• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /IND vs NZ ODI: இந்த 5 வீரர்களை எடுக்காதது ஏன்? இந்திய அணி மீது ரசிகர்கள் அதிருப்தி!

IND vs NZ ODI: இந்த 5 வீரர்களை எடுக்காதது ஏன்? இந்திய அணி மீது ரசிகர்கள் அதிருப்தி!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், க்ருணால் பாண்டியா, முகமது ஷமி உள்ளிட்ட 5 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Written ByR Balaji
Published: Oct 17, 2026, 02:03 PM IST|Updated: Oct 17, 2026, 02:10 PM IST
joinshare
IND vs NZ ODI: இந்த 5 வீரர்களை எடுக்காதது ஏன்? இந்திய அணி மீது ரசிகர்கள் அதிருப்தி!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

2

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

3

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

4

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

5

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரும், இறுதியாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், நவம்பர் 4 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. டெஸ்ட் தொடரும் விரைவில் தொடங்க இருப்பதால், டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை கருத்தில் கொண்டு ஒருநாள் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கு ஒரு அணியும், கடைசி இரண்டு போட்டிகளுக்கு மற்றொரு அணியும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு அணிகளிலும் சில முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சமீபத்திய ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டதாக கருதப்படும் 5 வீரர்கள் தேர்வு பட்டியலில் இடம்பெறாதது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏன்?

கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் கே.எல். ராகுல் விளையாடாத சூழலில், அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக குமார் குஷக்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விக்கெட் கீப்பர் பேட்டரான குஷக்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அனுபவம் கொண்ட சாம்சன் ஏன் புறக்கணிக்கப்பட்டார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். சாம்சனின் திறமைக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்பதே சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படும் முக்கிய விமர்சனமாக உள்ளது.

க்ருணால் பாண்டியாவுக்கு இடமில்லை

ஆல்-ரவுண்டரான க்ருணால் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் தனது பங்களிப்பை வழங்கக்கூடியவர். இதனால், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள முக்கிய ஒருநாள் போட்டிகளிலும் உலகக் கோப்பையிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் க்ருணால் இடம்பெறவில்லை. அவருகு பதிலாக நமன் தீர் தேர்வு செய்யப்பட்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அணியின் சமநிலைக்கு க்ருணால் போன்ற ஆல்-ரவுண்டர்கள் உதவக்கூடும் என்பதால், அவரை தேர்வு செய்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முகமது ஷமி இல்லாதது ஏமாற்றம்

இந்திய அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து கேள்விகள் எழுந்து வரும் நிலையில், ஷமி போன்ற அனுப்வம் வாய்ந்த வீரரை தேர்வு செய்திருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, பந்துவீச்சில் ரன்களை கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் இருப்பதாக விமர்சனங்கள் எழும் சூழலில், ஷமியின் அனுபவம் அணிக்கு உதவியிருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

புவனேஷ்வர் குமாரும் புறக்கணிப்பு

புவனேஷ்வர் குமார் தனது பந்துவீச்சு திறமையால் இந்திய அணியில் முக்கிய இடத்தை பிடித்தவர். தேவையான நேரங்களில் பேட்டிங்கிலும் பங்களிக்கக்கூடிய அவருக்கு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

டி20 தொடருக்கான அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ஒருநாள் அணியில் இடம்பெறாதது கேள்விகளை எழுப்பி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள அடுத்த ஒருநாள் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு, அனுபவமிக்க பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவது பயனுள்ளதாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

பிரின்ஸ் யாதவ் தேர்வு செய்யப்படாதது ஏன்?

வேகப்பந்து வீச்சாளரான பிரின்ஸ் யாதவ் தனது ஆட்டத்தால் கவனத்தை ஈர்த்து வருவதாக கூறப்படும் நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு இடம் வழங்கப்படவில்லை. ஏற்கனவே இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒருநாள் தொடரிலும் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. திறமையின் அடிப்படையில் வளர்த்து வரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கும் ரசிக்ர்கள். பிரின்ஸ் யாதவ் தேர்வு பட்டியலில் இடம்பெறாதது குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

நியூசிலாந்து எதிராக இந்திய அணிக்கு சவால்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி, முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சொந்த மண்ணிலேயே இந்திய அணியால் தொடரை வெல்ல முடியாத நிலையில், தற்போது நியூசிலாந்து மண்ணில் நடைபெறவுள்ள போட்டிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

வெளிநாட்டு மண்ணில் நியூசிலாந்தை எதிர்கொள்வது இந்திய அணிக்கு சவாலாக இருக்கலாம் என்பதால், வீரர்கள் தேர்வு குறித்த விவாதமும் அதிகரித்துள்ளது. அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கும், தொடர்ந்து சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில், திறமையை அடிப்படையாக கொண்ட தேர்வா அல்லது எதிர்கால திட்டங்களை கருத்தில் கொண்ட தேர்வா என்ற விவாதம் எழுந்துள்ளது. இருப்பினும், தேர்வுக்குழுவின் முடிவுகளுக்கு பின்னால் உள்ள காரணங்கள் தெளிவாக தெரியாத நிலையில், நியூசிலாந்து தொடரில் இந்திய அணி எவ்வாறு செயல்படுகிறது என்பதையே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.  
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket