SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

IND vs NZ 1st Test: இந்திய அணியில் முக்கிய மாற்றம்? பிளேயிங் 11 இதுதான்!

IND vs NZ 1st Test Predicted Playing XI: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை நவம்பர் 19 ஆம் தேதி விளையாட இருக்கிறது. இப்போட்டியில் இந்தியாவின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Written By R Balaji
Published: Nov 16, 2026, 07:59 IST | Updated: Nov 16, 2026, 08:05 IST
Join

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. இதுவரை தலா 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களிலும் விளையாடிய முடித்துள்ள நிலையில், அதில் இரண்டிலுமே இந்திய தொடரை வென்று அசத்தி உள்ளது. இந்த சூழலில், இந்திய அணி அடுத்ததாக நடைபெற இருக்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அணியின் பேட்டிங் வரிசையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த இந்திய அணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓப்பனிங்கில் எந்த மாற்றமும் இல்லை!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்க வாய்ப்புள்ளது. துணைக் கேப்டனாக இருக்கும் ராகுல், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து இன்னிங்ஸைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

3ஆவது இடத்தில் தேவ்தத் படிக்கல்?

மூன்றாவது இடத்தில் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த இடத்தில் களமிறங்கிய சாய் சுதர்ஷன் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை.

இதுவரை 7 போட்டிகளில் மூன்றாவது வீரராக விளையாடியுள்ள சாய் சுதர்ஷன், 12 இன்னிங்ஸ்களில் 31.92 சராசரியுடன் 383 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று அரை சதங்கள் அடங்கும். ஒரு முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். இதனால் அவருக்கு பதிலாக படிக்கலுக்கு வாய்ப்பு அளிக்க அணி நிர்வாகம் திட்டமிடலாம் என கூறப்படுகிறது. சமீபத்திய போட்டிகளில் படிக்கல் சிறப்பான ஃபார்மில் இருப்பதும் அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது.

மிடில் ஆர்டரில் கில், ரிஷப் பந்த்!

நான்காவது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்தும், ஆறாவது இடத்தில் துரூவ் ஜுரெலும் விளையாட வாய்ப்புள்ளது. இதன் மூலம் மிடில் ஆர்டரில் அனுபவமும் இளம் வீரர்களின் திறமையும் இணைந்திருக்கும்.

ஆல்ரவுண்டர்கள் மற்றும் பவுலர்கள்

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜாவுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வேகப்பந்து வீச்சுடன் பேட்டிங்கிலும் பங்களிக்கக்கூடிய நிதிஷ் ரெட்டிக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம்.

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை, ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவரும் பிரதான பந்துவீச்சாளர்களாக இடம்பெற வாய்ப்புள்ளது. இவர்களுடன் ஜடேஜா மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோரும் பந்துவீச்சில் கைகொடுப்பார்கள். இதனால் இந்திய அணியின் பந்துவீச்சு பிரிவு வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்

யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துரூவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் ரெட்டி, ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

போட்டி அட்டவணை

முதல் டெஸ்ட்: நவம்பர் 19 முதல் 23 வரை

இரண்டாவது டெஸ்ட்: நவம்பர் 27 முதல் டிசம்பர் 1 வரை

போட்டி தொடங்கும் நேரம்

இரண்டு போட்டிகளும் இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்குத் தொடங்கும்.

இந்திய அணிக்கு வெற்றி கட்டாயம் தேவை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேறுவதற்கு இந்திய அணிக்கு நியூசிலாந்துக்கு எதிரான இந்தத் தொடர் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையாக வெற்றி பெறுவது இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்புகளுக்கு உதவும். ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும், அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு நெருக்கடி அதிகரிக்கும்.

இதற்கிடையே, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில், புள்ளிப்பட்டியலில் தங்களது நிலையை வலுப்படுத்த இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES