SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

IND vs WI: "இப்படி பீல்டிங் பண்ணா உலகக் கோப்பையை மறந்திர வேண்டியதுதான்" – கொந்தளித்த சுப்மன் கில்!

மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி வெற்றியை பதிவு செய்த நிலையில், இந்திய அணியின் தோல்விக்கான காரணத்தை கேப்ட்ன சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Written By R Balaji
Published: Oct 04, 2026, 11:36 AM IST | Updated: Oct 04, 2026, 11:42 AM IST
Join

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 351 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவியது. 352 ரன்கள் என்ற பெரிய இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்பது குறித்து கேப்டன் சுப்மன் கில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று சாதனை

மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் மற்றும் இதர போட்டி விவரங்களை தாண்டி, இரு அணிகளின் பேட்டிங்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 351 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான பேட்டிங் மூலம் இலக்கை எட்டியது.

இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச இலக்கு விரட்டலை வெஸ்ட் இண்டீஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன்பபு, 2019 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக 328 ரன்கள் எடுத்ததே அந்த அணியின் அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங்காக இருந்தது.

இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன?

351 ரன்கள் எடுத்தும் இந்திய அணியால் வெற்றி பெற முடியாதது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. போட்டிக்கு பிறகு பேசிய கேப்டன் சுப்மன் கில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பெரிய குறைகள் எதுவும் இல்லை. அதேநேரத்தில் பீல்டிங்கில் இந்திய அணி தொடர்ந்து தவறுகளை செய்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த தொடரில் மட்டும் இந்திய வீரர்கள் 6 முதல் 7 கேட்ச்களை தவறவிட்டதாக கூறிய கில், முக்கியமான தருணங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை பய்ன்படுத்த தவறுவது அணியின் வெற்றி வாய்ப்பை பாதிப்பதாக தெரிவித்தார். குறிப்பாக, ஒருநாள் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இதுபோன்ற பீல்டிங் குறைபாடுகளுடன் கள்மிறங்கினால் கோப்பையை வெல்வது கடினமாகிவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டர்களுக்கு இந்திய வீரர்கள் வழங்கிய வாய்ப்புகள் ஆட்டத்தின் போக்கையே மாற்றின. ஜான் கேம்ப்பெல் அடித்த பந்தை குர்நூர் பிரார் தவறவிட்டார். அதேபோல், அமிர் ஜாங்கூ கொடுத்த கேட்ச் வாய்ப்பை விராட் கோலியால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

இந்த வாய்ப்பிலிருந்து தப்பிய ஜாங்கூ தொடர்ந்து சிறப்பாக விளையாடி 56 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் 5 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதேபோல், மேத்யூ ஃபோர்ட் அடித்த பந்தையும் குல்தீப் யாதவ் கேட்ச் செய்ய தவறினார்.

முக்கியமான நேரங்களில் விக்கெட்களை வீழ்த்தும் வாய்ப்புகள் கிடைத்தும், இந்திய வீரர்கள் அவற்றை தவறவிட்டது. அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இதுவே வெற்றியை தீர்மானித்த முக்கிய அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ராகுல், ரோகித் சிறப்பான ஆட்டம்

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா வலுவான தொடக்கத்தை வழங்கினார். 85 பந்துகளை எதிர்கொண்ட அவர், 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் எடுட்த்தார். இருப்பினும் கேப்டன் சுப்மன் கில் 6 பந்துகளில் ஒரு ரன்னும், விராட் கோலி ஒரு பந்து மட்டுமே எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இதன்பிறகு ருதுராஜ் கெய்க்வாட் 69 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். முறுமுனையில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 87 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்களுடன் 129 ரன்கள் குவித்தார். இறுதிகட்டத்தில் நமன் தீர் 21 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 351 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.

சாய் ஹோப் அபாரம்.. வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

352 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேடன் சாய் ஹோப் மிகப்பெரிய பலமாக இருந்தார். பொறுப்புடன் விளையாடிய அவர், 143 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 162 ரன்கள் குவித்தார்.

அமிர் ஜாங்கூ 67 ரன்களும், கீமோ பால் 35 பந்துகளில் 44 ரன்களும் எடுத்தனர்.ரூதர்போர்ட் 25 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 48.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்திய அணியின் வெற்றி கனவை தகர்த்தது. பேட்டிங்கில் வலுவான ஸ்கோரை பதிவு செய்தபோதிலும், பீல்டிங்கில் செய்த தவறுகளால் இந்திய அணி வெற்றியை இழந்தது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES