• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /மீண்டும் சர்ச்சை.. IND vs PAK! நக்வியிடம் இருந்து கோப்பை வாங்க மறுப்பது ஏன்? பின்னணி என்ன?

மீண்டும் சர்ச்சை.. IND vs PAK! நக்வியிடம் இருந்து கோப்பை வாங்க மறுப்பது ஏன்? பின்னணி என்ன?

2025 ஆடவர் ஆசிய கோப்பையை தொடர்ந்து, 2026 மகளிர் ஆசிய கோப்பையிலும் மொஹ்சின் நக்வியிடம் இருந்து இந்திய அணி கோப்பையை பெறாதது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Written ByR Balaji
Published: Sep 14, 2026, 07:33 IST|Updated: Sep 14, 2026, 07:37 IST
joinshare
மீண்டும் சர்ச்சை.. IND vs PAK! நக்வியிடம் இருந்து கோப்பை வாங்க மறுப்பது ஏன்? பின்னணி என்ன?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

2

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

3

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

4

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

5

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2026 மகளிர் ஆசிய கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 8வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது. ஆனால், இந்திய அணியின் இந்த வரலாற்று வெற்றியை தாண்டி, பரிசளிப்பு விழாவில் நடந்த சம்பவம்தான் தற்போது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகி உள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து இந்திய மகளிர் அணி கோப்பையை பெறவில்லை. இதனால் கடந்த ஆண்டு இந்திய ஆடவர் ஆணியை சுற்றி ஏற்பட்ட ஆசியக் கோப்பை Trophy Controversy தற்போது மீண்டும் தலைதூக்கி உள்ளது. அதாவது, 2025ல் ஆடவர் அணி விவகாரம், 2026ல் மகளிர் அணி விவகாரம் என தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆசிய கோப்பை வெற்றியில் டிராபி சர்ச்சை எழுந்துள்ளது. அப்படி என்ன நடந்தது? இந்திய அணி ஏன் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுக்கிறது? அதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

இந்தியா - இலங்கை: ஆசிய கோப்பை இறுதி போட்டி

2026 மகளிர் ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா தொடக்க முதலே அதிரடியாக விளையாடினர். இருவரும் இணைந்து இலங்கை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

ஸ்மிருதி மந்தனா 39 பந்துகளில் 59 ரன்களும், ஷபாலி வர்மா 68 ரன்களும் எடுத்தனர். இருவரும் இணைந்து 129 ரன்களை குவித்து இந்திய அணிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் எடுத்தது.

பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இலங்கை அணியால், இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. தொடர்ந்து விக்கெட்களை பறிகொடுத்தனர். ஸ்ரீ சரணி 4 விக்கெட்களையும் தீப்தி சர்மா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். இறூதியில் இலங்கை அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மகளிர் ஆசியக் கோப்பையை 8வது முறையாக வென்றது.

இந்தியாவின் வெற்றிக்கு பின் என்ன நடந்தது?

போட்டி முடிந்ததும் வழக்கம்போல் பரிசளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இலங்கை அணிக்கு ரன்னர்-அப் பரிசுகள் வழங்கப்பட்டன. வீராங்கனைகள் மற்றும் Support Staff-க்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியும் அங்கு இருந்தார்.

இதையடுத்து இந்திய அணியின் பரிசளுப்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய வீராங்கனைகள் கோப்பையை பெறுவதற்காக மேடைக்கு வரவில்லை. இதனால் Trophy Presentation நடைபெறாமல் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. அதாவது, இந்திய அணி ஏன் ஆசிய கோப்பையை வாங்க மறுக்கிறது? கோப்பையை பெறாமல் நிராகரிப்பதன் மூலம் என்ன ஆகும் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இதற்கான பின்னணியை புரிந்துக்கொள்ள 2025ம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதி போட்டியை திரும்பி பார்க்க வேண்டும்.

2025ல் என்ன நடந்தது?

2025ல் ஆண்டு ஆடவர் ஆசிய கோப்பை இறுதி போட்டியும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்தான் நடைபெற்றது. அப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. ஆனால் போட்டி முடிந்த பிறகு நடந்த Trophy Presentation-ல் மொஹ்சின் நக்விய்யின் இருப்பு சர்ச்சைக்கு காரணமானது.

நக்வி அப்போது ACC தலைவராகவும், PCB தலைவராகவும் இருந்தார். அதே நேரத்தில் அவர் பாகிஸ்தான் அரசியல் உள்துறை அமைச்சராகவும் இருந்தார். இந்திய மற்றும் பார்கிஸ்தானுக்கு இடையே ஏற்கனவே அரசியல் மற்றும் கிரிக்கெட் தொடர்பான பதற்றமான சூழல் இருந்த நிலையில், நக்வியிடம் இருந்து கோப்பையை பெறுவது தொடர்பாக இந்திய அணியின் நிலைப்பாடு கடுமையாக பேசப்பட்டது.

இறுதியில் இந்திய வீரர்கள் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையை பெறவில்லை. கோப்பை இல்லாமலேயே ந்திய வீரர்கள் தங்களது வெற்றியை கொண்டாடினர். அந்த டிராபியும் இந்திய அணியிடம் நேரடியாக வழங்கப்படாமல் ACC அலுவலகத்தில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மீண்டும் அதே சம்பவம்

2025 ஆம் ஆண்டில் ஆடவர் அணி கோப்பையை வாங்க மறுத்த நிலையில், 2026ல் மகளிர் அணி நக்வியிடம் இருந்து கோப்பையை பெற மறுத்துள்ளது. இந்தியா மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெறாததற்கு அவர் வெறும் ACC நிர்வாகி என்பது மட்டுமல்ல. அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருப்பதுடன், பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் உறவு ஏற்கனவே பல்வேறு அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் மிகவும் உணர்வுபூர்வமானதாக இருந்து வருகிறது. அதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்பான எந்தவொரு கிரிக்கெட் நிகழ்விலும் நக்வியின் பங்கு கூடுதல் கவனத்தை பெறுகிறது.

2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஏற்பட்ட Trophy row-ன் பின்னணியில், 2026 மகளிர் ஆசியக் கோப்பையிலும் இந்திய அணி நக்வியிடம் இருந்து கோப்பையை பெறவில்லை என்பது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்திய மகளிர் அணி ஏன் குறிப்பாக இந்த முறையில் கோப்பையை பெறவில்லை என்பதற்கான முழுமையான தனிப்பட்ட விளக்கத்தை இந்திய அணி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதாகக் கூற முடியாது.

இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் முஜும்தார், இது BCCI-யின் நிலைப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, இதை ஒரு தனிப்பட்ட வீராங்கனையின் முடிவாக மட்டும் பார்ப்பதை விட, BCCI-யின் நிலைப்பாட்டுடன் தொடர்புடைய விவகாரமாகவே பார்க்கப்படுகிறது.

இது வெறும் கிரிக்கெட் பிரச்சனையா?

இந்த விவகாரத்தை வெறும் கிரிக்கெட் பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது. இந்தியா - பாகிஸ்தான் உறவுகள் அரசியல் ரீதியாகவும் மிகவும் சிக்கலான நிலையில் இருக்கும் சூழலில், இரு நாடுகளின் கிரிக்கெட் சந்திக்கும் ஒவ்வொரு தருணமும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

அதிலும் ஒரு புறம் BCCI, மறுபுறம் PCB மற்றும் ACC என அமைப்பு ரீதியான தொடர்புகள் இருப்பதால், Trophy presentation போன்ற ஒரு சாதாரண கிரிக்கெட் நிகழ்வுகூட அரசியல் மற்றும் தூதரக பின்னணியுடன் பேசப்படும் சூழல் உருவாகிறது. 2025-ல் தொடங்கிய Trophy controversy-க்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாத நிலையில், 2026 மகளிர் ஆசியக் கோப்பையிலும் இதே போன்ற சூழல் உருவானது இந்த விவகாரத்தை மீண்டும் தேசிய அளவில் பேசுபொருளாக்கியுள்ளது.

2025-ல் தொடங்கிய Trophy row, 2026-ல் இந்திய மகளிர் அணியையும் சுற்றி மீண்டும் எழுந்துள்ளது. இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றாலும், “கோப்பையை யாரிடம் இருந்து பெறுவது?” என்ற கேள்வி மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் உறவுகளை மையமாக வைத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer