• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /Explained: IPL மினி ஏலத்தில் இந்த 3 TNPL வீரர்களுக்கு மவுஸ் இருக்கும்... ஏன் தெரியுமா?

Explained: IPL மினி ஏலத்தில் இந்த 3 TNPL வீரர்களுக்கு மவுஸ் இருக்கும்... ஏன் தெரியுமா?

ஐபிஎல் 2027 மினி ஏலத்தில், இந்த மூன்று டிஎன்பிஎல் வீரர்களுக்கும் நிச்சயம் கடும் போட்டி இருக்கும் என கணிக்கப்படுகிறது. அந்த வகையில், அணிகளின் தேவை என்ன...? இவர்களுக்கு ஏன் டிமாண்ட் ஜாஸ்தி...? என்பதை விரிவாக இங்கு பார்க்கலாம்.

Written BySudharsan G
Published: Sep 01, 2026, 17:28 IST|Updated: Sep 01, 2026, 17:54 IST
joinshare
Explained: IPL மினி ஏலத்தில் இந்த 3 TNPL வீரர்களுக்கு மவுஸ் இருக்கும்... ஏன் தெரியுமா?
Image Credit: AI GENERATED IMAGE - ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஐபிஎல் தொடரில் திறமை வாய்ந்த வீரர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும். உதாரணத்திற்கு, தமிழ்நாட்டு வீரர் என்ற காரணத்தினாலேயே சிஎஸ்கே அணியில் ஒருவருக்கு இடம் கிடைத்துவிடாது. அணியின் காம்பினேஷனுக்கு ஏற்றவராக இருந்தால் மட்டுமே  வாய்ப்பு வரும்.

அதிலும் மெகா ஏலத்தை விட மினி ஏலத்தில் ஒரு வீரரின் திறமைக்கு ஏற்ற மதிப்பும் கிடைக்கும். காரணம், மினி ஏலத்தில் தேவையை விட, ஏலத்திற்கு வரும் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அதிக டிமாண்ட் காரணாக திறமையான மற்றும் அதிகம் தேவைப்படும் வீரர்கள் அதிக தொகைக்கு எடுக்கப்படுவார்கள். அது அந்த காலகட்டத்தை பொறுத்தது. ஸ்டார்க் 2024 மினி ஏலத்தில் ரூ.24 கோடிக்கு எடுக்கப்பட அதுவே காரணம்.

கவனம் ஈர்த்த வீரர்கள் யார் யார்...?

அப்படியிருக்க, 2027 ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறும். தற்போதுதான் டிஎன்பிஎல் தொடர் நிறைவடைந்திருக்கிறது. இதிலும் பல திறமையான வீரர்கள் நிச்சயம் ஐபிஎல் அணிகளின் கண்களின் சிக்கியிருப்பார்கள். 

அந்த வகையில், நம் கண்ணிலும் மூன்று தமிழக வீரர்கள் சிக்கியிருக்கிறார்கள். அந்த மூன்று வீரர்கள் யார் யார்...? எந்தெந்த அணிகள் அவர்களுக்கு குறிவைக்கும்...? என்பதை இங்கு விளக்கமாக காணலாம்.

ஐபிஎல் தொடரில் விளையாடும் தமிழக வீரர்கள்

வீரர்கள் அணி  ரோல்
குர்ஜப்னீத் சிங்சென்னை சூப்பர் கிங்ஸ் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்
டி நடராஜன்டெல்லி கேப்பிடல்ஸ் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்
வருண் சக்ரவர்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்மிஸ்ட்ரி சுழற்பந்துவீச்சாளர்
மணிமாறன் சித்தார்த் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்இடதுகை சுழற்பந்துவீச்சாளர்
வாஷிங்டன் சுந்தர் குஜராத் டைட்டன்ஸ்சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்
சாய் சுதர்சன்குஜராத் டைட்டன்ஸ் ஓபனிங் பேட்டர்
ஷாருக் கான் குஜராத் டைட்டன்ஸ் பேட்டர் - பினிஷர்
சாய் கிஷோர் குஜராத் டைட்டன்ஸ்இடதுகை சுழற்பந்துவீச்சாளர்

தற்சமயம் 5 அணிகளில் 8 தமிழ்நாட்டு வீரர்கள் விளையாடி வரும் நிலையில், வரும் 2027 சீசனில் இந்த மூன்று பேரும் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது.

3 வீரர்கள் யார் யார்...?

1. தீபேஷ் தீபேந்திரன்

18 வயது வலதுகை வேகப்பந்துவீச்சாளர் ஆவர். மணிக்கு 146 கி.மீ., வேகத்தில் பந்துவீசக்கூடியவர். தொடர்ச்சியாக 135 கி.மீ., வேகத்தில் வீசும் வல்லமை படைத்தவர். திடீரென குறைந்த வேகத்திலும் பந்துவீசக் கூடியவர்.

ஸ்பெஷாலிட்டி

  • பவர்பிளேவில் ஆடுகளத்தின் தன்மையை புரிந்துகொண்டு, அதை பயன்படுத்தி பந்து இரு பக்கமும் நகரச் செய்யும் திறன் கொண்டவர். இவரின் சீம் பொஷிஷனும் சிறப்பாக இருக்கும்.
  • ஹார்ட் லெந்தை அடிக்கக் கூடியவர். நல்ல பிட்னஸை பெற்றிருக்கும் இவர் தனது எக்பிரஸ் வேகத்தால் ஹார்ட் லெந்தில் வீசி, களத்தில் இருந்து கூடுதல் பவுன்ஸை உருவாக்குவதில் வல்லவர். பவர்பிளேவில் அபிஷேக் சர்மா போன்றோர் புல் லெந்த் பந்துகளை இறங்கி அடிப்பார்கள், ஷார்ட் பந்துகளுக்கு புல் ஷாட் அடிப்பார்கள். ஆனால் இந்த பந்தில் பெரிதாக ரன் அடிப்பது சிரமம்.
  • பவர்பிளேவில் 2 ஓவர்களை வீசக்கூடியவர். நடுவே ஒரு ஓவரும், கடைசியில் ஒரு ஓவரும் வீச செய்யலாம். பார்ட்னர்ஷிப்பை உடைக்க வேண்டும், விக்கெட்டை எடுத்தே ஆக வேண்டும் என்றால் இவரை நிச்சயமாக பந்துவீச செய்யலாம்.
  • மதுரை பேந்தர்ஸ் அணிக்காக விளையாடி நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். சென்னை சேப்பாக்கத்தில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார். இந்தாண்டின் தொடக்கத்தில் உலகக் கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். அதில், 5 போட்டிகளில் 6 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

Deepesh Devendran consistently hitting 146+ kph in TNPL. @ChennaiIPL Pls Don't Bottle Him. We Need A Indian Pacer Like Him. Can Swing Can Bowl Slower Can Bowl Yorker As Well. Can Bat Also pic.twitter.com/ntKvxPZwbq

— Harinder (@cricketmetric) August 20, 2026

டிமாண்ட்

  • உள்நாட்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எப்போதுமே மவுஸ் ஜாஸ்தி. இளம் வயதிலேயே அதிவேகமாக வீசுபவர்கள் கிடைப்பதும் அரிது. எனவே பவர்பிளேவில் விக்கெட் எடுக்க திட்டமிடும் அணிகள் இவரை நிச்சயம் எடுக்கும். 
  • சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இவருக்கு முயற்சிக்கலாம். ஆனால், பாரத் அருண் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ள லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் இவரை எடுக்க வாய்ப்புள்ளது.

2. பி.சச்சின்

இந்தாண்டு கோவை அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு இவரே முக்கிய காரணம். 2023ஆம் ஆண்டில் இருந்து டிஎன்பிஎல் தொடரில் விளையாடி வரும் இவர், இந்தாண்டு 10 போட்டிகளில் 428 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றிருக்கிறார்.

ஸ்பெஷாலிட்டி

  • இன்னிங்ஸை கட்டமைத்து நிதானமாக விளையாடுவதாக இருந்தாலும் சரி, அதிரடியாக விளையாடுவதாக இருந்தாலும் சரி இவருக்கு கை வந்த கலை.
  • டி20ஐ ஸ்ட்ரைக் ரேட்டின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிந்ததுதான். டாப் ஆர்டரும், மிடில் ஆர்டரும் சரிந்தாலும் நிதானமாக நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் அணியை கரையேற்றி செல்வதில் இவர் வித்தகர். ஒரு பெர்வக்ட் இடதுகை நம்பர் 3 பேட்டர். சிஎஸ்கேவுக்கு ஒரு காலத்தில் ரெய்னா இருந்தது போல...
  • மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களின் லெந்தை சிறப்பாக கணித்து ஸ்லாக்-ஸ்வீப், லாங்-ஆன் திசைகளில் அடிக்கும் நுட்பம் கொண்டவர்.
  • நாக்-அவுட், பைனல் என அழுத்தமான போட்டிகளிலும் பொறுப்பாக விளையாடக்கூடியவர். இதே கோவை கிங்ஸ் அணியில் இருந்தே சாய் சுதர்சனும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்குச் சென்றார். அந்த வகையில் இவரையும் ஐபிஎல் அணிகள் கொத்தித் தூக்கப் பார்க்கும்.

Sachin B was pure box office! 🎬

🏏 August 04-28 | Dindigul & Chennai.
📺 Watch LIVE on Sony Sports Ten 4 Tamil & the TNPL YouTube Channel.
🎟️ Book your tickets now on the District by Zomato app.#TNPL10 #TNPL2026 #NammaOoruNammaGethu #Season10SemmaGethu #DecadeOfKondattam pic.twitter.com/NFoTH8m2PK

— TNPL (@TNPremierLeague) August 6, 2026

டிமாண்ட்

மினி ஏலத்தில் இந்திய டாப்-ஆர்டர் இடதுகை பேட்டர்களுக்கு எப்போதும் கடும் கிராக்கி உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அல்லது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற டாப் ஆர்டரில் இந்திய பேட்டர்களை வலுப்படுத்த விரும்பும் அணிகள் இவரைத் தீவிரமாகக் குறிவைக்க வாய்ப்புள்ளது.

3. துஷார் ரஹேஜா

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் அதிரடி ஓபனரான துஷார் ரஹேஜா, கடந்தாண்டு டிஎன்பிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தையும், இம்முறை 2வது இடத்தையும் பிடித்துள்ளார்.

ஸ்பெஷாலிட்டி

  • விக்கெட் கீப்பர் வலது கை பேட்டரான இவரிடம் 360 டிகிரிக்கும் ஷாட்ஸ் இருக்கின்றன. இவரின் ஸ்ட்ரைக் ரேட் 160+ தான். முதல் 6 ஓவர்களில் பீல்டிங் கட்டுப்பாடுகளை பயன்படுத்தி வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன்களை குவிப்பதில் உருவாக்குவதில் இவர் ஜித்து. சுழற்பந்துவீச்சை சொல்லவே வேண்டாம்.
  • தரமான விக்கெட் கீப்பிங் திறனுடன் சேர்த்து, பேட்டிங்கில் டாப் ஆர்டர் அல்லது பினிஷர் என எந்த இடத்திலும் இறங்கி ஆடக்கூடியவர். எனவே விக்கெட் கீப்பர் பேட்டர் தேவைப்படும் அணிகள் இவரை தூக்கும். அதிலும் குறிப்பாக ஓபனராக விளையாடுவார் என்பதால் பல அணிகள் காத்திருக்கும். கடந்தாண்டே யாரும் எடுக்காத நிலையில் இந்தாண்டும் தொடர்ச்சியாக ரன்களை குவித்திருப்பதால் அதிக வாய்ப்பிருக்கிறது.

Tushar Raheja NOT ❌ getting an IPL contract is beyond me!

TNPL 2024: 324 runs | 36.00 avg | 150.0 SR

TNPL 2025: 488 runs | 61.00 avg | 185.6 SR

TNPL 2026: 296 runs | 74.00 avg | 188.5 SR

🤦🏼 pic.twitter.com/W0VJf9AK5s

— CRICitism (@CRICitism2) August 20, 2026

டிமாண்ட்

  • இம்பாக்ட் பிளேயர் விதியால் அதிரடியாக விளையாடக் கூடிய இந்திய விக்கெட் கீப்பர்களின் மதிப்பு இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. பீல்டிங், பேட்டிங் என மொத்தமும் செட்டாகிவிடும் என்பதால் இந்த டிமாண்ட்
  • அந்த வகையில் ஆர்சிபி (ஜித்தேஷ் சர்மாவுக்கு பேக்அப்) கூட இவரை எடுக்க முயற்சிக்கும். சின்னசாமியில் இவரால் நிச்சயம் வாணவேடிக்கையை காட்ட முடியும். ஆனால் இப்போதைக்கு அங்கு மிடில் ஆர்டரில்தான் வாய்ப்பிருக்கிறது.
  • அதேநேரத்தில் ரிஷப் பண்டை இழந்து விக்கெட் கீப்பர் தேடலில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் இவர் மீது நிச்சயம் ஒரு கண்ணை வைத்திருக்கும். இதனால் அந்த அணியின் டாப் ஆர்டர் பிரச்னை தீரவும் வாய்ப்புள்ளது.

இவர்கள் மட்டும் இல்லை தீபன் லிங்கேஷ், ஆன்ட்ரே சித்தார்த், சோனு யாதவ், ரோஹன் புத்ரா ஆகியோரையும் ஐபிஎல் Scouting குழுக்கள் கவனித்திருப்பார்கள், இவர்களுக்கும் ஏலத்தில் நல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket