• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /துலீப் டிராபி பைனல்: சேப்பாக்கத்தில் கேஎல் ராகுல் விளையாடுவாரா...? திலக் வர்மா பதில்

துலீப் டிராபி பைனல்: சேப்பாக்கத்தில் கேஎல் ராகுல் விளையாடுவாரா...? திலக் வர்மா பதில்

துலீப் டிராபி 2026 இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (செப்டம்பர் 6) தொடங்கும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written BySudharsan G
Published: Sep 05, 2026, 17:22 IST|Updated: Sep 05, 2026, 17:27 IST
joinshare
துலீப் டிராபி பைனல்: சேப்பாக்கத்தில் கேஎல் ராகுல் விளையாடுவாரா...? திலக் வர்மா பதில்
Image Credit: KL Rahul | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

துலீப் டிராபி 2026-27 தொடர் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கியது. காலிறுதி மற்றும் அரையிறுதி சுற்றுப் போட்டிகள் பெங்களூரு நகரில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்தின் மைதானங்களில் நடைபெற்றது.

முதல் காலிறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம் - வடகிழக்கு மண்டலம் அணிகள் மோதின. இதில் கிழக்கு மண்டலம் வெற்றிபெற்றது. 2வது காலிறுதிப் போட்டியில் வடக்கு மண்டலம் - மேற்கு மண்டலம் மோதின, அதில் வடக்கு மண்டலம் வென்றது.

சேப்பாக்கத்தில் இறுதிப்போட்டி

கடந்த வருடம் துலீப் டிராபி தொடரில் கோப்பையை வென்ற மத்திய மண்டலம் அணியும், 2வது இடம் பிடித்த தெற்கு மண்டலம் அணியும் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றன. அந்த வகையில், மத்திய மண்டலம் அணியை வீழ்த்தி கிழக்கு மண்டலம் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. வடக்கு மண்டலம் அணியை வீழ்த்தி தெற்கு மண்டலம் அணி பைனல் சென்றது.

இந்நிலையில், துலீப் டிராபி 2026 இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டலம் - தெற்கு மண்டலம் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. செப்டம்பர் 6ஆம் தேதியான நாளை போட்டி தொடங்குகிறது.

இலவச அனுமதி

இப்போட்டியை இலவசமாக சென்னை சேப்பாக்கத்தில் இலவசமாக காணலாம். ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் நேரலையை காணலாம் அந்த வகையில், தெற்கு மண்டலம் அணி கேப்டன் திலக் வர்மா பேசிய வீடியோ BCCI Domestic X பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Special ground, timeless memories ⏳ 

Pure nostalgia comes flowing back at a historic venue. 🏟️✨ 

Tilak Varma is geared up and excited to play the #DuleepTrophy final at the M.A. Chidambaram Stadium 👌 - by @jigsactin#EZvSZ pic.twitter.com/fRVnO69FpL

— BCCI Domestic (@BCCIdomestic) September 5, 2026

கேஎல் ராகுல் கிடையாது

அப்போது பேசிய அவர், கேஎல் ராகுல் விளையாடவில்லை என தெரிவித்தார். மேலும், "எங்களுக்கு இங்கு அருமையான நினைவுகள் உள்ளன. மேலும், இந்த மைதானம் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்கது. நீங்கள் சென்னைக்கு வந்தால், எப்போதும் முதலில் நினைவுக்கு வருவது என்றால் தோனிதான். அதே சமயம், எனக்கும இங்கு மிக நல்ல நினைவுகள் உள்ளன" என்றார்.

சேப்பாக்கம் ஏன் ஸ்பெஷல்?

மேலும், "சென்னை ரசிகர்கள் எனக்கு நன்றாக ஆதரவளிக்கிறார்கள். நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினாலும் சரி, இந்திய அணிக்காக விளையாடினாலும் சரி, ரசிகர்கள் என் மீது மிகுந்த அன்பை வெளிப்படுத்தி உள்ளனர். எனவே இது எனக்கு நல்ல அறிகுறிதான்.

டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் எனக்கு நல்ல நினைவுகள் உள்ளன. அதுதான் எனக்கு கம்பேக் போட்டி என கூறுவேன். அத்தொடரில் முதலிரண்டு போட்டிகளில் நான் சற்று சோர்வாக உணர்ந்தேன்.

ஆனால் இங்கே ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நான் ஆக்ரோஷமாக விளையாடியபோது, எனது பேட்டிங்கிலும் எனது தன்னம்பிக்கையிலும் நான் ஒரு வேறு மட்டத்தில் இருந்தேன். ஒரு இந்திய போட்டியில் எனது ஜெர்ஸி எண் 72. இங்கு நான் 72 ரன்கள் எடுத்து, அந்த ஆட்டத்தை வென்றேன். அது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியாகும்" என்றார்.

ரசிகர்கள் அனுமதி

துலீப் டிராபி தொடரில் காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், இறுதிப்போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதை திலக் வர்மா வரவேற்றார். தெற்கு மண்டல அணியில் முகமது சிராஜ் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர்.

ஸ்குவாட் விவரம்

தெற்கு மண்டலம்: திலக் வர்மா (கேப்டன்), ரிக்கி புய் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷேக் ரஷீத், சாய் தேஜா, டி விஜய், அபினவ் தேஜ்ரானா, கே ஹிமதேஜா, டி தியாகராஜன், ரவிசந்திரன் ஸ்மரன், கருண் நாயர், ஷ்ரேயாஸ் கோபால், வித்வத் கவேரப்பா, எம்.டி.நிதீஷ், நாராயண் ஜெகதீசன், அமன் கான், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், முகமது சிராஜ்.

கிழக்கு மண்டலம்: இஷான் கிஷன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), வைபவ் சூரியவன்ஷி (துணை கேப்டன்), டெனிஷ் தாஸ், அபிமன்யு ஈஸ்வரன், சுதிப் குமார் கராமி, ஷாபாஸ் அகமது, சூரஜ் சிந்து ஜெய்ஸ்வால், முகமது ஷமி, முகேஷ் குமார், குமார் குஷாக்ரா, ஷிகர் மோகன், அனுகுல் ராய், விராட் சிங், சுப்ரான்ஷு சேனாபதி, அபிஜித் சர்க்கார்.                                                

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket