுப்படுத்த வாஷிங்டன் சுந்தர் அல்லது சாய் கிஷோர் ஆகியோரில் ஒருவரை அணிக்குள் கொண்டு வருவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் டெத் ஓவர் பந்து வீச்சு, மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் காம்பிஏஷன் என கடந்த சீசன்களில் சிஎஸ்கே எதிர்கொண்ட முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதே ஜாகீர் கானின் முக்கிய இலக்காக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.