SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

5 ரன்னில் அவுட்டாக வேண்டியது.. ஜஸ்டு மிஸ்ஸில் தப்பி வரலாற்று சாதனை! ராகுல் நெகிழ்ச்சி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் 5 ரன்களில் இருந்தபோது டிஆர்எஸ் எடுக்க வேண்டாம் எனக் கூறிய கிளென் பிலிப்ஸால் தப்பித்து சதமடித்த கே.எல். ராகுல், போட்டிக்குப் பிறகு அவருக்கு டிரிங்க்ஸ் வாங்கித் தருவதாக நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

Written By R Balaji
Published: Nov 21, 2026, 17:48 IST | Updated: Nov 21, 2026, 17:52 IST
Join

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கே.எல். ராகுல் 5 ரன்களில் இருந்தபோது ஆட்டமிழக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால், நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ் டிஆர்எஸ் எடுக்க வேண்டாம் என்று கேப்டனிடம் கூறியதால் ராகுலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி சதமடிக்க ராகுல், போட்டிக்கு பிறகு பிலிப்ஸுக்கு டிரிங்க்ஸ் வாங்கி தருவதாக நகைச்சுவையாக கூறியுள்ளார்.

இந்த அணியின் இன்னிங்ஸின்போது 7வது ஓவரை மேட் ஹென்றி வீசினார். அப்போது ராகுல் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவர் மீது எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்யும் முறையீடு எழுந்தது. ஆனால், கள நடுவர் குமார் தர்மசேனா அவுட் வழங்கவில்லை. இதையடுத்து டிஆர்எஸ் எடுப்பது குறித்து நியூசிலாந்து கேப்டன் டாம் லாத்தம் ஆலோசித்தார்.

அப்போது பந்து ராகுலின் பேட்டில் பட்டதாக நினைத்த கிளென் பிலிப்ஸ், ரிவ்யூ எடுக்க வேண்டாம் என்று கேப்டனிடம் தெரிவித்தார். இதனால் நியூசிலாந்து அணி டிஆர்எஸ் வாய்ப்பை பயன்படுத்தவில்லை. பின்னர் ரீப்ளேவில் பந்து நேரடியாக விக்கெட்யை காத்திருப்பது தெரியவந்தது. இதனால் ராகுல் ஆட்டமிழந்திருக்க வேண்டிய சூழல் இருந்தது.

இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த ராகுல் டிஆர்எஸ் எடுப்பது குறித்து நியூசிலாந்து வீரர்கள் ஆலோசித்த அந்த 15 வினாடிகள் தனது வாழ்க்கையிலேயே மிகவும் நீண்ட நேரமாக உணரப்பட்டதாக கூறினார். மேலும், பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்றிருக்கலாம் என்று தானு நினைத்ததாக தெரிவித்தார்.

கிளென் பிலிப்ஸ் தொடர்ந்து பந்து பேட்டில் பட்டதாகக் கூறிக்கொண்டிருந்ததால், நியூசிலாந்து வீரர்கள் அவரது கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் வேண்டிக்கொண்டதாக ராகுல் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். தனக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பிலிப்ஸுக்கு நன்றி தெரிவித்த அவர், போட்டி முடிந்ததும் அவருக்கு டிரிங்க்ஸ் வாங்கித் தருவேன் என்றும் கூறினார்.

கிடைத்த வாய்ப்பை வீணாக்காத ராகுல், தொடர்ந்து சிறப்பாக விளையாடி 290 பந்துகளில் 136 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளிலும் டெஸ்ட் சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, கௌதம் கம்பீர் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். மேலும், நான்கு சேனா நாடுகளிலும் டெஸ்ட் சதம் அடித்த முதல் இந்திய தொடக்க ஆட்டக்காரர் என்ற பெருமையையும் ராகுல் பெற்றார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES