• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /MI Captaincy Update: மும்பை இந்தியன்ஸ் புது கேப்டன் இவர்தான்.. நிராகரித்த 3 ஸ்டார் வீரர்கள்!

MI Captaincy Update: மும்பை இந்தியன்ஸ் புது கேப்டன் இவர்தான்.. நிராகரித்த 3 ஸ்டார் வீரர்கள்!

Mumbai Indians News Captain: ஹர்திக் பாண்டியாவை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டிரேட் செய்த நிலையில், புது கேப்டனை நியமிக்கும் பணியில் மும்பை இந்தியன்ஸ் அணி தீவிரம் காட்டி வருகிறது. கேப்டன்சி குறித்து மூன்று ஸ்டார் வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Written ByR Balaji
Published: Nov 26, 2026, 13:56 IST|Updated: Nov 26, 2026, 13:59 IST
joinshare
MI Captaincy Update: மும்பை இந்தியன்ஸ் புது கேப்டன் இவர்தான்.. நிராகரித்த 3 ஸ்டார் வீரர்கள்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

ஆமணக்கு விதையை சாப்பிட்டு... மருத்துவமனையில் 12 பள்ளி மாணவர்கள் - தேனியில் ஷாக்

2

பட்டா பிரச்னை... சுத்துப்போட்ட மக்கள்... பின்வழியாக எஸ்கேப் ஆன தவெக எம்எல்ஏ

3

வாவ் என்ன ஒரு கம்பேக்! 3 தோல்விகளுக்குப் பிறகு சம்பவம் செய்த புதுச்சேரி!

4

TN Weather: அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்?

5

ரூ.2.50 லட்சம் மானியத்தில் வீடு கட்ட விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு லேட்டஸ்ட் அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

2027 ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களது பலப்படுத்த ஆலோசித்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அகிய அணிகள் தங்களுக்குள் வீரர்கள் பரிமாற்றத்தை மேற்கொண்டனர். தொடர்ந்து இன்னும் யாரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ஆலோசித்து வருகின்றனர்.

இந்த சூழலில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி பிரச்சனை தலைத்தூக்கி உள்ளது. அந்த அணியை கடந்த 3 சீசன்களாக வழிநடத்தி வந்த ஹர்திக் பாண்டியாவை அவர்கள் பஞ்சாப் அணிக்கு கொடுத்துவிட்டு அங்கிருந்து அர்ஷ்தீப் சிங்கை பெற்றுக்கொண்டனர். இருவரும் ரூ. 18 கோடிக்கு இடம் மாற்றினார்கள். கேப்டனை டிரேடிங் முறையில் அனுப்பிவிட்டதால், தற்போது புது கேப்டனை தேர்வு செய்யும் பணியில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.

கேப்டன் பதவியை மறுத்த 3 ஸ்டார் பிளேயர்கள்

முதலில் இளம் வீரரான திலக் வர்மாவுக்கு கேப்டன் பொறுப்பை வழங்க அணி நிர்வாகம் ஆலோசித்துள்ளது. ஆனால், கேப்டன் பொறுப்பை ஏற்றால் பேட்டிங்கில் முழுமையாக கவனம் செலுத்த முடியாது என்பதால், அந்த வாய்ப்பை அவர் மறுத்துவிட்டாராம்.

இதையடுத்து இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவிடம் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால், 2028 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பதையே தனது முக்கிய இலக்காக கொண்டுள்ள அவர், கூடுதல் பொறுப்புகளை ஏற்க விரும்பவில்லை என தெரிவித்ததாக தெரிகிறது.

இதனை அடுத்து அந்த அணியின் ஸ்டார் பவுலர் ஜஸ்பிரீத் பும்ராவிடம் கேப்டன் பதவி குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகள் காரணமாக அதிக பணிச்சுமையை எதிர்கொள்வதால், கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலகியதாக கூறப்படுகிறது.

மீண்டும் ரோகித் சர்மா கேப்டனா?

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கடைசி ஆப்சனாக ரோகித் சர்மாவிடம் சென்றுள்ளனர். அவரை மீண்டும் கேப்டனாக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், திலக் வர்மாவுக்கு கேப்டன் பொறுப்பை வழங்கும் திட்டத்தை மும்பை நிர்வாகம் முழுமையாக கைவிட்டதாக தெரியவில்லை. அவருக்கு ஜனவரி வரை நேரம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டு வந்தால், அவரிடம் கேப்டன்சி பொறுப்பை ஒப்படைக்க மும்பை நிர்வாகம் தயாராக உள்ளதாம்.

ஒருவேளை திலக் வர்மா தொடர்ந்து மறுப்பு தெரிவித்தால், 2027 சீசனுக்கு பிறகு நடைபெற உள்ள மெகா ஏலத்தில் திறமையான இளம் இந்திய பேட்டர் ஒருவரை தேர்வு செய்து, அவரை எதிர்கால கேப்டனாக உருவாக்கவும் மும்பை இந்தியன்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மினி ஏலத்தில் ரூ. 32.60 கோடியுடன் களமிறங்கும் மும்பை

2027 ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 32.60 கோடியுடன் களமிறங்குகிறது. தற்போது அணியில் 16 வீரர்கள் உள்ள நிலையில், மீதமுள்ள 9 இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. இதில், இரண்டு வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களும் அடங்கும்.

ராபின் மின்ஸை விடுவித்துள்ளதால் விக்கெட் கீப்பர் பேட்டர் இடம் தற்போது காலியாக உள்ளது. அந்த இடத்தில் அபிஷேக் போரல் அல்லது தேஜஸ்வி தஹியா ஆகியோரில் ஒருவரை ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர, இந்திய சுழற்பந்து வீச்சாளர், மிடில் ஆர்டர் பேட்டர் மற்றும் வேகப்பந்து வீச்சில் பங்களிக்கக்கூடிய ஆல்ரவுண்டர் ஆகியோரும் மும்பை அணிக்கு தேவைப்படுகின்றனர். எனவே, கையில் வைத்திருக்கும் தொகையை பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்கு தரமான வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் அணி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துக்கொண்ட வீரர்கள்

ரோகித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, திலக் வர்மா, நமன் திர், அர்ஷ்தீப் சிங் (டிரேடிங்), கார்பின் போஷ், மிட்செல் சான்ட்னர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கல்டன், குயின்டன் டி காக், ஷர்துல் தாக்கூர், அஷ்வனி குமார், ராஜ் அங்கத் ஷர்மா.

மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்த வீரர்கள்

டிரெண்ட் போல்ட், தீபக் சாஹர், ஏ எம் கசன்பர், அதர்வா அன்கோலேகர், கேசவ் மகாராஜ், முகமது இசார், டேனிஷ் மாலேவார், மயங்க் மார்கண்டே, மயங்க் ராவத், கிரிஷ் பகத், மஹிபால் லோம்ரோர், ராபின் மின்ஸ், ருசித் அஹிர். 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL