• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /IND vs SL: டிரா செய்த இலங்கை.. இந்தியாவுக்கு சிக்கல்! WTC பைனலுக்கு இனி என்ன செய்ய வேண்டும்?

IND vs SL: டிரா செய்த இலங்கை.. இந்தியாவுக்கு சிக்கல்! WTC பைனலுக்கு இனி என்ன செய்ய வேண்டும்?

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வரும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

Written ByR Balaji
Published: Aug 27, 2026, 19:37 IST|Updated: Aug 27, 2026, 19:45 IST
joinshare
IND vs SL: டிரா செய்த இலங்கை.. இந்தியாவுக்கு சிக்கல்! WTC பைனலுக்கு இனி என்ன செய்ய வேண்டும்?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, 2வது போட்டியிலும் வென்று தொடரை 2-0 என கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் வெற்றியை தடுத்து நிறுத்திய இலங்கை, போட்டியை டிரா செய்து தொடரை 1-0 என முடித்துள்ளது. இந்த முடிவு இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இலங்கை போட்டி எந்த மாதிரியான பின்னடைவை இந்தியாவுக்கு கொடுத்துள்ளது. இனி இந்திய அணி என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட விவரங்களை இங்கு விரிவாக பார்க்கலாம்.

போட்டியை டிரா செய்த இலங்கை

இப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 138 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 509 ரன்கள் எடுத்த நிலையில், இன்னிங்ஸை டிக்லர் செய்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை விளையாடிய இலங்கை அணி 290 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. இதையடுத்து எளிதில் இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸையும் வீழ்த்தி வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுத்தது.

ஆனால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை மொத்தமாக தட்டிப்பறித்தார் சோனல் தினுஷா. மற்ற வீரர்கள் அனைவரும் ஆட்டமிழந்தாலும் தொடர்ந்து களத்தில் நின்று ரன்களை குவித்தார் சோனல் தினுஷா 133 (264). அவருடன் கேஷரா நுவந்தாவும் 46 (150) சிறப்பாக விளையாடினார். இலங்கை அணி, 5ஆவது நாள் முடிவுவரை 429/9 ரன்களை எடுத்து, 200+ ரன்கள் முன்னிலை பெற்று, இப்போட்டியை டிரா செய்து அசத்தியுள்ளது.

டிராவால் இந்தியாவுக்கு என்ன சிக்கல்?

WTC தொடரில் வெற்றிக்கு 12 புள்ளிகளும், டிராவுக்கு 4 புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், இறுதிப்போட்டிக்கு செல்ல அணிகளின் மொத்த புள்ளிகளை விட Points Percentage (PCT) முக்கியமானது.

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றிருந்தால், அதன் WTC PCT குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருக்கும். ஆனால் போட்டி டிராவில் முடிந்ததால் இந்தியாவுக்கு கிடைத்தது 4 புள்ளிகள் மட்டுமே. இதனால் இந்தியாவின் PCT சுமார் 51.52 சதவீதமாக குறைந்துள்ளது. தற்போது இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

இதனால் முதல் இரண்டு இடங்களுக்குள் சென்று WTC இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா இனி வரும் போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இனி இந்தியா என்ன செய்ய வேண்டும்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சுழற்சியில் இந்திய அணிக்கு இன்னும் 7 போட்டிகள் எஞ்சியுள்ளன. நியூசிலாந்து மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளும், அதன்பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்த 7 போட்டிகளும் இந்தியாவின் WTC இறுதிப்போட்டி வாய்ப்பை தீர்மானிக்கக்கூடியதாக மாறியுள்ளது.

தற்போதைய நிலையில், இந்திய அணி இந்த 7 போட்டிகளில் குறைந்தது 6 வெற்றிகளை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. குறிப்பாக, நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஆக வேண்டும்.

ஒருவேளை நியூசிலாந்து மண்ணில் இந்தியா இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்தால், அதன் WTC இறுதிப்போட்டி வாய்ப்பு மேலும் சிக்கலாகிவிடும். அப்படியான சூழலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதன்பிறகும் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை பொறுத்தே இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு அமையும்.

சொதப்பும் சுழற்பந்து வீச்சு

இந்திய அணியின் மற்றொரு கவலையாக தற்போது சுழற்பந்து வீச்சு மாறியுள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை பிரிந்த பிறகு, இந்தியாவின் ஸ்பின் பவுலிங் முன்பு இருந்த அளவுக்கு வலுவாக இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

அஸ்வின் ஓய்வு பெற்ற பிறகு, அவரது இடத்தை வாஷிங்டன் சுந்தர் நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஸ்வினின் அனுபவத்தையும் தொடர்ச்சியான தாக்கத்தையும் இதுவரை அவரால் முழுமையாக ஈடுசெய்ய முடியவில்லை. அக்சர் படேலும் அணிக்கு பயனுள்ளதாக இருந்தாலும், அஸ்வின் - ஜடேஜா கூட்டணி ஏற்படுத்திய தாக்கத்தை மீண்டும் உருவாக்குவது இந்தியாவுக்கு சவாலாகவே உள்ளது.

தற்போது மனவ் சுதார் போன்ற இளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஆனால், WTC இறுதிப்போட்டி போன்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி செல்லும் இந்திய அணிக்கு இவர்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உதவும் என்பது இனிவரும் போட்டிகளில்தான் தெரியவரும்.

இதனால், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த முடியாமல் போனது இந்தியாவுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இனி வரும் 7 போட்டிகளில் பேட்டிங் மட்டுமின்றி, பந்துவீச்சிலும் குறிப்பாக சுழற்பந்து வீச்சில் இந்தியா வலுவாக செயல்பட்டால் மட்டுமே WTC இறுதிப்போட்டிக்கான பாதையை சரி செய்ய முடியும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket