IND vs WI ODI Series Explainer: மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இரு அணிகளும் மூன்று ஓடிஐ மற்றும் ஐந்து டி20ஐ என எட்டு வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாட இருக்கின்றன.
2027 ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி தயாராகி வரும் நிலையில், மேற்கு இந்திய தீவுகள் அணி இன்னும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதிபெறவில்லை என்பது தனிக்கதை.
அந்த வகையில் இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஓடிஐ தொடர்கள் குறித்தும், இத்தொடர்கள் இரு அணிகளுக்கும் ஏன் முக்கியமானது என்பது குறித்தும் இங்கு விரிவாக காணலாம்.
| போட்டி | தேதி | நகரம் | நேரம் |
| முதல் ஓடிஐ | செப். 27 (ஞாயிறு) | திருவனந்தபுரம் | மதியம் 2 மணி |
| 2வது ஓடிஐ | செப். 30 (புதன்) | கௌகாத்தி | மதியம் 2 மணி |
| 3வது ஓடிஐ | அக்டோபர் 3 (சனி) | முலான்பூர் | மதியம் 2 மணி |
*ஒவ்வொரு போட்டியின் டாஸ் மதியம் 1.30 மணிக்கு வீசப்படும்.
மேற்கு இந்திய தீவுகள் ஓடிஐ ஸ்குவாட்: ஷாய் ஹோப் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஜூவல் ஆண்ட்ரூ, ஜான் கேம்ப்பெல், கீசி கார்ட்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ ஃபோர்டே, ஜஸ்டின் கிரீவ்ஸ், அமீர் ஜங்கு, அல்சாரி ஜோசப், ஷமார் ஜோசப், விட்டல் லாஸ், குடாகேஷ் மோட்டி, கீமோ பால், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஜேடன் சீல்ஸ்.
இந்தியா ஓடிஐ ஸ்குவாட்: சுப்மான் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரேல், நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரர், முகமது சிராஜ், ஆகிப் நபி.
The 2️⃣0️⃣2️⃣6️⃣-2️⃣0️⃣2️⃣7️⃣ international home season is upon us 🤩
🗓️ 👇 Here's a look at #TeamIndia's first assignment to get it all started!#INDvWI pic.twitter.com/7iMg2VPSgu— BCCI (@BCCI) September 24, 2026
ஷ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிஷன் ஆகியோர் ஆசிய விளையாட்டுத் தொடரில் விளையாடுவதற்கு ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். முகமது சிராஜ், ஜடேஜா ஆகியோர் ஓடிஐ அணிக்கு திரும்பி உள்ளனர். நமன் திர், ஆகிப் நபி முதல்முறையாக ஓடிஐ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஹர்திக் பாண்டியா இன்னும் முழுமையாக உடற்தகுதி பெறாத நிலையில் அவருக்கு நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டுள்ளார். ஆசிய விளையாட்டுத் தொடரில் இந்திய அணியில் விளையாட இருந்த நிதிஷ் குமார் அந்த ஸ்குவாடில் இருந்து விடுவிக்கப்பட்டு ஓடிஐ ஸ்குவாடில் சேர்க்கப்பட்டார்.
பேக்அப் விக்கெட் கீப்பர் பேட்டராக இஷான் கிஷன் பார்க்கப்பட்டார். தற்போது அவர் இல்லாத இடத்தில் ஜூரேல் வாய்ப்பை பெற்றார். ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி 2027ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா நாடுகளில் நடைபெற இருக்கும் ஐசிசி உலகக் கோப்பை தொடரை மனதில் வைத்தே தற்போது அணியை கட்டமைத்து வருகிறது.
Back in ODI mode 👌
📸 #TeamIndia putting in the work in Thiruvananthapuram ahead of #INDvWI 🏃♂️💪 pic.twitter.com/sRuuoVdyxg— BCCI (@BCCI) September 25, 2026
வேகப்பந்துவீச்சில் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவும்; சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவும் களமிறக்கப்படலாம். இதனால், நம்பர் 8 வரை பேட்டிங் ஆப்ஷன் கிடைக்கும். சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிதிஷ் குமார் ரெட்டி என மூன்று வேகப்பந்துவீச்சு ஆப்ஷனும்; குல்தீப் யாதவ், ஜடேஜா என இரண்டு சுழற்பந்துவீச்சு ஆப்ஷனும் கிடைக்கும்.
தொலைக்காட்சியை பொருத்தவரை, Star Sports சேனல்களில் இந்த தொடர் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நீங்கள் வர்ணனையையும் கேட்டு மகிழலாம்.
அதேபோல், Jio Hotstar செயலி மற்றும் இணையத்தளம் வாயிலாகவும் நேரடி ஒளிப்பரப்பை கண்டு களிக்கலாம்.