• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /2027 உலகக் கோப்பை: நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்த மே..இ.தீவுகள்.. பின்னணி என்ன?

2027 உலகக் கோப்பை: நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்த மே..இ.தீவுகள்.. பின்னணி என்ன?

2027 உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி தவறவிட்டுள்ளது. அது எப்படி? என்பது குறித்த விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

Reported ByR BalajiEdited ByR Balaji
Published: Aug 11, 2026, 21:14 IST|Updated: Aug 11, 2026, 21:18 IST
joinshare
2027 உலகக் கோப்பை: நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்த மே..இ.தீவுகள்.. பின்னணி என்ன?
Image Credit: Image Source: X

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதிபெறும் அணிகளின் பட்டியல் இறுதியாகியுள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு மீண்டும் ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த அணி உலகக் கோப்பைக்கு நேரடியாக தேர்வாகவில்லை.

மேற்கிந்தியத் தீவுகளின் கனவு கலைந்தது எப்படி?

கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு தகுதிபெற முடியாமல் வரலாற்று சரிவைச் சந்தித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்த முறையும் நேரடி தகுதி வாய்ப்பை இழந்துள்ளது.

ஐசிசி விதிகளின்படி, வரும் செப்டம்பர் 30 நிலவரப்படி ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதிபெறும். இவற்றுடன் தொடரை நடத்தும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளும் நேரடியாக பங்கேற்கும். தென்னாப்பிரிக்கா ஏற்கனவே தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் இருப்பதால், தரவரிசையில் 9 வது இடம் பிடிக்கும் அணிக்கு நேரடி தகுதி வாய்ப்பு கிடைத்தது.

இந்த 9 வது இடத்தை பிடிக்க ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் இடையே கடும் போட்டி நிலவியது. சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதை அடுத்து, தரவரிசையில் தனது இடத்தை உறுதிசெய்து நேரடி தகுதியை பெற்றது.

வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு எதிராக நடக்கும் 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முழுமையாக வென்றாலும், ஆப்கானிஸ்தானின் புள்ளிகளை தாண்ட முடியாது என்பதால் அவர்களின் நேரடி தகுதி வாய்ப்பு அதிகாரப்பூர்வமாக பறிபோகி உள்ளது.

நேரடியாகத் தகுதிபெற்ற 10 அணிகள்

  1. ஆஸ்திரேலியா
  2. இந்தியா
  3. நியூசிலாந்து
  4. பாகிஸ்தான்
  5. இலங்கை
  6. இங்கிலாந்து
  7. வங்கதேசம்
  8. தென்னாப்பிரிக்கா (உலகக் கோப்பை நடத்தும் நாடு)
  9. ஜிம்பாப்வே (உலகக் கோப்பை நடத்தும் நாடு)
  10. ஆப்கானிஸ்தான்

தகுதிச் சுற்று (Qualifiers)

  • 2023 உலகக் கோப்பையில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், 2027 உலகக் கோப்பையில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்க உள்ளன.
  • நேரடித் தகுதி வாய்ப்பை இழந்த மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து மற்றும் பிற இணை உறுப்பினர்கள் உட்பட 10 அணிகள் தகுதி சுற்றில் மோதும். அதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் முதன்மை தொடருக்கு முன்னேறும்.
  • 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன (நமீபியா தொடரை நடத்தினாலும் நேரடித் தகுதி பெறவில்லை; தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும்).

இந்திய அணிக்கு இருக்கும் பெரிய சவால்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த 2023 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை தோல்வியே அடையாமல் சென்று, ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை தவறவிட்டது.

தோனி தலைமையில் 2011ல் கோப்பை வென்றதற்கு பிறகு, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவால் ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. இதனால், 2027 தொடரில் கோப்பையை கைப்பற்றி நீண்டகால வறட்சியை போக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket