IND vs NZ: வைபவ், வருண் விளையாடுவார்களா? போட்டியை எங்கு, எதில் பார்க்கலாம்?
IND vs NZ 1st T20I, Playing 11: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20ஐ போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் விவரம்; போட்டி எப்போது நடைபெறும்?; அதை எதில் பார்க்கலாம்? உள்ளிட்ட விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.
IND vs NZ 1st T20I, Playing 11: இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 டி20ஐ, 5 ஓடிஐ, 2 டெஸ்ட் என இந்த சுற்றுப்பயணம் ஒரு மாதக் காலம் நீடிக்கும். அந்த வகையில், டி20ஐ தொடர் நாளை (அக். 22) தொடங்குகிறது.
இந்திய அணி 2024 மற்றும் 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை வென்றிருந்தாலும், 2023 மற்றும் 2026 ஆசிய விளையாட்டுத் தொடரில் தங்கப் பதக்கம் வென்றிருந்தாலும், தற்போதைய டி20ஐ அணிக்கு சில சிக்கல்களும் இருக்கின்றன.
சமீபத்தில் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான டி20ஐ தொடரை 0-2 என்ற கணக்கிலும்; இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20ஐ தொடரை 0-4 என்ற கணக்கிலும் இந்திய அணி இழந்தது. அதேபோல், சொந்த மண்ணில் நடந்து முடிந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20ஐ தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் டிரா செய்தது.
மேலும் படிக்க | தோனி கொடுத்த டிப்ஸ்... பந்துவீச்சில் உதவியது எப்படி? - சாய் கிஷோர் பகிர்ந்த சீக்ரெட்
ஷ்ரேயாஸ் ஐயர் மீதான அழுத்தம்
அதாவது 2026 டி20 உலகக் கோப்பையை வென்று, ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்ஸி பொறுப்பை கையில் எடுத்த பின்னர், இந்திய அணி ஆசிய விளையாட்டுத் தொடரில் தங்கப் பதக்கத்தை தக்கவைத்தது, ஜிம்பாப்வே தொடரை வென்றது. இன்னும் பெரிய அணியை வீழ்த்தாத நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்ஸி மீதும் அழுத்தம் அதிகமாக உள்ளது.
வருண் சக்ரவர்த்தியின் வருகை
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் ஓரளவு சிறப்பாக இருந்தாலும், பந்துவீச்சுதான் சிக்கலாக வெடித்துள்ளது. சுழற்பந்துவீச்சை பொருத்தவரை அக்சர் பட்டேல், நமன் திர் ஆகியோர் இருந்தாலும் வருண் சக்ரவர்த்தியின் வருகையால் இந்திய அணி சற்று பலம் பெற்றுள்ளது என்றே கூற வேண்டும்.
பெஞ்சில் இருக்கப்போவது யார் யார்?
அதேநேரத்தில், வருண் சக்ரவர்த்தி உடற்தகுதி அடைந்திருந்தாலும், ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்பவே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனலாம். வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பிரின்ஸ் யாதவ் அல்லது மயங்க் யாதவை இந்திய அணி வாய்ப்பளிக்கலாம். குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.
நீண்ட தொடர் என்பதால் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஓரிரு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கலாம். தூபே கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரை போல் பெஞ்சில் இருப்பார் என கருதப்படுகிறது. அந்த வகையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20ஐ போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் கணிப்பை இங்கு காணலாம்.
இந்திய அணி பிளேயிங் 11 கணிப்பு
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, நமன் திர், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் பட்டேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்/வருண் சக்ரவர்த்தி
இந்தியா vs நியூசிலாந்து முதல் போட்டி: எங்கு, எப்போது?
கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெறும் முதல் டி20ஐ போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்கும். மதியம் 12 மணிக்கு டாஸ் வீசப்படும். டி20ஐ போட்டி அனைத்தும் இந்த நேரத்தில்தான் நடைபெற இருக்கிறது.
இந்தியா vs நியூசிலாந்து முதல் போட்டி: எதில் பார்க்கலாம்?
ஓடிடி: Sony Liv
தொலைக்காட்சி: Sony Sports Network சேனல்கள்
மேலும் படிக்க | இந்திய அணியில் கம்பேக்.. புவனேஷ்வர் குமார் விலகல்! மாற்று வீரர் அறிவிப்பு