சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பயிற்சியாலராக ஜாகீர் கான் பொறுப்பேற்றுள்ள நிலையி, அணியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக பந்துவீச்சு பிரிவில் இந்திய வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க ஜாகீர் கான் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அணியின் அடுத்த தலைமுறையை உருவாக்கும் திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் மூலம் சிஎஸ்கே அணிக்கு அழைத்து வருவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஜாகீர் கானிடம் சிஎஸ்கே நிர்வாகம் கருத்து கேட்டதாகவும், அப்போது ஹர்திக் பாண்டியாவை அணிக்குள் கொண்டு வருவதற்கு பதிலாக தற்போதைய வீரர்களை வைத்து அணியின் தேவையை பூர்த்து செய்யலாம் என்ற கருத்தை ஜாகீ கான் கூறியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஷிவம் துபே ஏற்கனவே அணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவருடன் மற்றொரு வீரரை சேர்த்து ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் மூலம் பெறுவது அவசியமில்லை என ஜாகீர் கான் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கடந்த காலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தபோது ஹர்திக் பாண்டியயா தொடர்பான முடிவுகளில் ஜாகீர் கானுக்கும் பங்கு இருந்ததாக கூறப்படுகிறது. 2022 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் அவர் மும்பை அணியின் கிரிக்கெட் இயக்குநராக செயல்பட்டிருந்தார்.
தற்போதைய சிஎஸ்கே அணியின் சுழற்பந்து வீச்சுடன் பேட்டிங்கிலும் பங்களிக்கக்கூடிய விரருக்கான இடம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணியில் உள்ள வாஷிங்டன் சுந்தர் அல்லது சாய் கிஷோர் ஆகியோரில் ஒருவரை அணிக்குள் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இருவரில் ஒருவரை டிரேடிங் மூலம் பெறுவதற்கான பேச்சுவார்த்தையை ஜாகீ கான் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சிஎஸ்கேவின் பந்து வீச்சு படையை அடுத்த தலைமுறைக்கு தயார்ப்படுத்துவதிலும் ஜாகீர் கான் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது.
அந்த வகையில், அன்ஷுல் கம்போஜ் மற்றும் முகேஷ் செளத்ரி போன்ற இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அனுபவம் வாய்ந்த வீரர்களின் வழிகாட்டுதலுடன் இளம் வீரர்களை வளர்க்க்கும் திட்டமும் அணியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேப்பாக்கம் மைதானத்தின் தன்மை மற்றும் அங்கு சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் குறித்து ஜாகீர் கானுக்கு நல்ல புரிதல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தமிழ்நாட்டை சேர்ந்த திறமையான வீரர்களை கண்காணிப்பதிலும் சிஎஸ்கே கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் இளம் வீரர்களில் சிலரை 2027 ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்யும் வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுழற்பந்து வீச்சுடன் பேட்டிங்கிலும் பங்களிக்கக்கூடிய ஆல்ரவுண்டர் தேவைப்படும் நிலையில், டிஎன்பிஎல் தொடரில் கவனம் ஈர்த்த இளம் வீரர்களில் ஒருவரை சிஎஸ்கே குறிவைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனால் ஜாகீர் கான் தலைமையில் சிஎஸ்கேவின் அணித் தேர்வு அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. குறிப்பாக இந்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தமிழக வீரர்களை அடையாளம் காண்பது மற்றும் அணியின் நீண்டகால தேவைக்கு ஏற்ற வீரர்களை தேர்வு செய்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.