IPL 2027: எந்த அணியிடம் எவ்வளவு பணம்? ஐபிஎல் மினி ஏலம் எங்கு, எப்போது? Explained
ஐபிஎல் ஏலம் எப்போது, எங்கு நடைபெறுகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு அணிகள் தங்கள் பர்ஸில் எவ்வளவு செலவழித்து உள்ளன...?, எவ்வளவு கையில் இருக்கின்றன...? ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்...? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் அதன் 20வது சீசனை நெருங்கி உள்ளது. வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் - ஏப்ரல் - மே மாதங்களில் ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற இருக்கிறது.
அந்த வகையில், 20வது சீசனை முன்னிட்டு ஐபிஎல் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் மினி ஏலத்திற்கு 10 அணிகளும் தங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலையும், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளன.
மேலும் படிக்க | IPL 2027: கையில் ரூ. 28 கோடி.. CSK டார்கெட் செய்யும் 8 வீரர்கள்? யார் யார் பாருங்க!
இந்நிலையில் ஐபிஎல் ஏலம் எப்போது, எங்கு நடைபெறுகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஒவ்வொரு அணிகள் தங்கள் பர்ஸில் எவ்வளவு செலவழித்து உள்ளன...?, எவ்வளவு கையில் இருக்கின்றன...? ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்...? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
ஐபிஎல் அணிகளின் நிலவரம்
| அணிகள் | தக்கவைக்கப்பட்ட வீரர்கள் | வெளிநாட்டு வீரர்கள் | தேவைப்படும் வீரர்கள் | தேவைப்படும் வெளிநாட்டு வீரர்கள் | செலவிட்ட தொகை (ரூ. கோடி) | கையிருப்பு தொகை (ரூ. கோடி) |
| CSK | 19 | 6 | 6 | 2 | 101.95 | 28.05 |
| MI | 16 | 6 | 9 | 2 | 97.40 | 32.60 |
| KKR | 17 | 5 | 8 | 3 | 88.35 | 41.65 |
| RCB | 20 | 7 | 5 | 1 | 115.85 | 14.15 |
| SRH | 18 | 5 | 7 | 3 | 89.85 | 40.15 |
| RR | 19 | 5 | 6 | 3 | 102.95 | 27.05 |
| GT | 22 | 6 | 3 | 2 | 121.25 | 8.75 |
| PBKS | 19 | 6 | 6 | 2 | 114.40 | 18.60 |
| DC | 16 | 4 | 9 | 4 | 90.50 | 39.50 |
| LSG | 18 | 5 | 7 | 3 | 82.55 | 47.45 |
ஐபிஎல் மினி ஏலம் - ஹைலைட்ஸ்
- ஐபிஎல் அணிகள் 55 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 184 வீரர்களை தக்கவைத்துள்ளன.
- 10 அணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 66 வீரர்கள் தேவை. அதில் 25 வெளிநாட்டு வீரர்களை எடுக்கலாம்.
- மொத்தம் 10 அணிகளும் சேர்ந்து ரூ.1,002.05 கோடி செலவிட்டுள்ளன.
- மொத்தம் 10 அணிகளுக்கும் சேர்த்து ரூ.297.95 கோடி கையிருப்பு உள்ளது.
- அதிகபட்சமாக குஜராத் அணி 22 வீரர்களை தக்கவைத்துள்ளது. இந்த அணி ஏலத்திற்கு முன்னர் 2-3 வீரர்களை டிரேட் செய்ய அதிக வாய்ப்புள்ளது.
- அதிக வெளிநாட்டு வீரர்களை ஆர்சிபி அணி தக்கவைத்துள்ளது. 7 பேரை தக்கவைத்திருப்பதால் ஒரே ஒரு வெளிநாட்டு வீரரை மட்டுமே அவர்களால் ஏலத்தில் எடுக்க முடியும்.
- அதிகபட்ச கையிருப்பு தொகையாக லக்னோ அணி ரூ.47.45 கோடி உடனும், அடுத்து கேகேஆர் ரூ.41.65 கோடி உடனும், ஹைதராபாத் ரூ.40.15 கோடி உடனும், டெல்லி ரூ.39.50 கோடி உடனும் ஏலத்திற்கு செல்கின்றன.
- குறைந்தபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.8.75 கோடி உடன் ஏலத்திற்கு வரும்.
ஐபிஎல் ஏலம் எங்கு, எப்போது?
ஐபிஎல் 2027 மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி அன்று கோவா ஐடிசி கிராண்ட் கோவா ஹோட்டலில் காலை 11 மணிக்கு தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் டிரேட் நிலவரம்
வீரர்களை தக்கவைக்கும் கடைசி நாள்தான் நேற்றுடன் (நவ. 17) நிறைவடைந்தது. ஆனால் டிரேடிங் பேச்சுவார்த்தை இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஐபிஎல் ஏலத்திற்கு ஒரு வாரம் முன்னர் (டிச. 9) வரை ஐபிஎல் டிரேட் நடைபெற அனுமதி உள்ளது.
ஐபிஎல் ஏலத்திற்கு மறுநாள் முதல் போட்டி தொடங்கும் ஒரு நாள் முன்னர் வரை ஐபிஎல் டிரேடிங் நடைபெறும். எனவே, ஏலத்திற்கு பிறகும் கூட வீரர்கள் அணி மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அணிகளின் ஸ்குவாட் மாற்றத்திற்கு உட்பட்டதுதான்.
ஐபிஎல் அணிகள் - தக்கவைத்த வீரர்கள் விவரம்
சென்னை சூப்பர் கிங்ஸ்
அகேல் ஹொசைன், அன்சுல் கம்போஜ், ஆயுஷ் மத்ரே, டெவால்ட் பிரெவிஸ், குர்ஜப்னீத் சிங், ஜாக் எட்வர்ட்ஸ் (Traded In), ஜேமி ஓவர்டன், கார்த்திக் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன் (Traded In), முகேஷ் சவுத்ரி, நூர் அகமது, ராகுல் சாஹர், ராமகிருஷ்ண கோஷ், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சர்பராஸ் கான், சிவம் துபே, ஸ்ரேயாஸ் கோபால், உர்வில் படேல்.
மும்பை இந்தியன்ஸ்
அர்ஷ்தீப் சிங் (Traded In), அஸ்வனி குமார், கார்பின் போஷ், ஜஸ்பிரித் பும்ரா, மிட்செல் சான்ட்னர், நமன் திர், குயின்டன் டி காக், ரகு சர்மா, ராஜ் அங்கத் பாவா, ரோஹித் சர்மா, ரியான் ரிக்கெல்டன், ஷர்துல் தாக்கூர், ஷெர்பேன் ரூதர்போர்ட், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, வில் ஜாக்ஸ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அங்கிரிஷ் ரகுவன்ஷி, அனுகுல் ராய், கேமரூன் கிரீன், பின் ஆலன், ஹர்ஷித் ராணா, கார்த்திக் தியாகி, மனிஷ் பாண்டே, பிரசாந்த் சோலங்கி, ரமன்தீப் சிங், ரிங்கு சிங், ரோவ்மன் பவல், சர்தக் ரஞ்சன், சௌரப் துபே, சுனில் நரைன், டிம் செய்ஃபர்ட், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
அபிநந்தன் சிங், புவனேஷ்வர் குமார், தேவ்தத் படிக்கல், ஜேக்கப் டஃபி, ஜிதேஷ் சர்மா, ஜோர்டான் காக்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், கனிஷ்க் சௌகான், குருணால் பாண்டியா, நுவான் துஷாரா, பில் சால்ட், ரஜத் படிதார், ரசிக் தார், ரொமாரியோ ஷெப்பர்ட், சுயாஷ் சர்மா, டிம் டேவிட், வெங்கடேஷ் ஐயர், விக்கி ஓஸ்ட்வால், விராட் கோலி, யாஷ் தயாள்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
அபிஷேக் சர்மா, அனிகேத் வர்மா, பிரைடன் கார்ஸ், எஷான் மலிங்கா, ஹர்ஷ் துபே, ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷன், கலீல் அகமது (Traded In), கிரெயின்ஸ் ஃபுலெட்ரா, நாதன் எல்லிஸ் (Traded In), நிதிஷ் குமார் ரெட்டி, பாட் கம்மின்ஸ், பிரஃபுல் ஹிங்கே, சாகிப் ஹுசைன், சலில் அரோரா, ஷிவாங் குமார், ஸ்மரன் ரவிச்சந்திரன், டி. நடராஜன் (Traded In).
ராஜஸ்தான் ராயல்ஸ்
அமன் ராவ் பெராலா, பிரிஜேஷ் சர்மா, தசுன் ஷனகா, துருவ் ஜூரல், டொனோவன் ஃபெரீரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், மணிமாறன் சித்தார்த் (Traded In), முகமது ஷமி (Traded In), நான்ட்ரே பர்கர், ரவி பிஷ்னோய், ரவீந்திர ஜடேஜா, ரியான் பராக், சந்தீப் சர்மா, சுபம் துபே, சுஷாந்த் மிஸ்ரா, வைபவ் சூர்யவன்ஷி, யாஷ் ராஜ் புஞ்சா, யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
குஜராத் டைட்டன்ஸ்
அனுஜ் ராவத், அசோக் சர்மா, கிளென் பிலிப்ஸ், குர்னூர் சிங் பிரார், ஹர்ஷல் படேல் (Traded In), ஜேசன் ஹோல்டர், ஜெயந்த் யாதவ், ஜோஸ் பட்லர், ககிசோ ரபாடா, குமார் குஷாக்ரா, மானவ் சுதார், முகமது சிராஜ், முகமது அர்ஷத் கான், நிஷாந்த் சிந்து, பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், சாய் சுதர்சன், சுப்மன் கில், டாம் பான்டன், வாஷிங்டன் சுந்தர்.
பஞ்சாப் கிங்ஸ்
அஸ்மதுல்லா ஒமர்சாய், பென் துவார்ஷுயிஸ், கூப்பர் கன்னோலி, ஹர்திக் பாண்டியா (Traded In), ஹர்னூர் பன்னு, ஹர்பிரீத் பிரார், மார்கோ ஜான்சன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், முஷீர் கான், பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷஷாங்க் சிங், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யன்ஷ் ஷெட்ஜ், விஷ்ணு வினோத், வைஷாக் விஜயகுமார், சேவியர் பார்ட்லெட், யாஷ் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல்.
டெல்லி கேபிடல்ஸ்
அசுதோஷ் சர்மா, அகிப் தார், அக்சர் படேல், டேவிட் மில்லர்*, கே.எல். ராகுல், கைல் ஜேமிசன், லுங்கிசானி இங்கிடி, மாதவ் திவாரி, முகேஷ் குமார், பிரித்வி ஷா, ரிஷப் பந்த் (Traded In), சமீர் ரிஸ்வி, திரிபுரானா விஜய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்*, விப்ராஜ் நிகாம், ஜீஷன் அன்சாரி (Traded In)
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
அப்துல் சமத், ஐடன் மார்க்ரம், ஆகாஷ் சிங், அக்ஷத் ரகுவன்ஷி, அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷின் குல்கர்னி, ஆயுஷ் பதோனி, திக்வேஷ் ரதி, ஜோஷ் இங்கிலிஸ், குல்தீப் யாதவ் (Traded In), மயங்க் யாதவ், மிட்செல் மார்ஷ், மொஹ்சின் கான், முகுல் சவுத்ரி, நிக்கோலஸ் பூரன், பிரின்ஸ் யாதவ், சாம் கர்ரன் (Traded In), ஷாபாஸ் அகமது.
IPL 2027: டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், ஜேக்கப் பெத்தேல் விடுவிக்கப்பட்டது ஏன்? Explained