• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /எஸ்பிஐ வங்கியில் சைபர் தாக்குதல்... டார்க் வெப்பில் கசிந்த வாடிக்கையாளர் விவரங்கள் - என்னாச்சு?

எஸ்பிஐ வங்கியில் சைபர் தாக்குதல்... டார்க் வெப்பில் கசிந்த வாடிக்கையாளர் விவரங்கள் - என்னாச்சு?

பாரத ஸ்டேட் வங்கியில் இணையவழி ஊடுருவல் ஏற்பட்டு, சுமார் 3,897 வாடிக்கையாளர்களின் தனிநபர் மற்றும் கடன் விவரங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written BySudharsan G
Published: Oct 21, 2026, 02:44 PM IST|Updated: Oct 21, 2026, 02:54 PM IST
joinshare
எஸ்பிஐ வங்கியில் சைபர் தாக்குதல்... டார்க் வெப்பில் கசிந்த வாடிக்கையாளர் விவரங்கள் - என்னாச்சு?
Image Credit: State Bank Of India | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
MI-யில் இருந்து ஹர்திக் உட்பட 9 வீரர்கள் நீக்கம்? அடுத்த கேப்டன் இவர்தான்? முழு விவரம்

MI-யில் இருந்து ஹர்திக் உட்பட 9 வீரர்கள் நீக்கம்? அடுத்த கேப்டன் இவர்தான்? முழு விவரம்

2

டெல்லியில் சூடுபிடிக்கும் போராட்ட அரசியல்... ஒரே மேடையில் மாணவர்கள், விவசாயிகள், பிரபலங்கள்!

3

Explained: இந்தியன் ரயில்வே முக்கிய அப்டேட்... அக்டோபர் 27 முதல் இந்த பயணிகளுக்கும் காப்பீடு கிடைக்கும்!!

4

எஸ்பிஐ வங்கியில் சைபர் தாக்குதல்... டார்க் வெப்பில் கசிந்த வாடிக்கையாளர் விவரங்கள் - என்னாச்சு?

5

ஜந்தர் மந்தர் போராட்ட வழக்கில் புதிய திருப்பம்: CJP தலைவர்கள் மனுவை வாபஸ் பெற்றது ஏன்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) இணையவழி ஊடுவருவல் நடைபெற்றதாகவும், இதனால் 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாகவும் ராயட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 16ஆம் தேதி அன்று வாடிக்கையாளர் தரவுகள் கசிந்திருக்கலாம்  என அச்சுறுத்தல் புலனாய்வு சேவை வழங்குநர், பாதுகாப்பு சைபர் முகமை மற்றும் இந்திய கணினி அவசரகால பதிலளிப்புக் குழு ஆகியவை சந்தேகம் எழுப்பும் வகையில் தங்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டதாக எஸ்பிஐ தெரிவித்தது.

மேலும் படிக்க | அகவிலைப்படி 3% அதிகரித்தால் அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? அரியர் எவ்வளவு கிடைக்கும்?

கசிந்த தரவுகள் என்னென்ன?

எஸ்பிஐ வங்கி அளித்துள்ள தகவலின்படி,  வாடிக்கையாளர்களின் பெயர்கள், கைபேசி எண்கள், பிறந்த தேதிகள், மின்னஞ்சல் முகவரிகள், வசிப்பிட முகவரிகள், பிராண்ட் மற்றும் வாடிக்கையாளர் அடையாளங்கள், அத்துடன் கடன் தொடர்பான பதிவுகளும் டார்க் வெப்பில் கசந்துள்ளகாக முதற்கட்ட மதீப்பில் தெரியவந்துள்ளது.

எஸ்பிஐ

3,75,000 ஆணவங்கள்...

குறிப்பாக, டார்க் வெப்பில் 3 லட்சத்து 75 ஆயிரம் ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேநேரத்திதில் வங்கியின் முக்கிய செயல்பாடுகளையோ, நிதி செயல்திறனையோ அல்லது வணிகத் தொடர்ச்சியையோ இந்த இணையவழி ஊடுருவல் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

முக்கிய வணிகச் செயல்பாடுகள் எவ்வித இடையூறும் இன்றி வழக்கம் போல் இயங்கி வருகின்றன என எஸ்பிஐ தெரிவித்திருக்கும் நிலையில், வங்கி தனது இணையவழித் தாக்குதல் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நெறிமுறைகளை உடனடியாகச் செயல்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | SSR vs SIR: இரண்டுக்கும் என்ன வித்தியாசம், SIR-ல் விடுபட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க முடியுமா? Explained

தீவிர விசாரணை

அதேநேரத்தில் கசிந்த தரவுகளின் நம்பகத்தன்மை, அதுகுறித்த முழு விவரங்கள், கசிவுக்கான மூலத்தை கண்டறிதல், கசிவின் அளவைத் தீர்மானித்தல், வாடிக்கையாளர்களுக்கும் வங்கிக்கும் ஏற்படக்கூடிய அபாயங்களை மதிப்பிடுதல் உள்ளிட்டவைக்கு ஒரு விரிவான விசாரணை தேவை என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

3,897 வாடிக்கையாளர் பதிவுகள் மீது விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால், வங்கி அதை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எஸ்பிஐ தெரிவித்தது.

நிதி நிறுவனங்களை குறிவைத்து தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. ஒழுங்குமுறை கண்காணிப்பு தீவிரமடைந்துள்ள ஒரு காலகட்டத்தில் இந்த மீறல் நிகழ்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் வங்கி ஒழுங்குமுறை ஆணையம், கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களின் இணையப் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. கடந்த ஜூலை மாதம் பாங்க் ஆப் பரோடா அதன் 1 TB வாடிக்கையாளர் தரவுகள் கசிந்ததும் நிகழ்ந்தது.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு... எகிறும் எதிர்பார்ப்புகள்: அக்டோபர் 22, 23 8வது ஊதியக் குழுவின் முக்கிய கூட்டம்

Add Zee News as a Preferred Source
TAGS:
India