ICC புதிய விதிகள்: ஓடிஐ, டி20ஐ, டெஸ்ட் போட்டிகளில் என்னென்ன மாற்றங்கள்? Explained
ICC New Playing Conditions Explained: ஐசிசி மூன்று பார்மட்களுக்கும் விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. ஐசிசி எந்தெந்த பார்மட்களில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது என்பதை விரிவாக இங்கு காணலாம்.
ICC New Playing Conditions Explained: கிரிக்கெட்டின் நலன் சார்ந்து விதிகள் மாற்றத்திற்கு உள்ளாகும். அந்த வகையில், சர்வதேச கிரிக்கெட்டில் போட்டிகளின் வேகத்தை அதிகரிக்கவும், சில விதிகளில் நிலவும் குழப்பங்களை நிவர்த்தி செய்யும் வகையிலும் ஐசிசி புதிய Playing Conditions-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.
அந்த வகையில், ஐசிசி எந்தெந்த பார்மட்களில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது என்பதை விரிவாக இங்கு காணலாம்.
ஓடிஐ, டி20ஐ போட்டிகளில் என்ன மாற்றம்?
- டி20ஐ போட்டிகளில் இன்னிங்ஸ் இடைவேளை இனி 15 நிமிடங்கள் ஆகும். ஒருவேளை ஆட்ட நேரம் இழக்கப்பட்டிருக்கும்பட்சத்தில் 10 நிமிடங்களுக்குள் அடுத்த இன்னிங்ஸை தொடங்க வேண்டும்.
- ஓடிஐ மற்றும் டி20ஐ போட்டிகளில் Drinks Breaks சமயத்தில் தலைமை பயற்சியாளரோ அல்லது அவரால் நியமிக்கப்பட்டவரோ மைதானத்திற்குள் நுழைந்து வீரர்களுடன் ஆலோசனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- பேட்டர் நகர்வை கணக்கில் வைத்து வழங்கப்படும் leg-side wide விதி ஓடிஐ மற்றும் டி20ஐ போட்டிகளுக்கான நிரந்தர Playing Condition-ல் சேர்க்கப்பட்டுள்ளது.
- பந்து வீசப்படுவதற்கு முன்னரோ அல்லது பந்துவீச்சின்போதோ பேட்டர் அங்கும் இங்கும் நகர்ந்தால், பந்து பௌலரின் கையில் இருந்து ரிலீஸ் ஆகும்போது பேட்டரின் நிலையை வைத்து Wide தீர்மானிக்கப்படும். இந்து பந்துவீச்சாளர்களுக்கு சலுகை வழங்கும் விதியாகும்.
பேட்டர்கள் நேரத்தை வீணடித்தால்...
- ஆடவர் கிரிக்கெட்டில் பேட்டர் பந்தை எதிர்கொள்ளத் தேவையான நேரத்திற்குள் தயாராக இல்லாவிட்டால் இனி அபராதம் விதிக்கப்படும். முதல் தவறுக்கு எச்சரிக்கையும், 2வது தவறுக்கு இறுதி எச்சரிக்கையும் வழங்கப்படும்.
- மீண்டும் பேட்டிங் செய்ய தாமதமாக்கினால், ஒவ்வொரு முறையும் பந்துவீச்சு அணிக்கு 5 பெனால்டி ரன்கள் வழங்கப்படும். அதாவது, பந்துவீச்சு அணி 2வது பேட்டிங் செய்தால் டார்கெட்டை விட 5 ரன்கள் குறைவாக அடித்தால் போதும். முதலில் பேட்டிங் செய்திருந்தால் டார்கெடில் 5 ரன்கள் அதிகரிக்கப்படும்.
- தொடர் விதிமீறல் இருந்தால் ஐசிசி Code of Conduct விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படலாம். இதனால், போட்டியில் தேவையின்றி நேர விரயத்தை குறைக்க ஐசிசி முயற்சித்துள்ளது.
ஓவர் த்ரோ விதிகளில் முக்கிய மாற்றம்
ஓவர் த்ரோ என்றால் என்ன என்பதில் இருந்த குழப்பத்திற்கும் ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. ரன் அவுட் செய்ய அல்லது ரன்களைத் தடுக்க ஸ்டம்புகளை நோக்கி பந்தை வீசி முயற்சித்தால் மட்டுமே அது ஓவர் த்ரோவாகக் கருதப்படும்.
அதேநேரத்தில், பந்தை தடுக்கவோ அல்லது மற்றொரு பீல்டரிடம் பந்தை கொடுக்கவோ முயற்சிக்கும்போது ஏற்படும் சாதாரண misfield இனி த்ரோவாக கருதப்படாது.
கடைசி ஓவரில் விக்கெட் சரிந்தால்...
டெஸ்ட் போட்டியில் இப்போது ஒரு நாளின் கடைசி ஓவரின் இடையே விக்கெட் விழுந்தால், அதனுடன் அன்றைய ஆட்டம் கட்டாயம் நிறைவடையும். ஆனால் கடைசி ஓவர் முழுமையாக வீசப்பட்டால் மட்டுமே அன்றைய ஆட்டம் முடியும். வானிலை மற்றும் மைதான சூழல் சாதகமாக இருந்தால் மீதமுள்ள பந்துகளை வீச சிக்கல் ஏதுமில்லை.
மேலும் படிக்க | 2027 ஐசிசி உலகக் கோப்பை: விராட் கோலி, ரோஹித் சர்மா பிளான் என்ன? Explained
பந்து முழுமையாக டெட் ஆவது எப்போது?
ஒரு பந்து Finally Settled என்று கருதப்படுவதற்கான விதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி பந்து கட்டாயமாக பந்துவீச்சாளர் அல்லது விக்கெட் கீப்பரின் கைகளில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
பந்து Settle ஆகிவிட்டது என்பதை தீர்மானிப்பதில் நடுவருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக போட்டியின் கடைசி பந்துகளில் இந்த விதி முக்கியத்துவம் பெறும்.
பிங்க் பந்தில் பகல்நேர டெஸ்ட்...?
டெஸ்ட் கிரிக்கெட் பகலிரவாக விளையாடப்படும்போது பிங்க் பந்து பயன்படுத்தப்படும். அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய மாற்றமாக, பகல் நேர டெஸ்ட் போட்டிகளிலும் பிங்க் பந்தை பயன்படுத்தும் சோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் பாதிக்கப்படுவதை குறைப்பதே இதன் நோக்கம். ஆனால், இரு அணிகளும் போட்டி தொடங்குவதற்கு முன்பே இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். ஒருமுறை முடிவு செய்யப்பட்ட பிறகு போட்டி தொடங்கியதும் சிவப்பு பந்தில் இருந்து பிங்க் பந்துக்கு மாற்ற முடியாது.
பெண்கள் கிரிக்கெட்டில் புதிய கட்டுப்பாடு
பெண்கள் மற்றும் ஜூனியர் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பந்துகளின் அளவு மற்றும் எடைக்கு புதிய வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதுவரை சில சந்தர்ப்பங்களில் பெண்கள் மற்றும் ஜூனியர் கிரிக்கெட்டுக்கு ஒரே வகை பந்துகள் தயாரிக்கப்பட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
இனி ஆடவர், மகளிர் மற்றும் ஜூனியர் கிரிக்கெட்டுக்கு என மூன்று தனித்துவமான அளவு மற்றும் எடை விவரக்குறிப்புகள் இருக்கும். இதன்மூலம், போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்துகளின் தரம் மேலும் ஒரே மாதிரியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது அமலுக்கு வரும்?
2026ஆம் ஆண்டு அக்டபோர் 1ஆம் தேதி முதல் தொடங்கும் சர்வதேச தொடர்களில் ஐசிசியின் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு தொடர்களில் இது அமலுக்கு வராது.
மேலும் படிக்க | Explainer: வெஸ்ட் இண்டீஸ் ODI தொடர்... இந்திய அணிக்கு ஏன் ரொம்ப முக்கியம்...?