• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /Ind vs WI 2nd ODI: இந்தியா பிளேயிங் 11 இதுதான்.. பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் இவரா?

Ind vs WI 2nd ODI: இந்தியா பிளேயிங் 11 இதுதான்.. பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் இவரா?

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 30) நடைபெற இருக்கும் நிலையில், இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும்? ஏதேனும் மாற்றம் இருக்குமா? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Written ByR Balaji
Published: Sep 29, 2026, 03:23 PM IST|Updated: Sep 29, 2026, 03:33 PM IST
joinshare
Ind vs WI 2nd ODI: இந்தியா பிளேயிங் 11 இதுதான்.. பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் இவரா?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, இரு அணிகளும் மோதும் 2 வது ஒருநாள் போட்டி செப்டம்பர் 30 ஆம் தேதி கெளகாத்தியில் நடைபெறுகிறது.

முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 295 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 41.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்களை மட்டும் இழந்து 300 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இலக்கை எளிதாக எட்டி வெற்றியை பதிவு செய்தது.

தற்போது 2 வது போட்டிக்காக இந்திய வீரர்கள் கெளகாத்தியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. முதல் போட்டியில் விளையாடிய வீரர்களில் சிலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது அணியில் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடக்க வீரர்கள்

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் கிளமிறங்குவது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் ரோகித் சர்மா 35 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு மாற்று வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் இருந்தாலும் 2 வது போட்டியிலும் ரோகித்துக்கே வாய்ப்பு வழங்கப்படலாம்.

இந்த தொடரில் ரோகித் சர்மா தனது பேட்டிங் மூலம் பெரிய பங்களிப்பை வழங்க வேண்டிய சூழல் உள்ளது. அவருடன் கேப்டன் சுப்மன் கில் வழக்கம்போல் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது.

மிடில் ஆர்டர் எப்படி?

3 வது இடத்தில் விராட் கோலி இடம்பெறுவது உறுதி. அவரை தொடர்ந்து ருதுராஜ் கெயக்வாட், கே.எல். ராகுல் மற்றும் நமன் தீர் ஆகியோர் மிடில் ஆர்டரில் இடம் பெறலாம்.

முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 19 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு பவுண்டரி கூட அடிக்காத நிலையில், 2 வது போட்டியில் அவரை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

அதே நேரத்தில் கே.எல். ராகுல் மற்றும் நமன் தீர் ஆகியோர் அணியில் இடம் பெற்றிருந்தாலும் முதல் போட்டியில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே அடுத்த போட்டியிலும் அவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஆல்ரவுண்டர் வரிசை

ஆல்ரவுண்டர்களில் நிதிஷ் ரெட்டி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது. முதல் போட்டியில் நிதிஷ் ரெட்டி பந்துவீச்சில் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 9 என்ற எகானமியில் ரன்களை வழங்கியிந்தாலும், இந்திய அணி அந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற்றதால், அவரை உடனடியக நீக்க வாய்ப்பு குறைவு.

பந்துவீச்சில் மாற்றம் வருமா?

பந்துவீச்சு பிரிவில் குல்தீப் யாதவ் மற்றும் குர்நூர் பிரார் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அதேசமயம் பிரசித் கிருஷ்ணாவின் இடம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. முதல் போட்டியில் புதிய பந்தில் பிரசித் கிருஷ்ணாவால் எதிரணியின் பேட்டிங்கில் போதிய அழுத்தத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் அணி பவர் பிளே ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ரன்களை சேர்த்தது.

இதனால் 2 வது போட்டியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு ப்திலாக முகமது சிராஜை களமிறக்குவது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கலாம்.

இந்திய அணியின் உத்தேச பிளேயிங் 11

ரோகித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், நமன் தீர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், குர்நூர் பிரார், பிரசித் கிருஷ்ணா அல்லது முகமது சிராஜ்.

இந்திய அணி 2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் பட்சத்தில், 3வது போட்டியில் அணியில் சில மாற்றங்களைச் செய்யும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக ஆகிப் நபி, துரூவ் ஜூரெல் உள்ளிட்ட வீரர்களுக்கு அடுத்த போட்டியில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்படலாம்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Cricket Team