SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

IND vs WI 1st T20: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பா? இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்!

India vs West Indies 1st T20: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

Written By R Balaji
Published: Oct 05, 2026, 11:01 AM IST | Updated: Oct 05, 2026, 11:05 AM IST
Join

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி லக்னோவில் நடைபெறுகிறது. இதையடுத்து அக்டோபர் 9, 11, 14, 17 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறும் லக்னோ, ராஞ்சி, இந்தூர், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய மைதானங்களில் நடைபெறும் அனைத்து போட்டிகளும் இரவு 7 மணிக்கு தொடங்கும். இந்த நிலையில், முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11 குறித்து பார்க்கலாம்.

ஓபனிங் இடத்திற்கு 3 வீரர்கள்

இந்திய டி20 அணியின் தொடக்க வீரர்களுக்கான இடத்தில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய 3 பேர் உள்ளனர்.

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவரும் இன்னிங்ஸை தொடங்க அதிக வாய்ப்புள்ளது. இந்த தொடரில் சஞ்சு சாம்சன் சிறப்பான செயல்பாட்டால் அடுத்தகட்டத்தில் வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் கிடைப்பதே கேள்விக்குறியாகலாம். அவருக்கு பதிலாக கூடுதல் பந்துவீச்சாளரை அணியில் சேர்க்கும் வாய்ப்பும் இருப்பதாக கருதப்படுகிறது.

மிடில் ஆர்டர் எப்படி?

இந்திய அணியின் மூன்றாவது இடத்தில் இஷான் கிஷன் களமிறங்க வாய்ப்புள்ளது. தொடக்கத்தில் குழலுக்கு ஏற்ப நிதானமாக விளையாடி, பின்னர் அதிரடிக்கு மாறும் திறன் கொண்டவர் என்பதால், இந்த இடம் அவருக்கு தொடர்ந்து வழங்கப்படலாம். அவரை தொடர்ந்து திலக் வர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இடம்பெறுவார்கள். போட்டியின் சூழலுக்கு ஏற்ப 4 மற்றும் 5 வது இடங்களில் இருவரும் மாறி மாறி களமிறங்க வாய்ப்புள்ளது.

ஆல்ரவுண்டர்கள் வரிசை

நிதிஷ் ரெட்டிக்கு இந்த தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் அவர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டார். அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவரது பந்துவீச்சு எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த தொடரில் நிதிஷ் ரெட்டி தனது பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

அதேபோல், ஷிவம் துபேவுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.வாஷிங்டர்ன் சுந்தர் அணியில் இல்லாத நிலையில், முதல் டி20 போட்டியில் அக்சர் படேலுக்கு வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

பந்துவீச்சில் யாருக்கு இடம்?

முழுநேர வேகப்பந்துவீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங் முக்கிய வீரராக இடம்பெறுவார். அவருடன் மற்றொரு இடத்திற்காக மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் இடையே போட்டி நிலவுகிறது. இதனால் இவர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது கவனிக்க வேண்டியதாக உள்ளது.

முழுநேர சுழற்பந்துவீச்சாளர் இடத்தில் குல்தீப் யாதவ் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்தியாவின் உத்தேச பிளேயிங் 11

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, ஷ்ரேயஸ் ஐயர், ஷிவம் துபே, நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், மயங்க் யாதவ் / பிரின்ஸ் யாதவ்.

இந்திய டி20 அணி

ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா (துணைக் கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே, அக்சர் படேல், நிதிஷ் ரெட்டி, நமன் தீர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

முதலில் அணியில் இடம்பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்று வீரராக நமன் தீர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES