• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /முகமது சிராஜ் நீக்கம்... 'இஸ்லாமியர்' என்பதால் இடமில்லையா...? உண்மை இதோ Explained

முகமது சிராஜ் நீக்கம்... 'இஸ்லாமியர்' என்பதால் இடமில்லையா...? உண்மை இதோ Explained

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் மற்றும் ஜடேஜா நீக்கப்பட்டதற்கு கிரிக்கெட் வல்லுநர்கள் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர். இதில் முகமது சிராஜ் தேர்வு செய்யப்படாததற்கு மதப் பாகுபாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் உண்மை என்ன என்பதை இங்கு அலசலாம்.

Written BySudharsan G
Published: Nov 20, 2026, 17:59 IST|Updated: Nov 20, 2026, 18:32 IST
joinshare
முகமது சிராஜ் நீக்கம்... 'இஸ்லாமியர்' என்பதால் இடமில்லையா...? உண்மை இதோ Explained
Image Credit: Mohammed Siraj Exclusion Explained | AI Generated Image : ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டன் நகரில் நேற்றைய தினம் (நவ. 19) தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் 368 ரன்களை எடுத்து நியூசிலாந்து ஆல்-அவுட்டானது. நிக்கோலஸ் 175 ரன்களை அடித்து கடைசி வரை அவுட்டாகவில்லை.

பும்ரா 4 விக்கெட்டையும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டையும், அன்சுல் கம்போஜ் 2 விக்கெட்டையும், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்திய அணி அடுத்து பேட்டிங் செய்து 39 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து 159 ரன்களை சேர்த்திருக்கிறது. கே.எல் ராகுல் 52 ரன்களுடனும், படிக்கல் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க | 7 போட்டிகளிலும் வென்றாலும் சிக்கல்? WTC Finalக்கு செல்ல கில் படை என்ன செய்ய வேண்டும்?

ஜடேஜா, சிராஜ் நீக்கம்

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நிறைவடைந்துள்ளது, போட்டி இரு அணிகளுக்குமே சாதகமான சூழலில்தான் உள்ளது. இருப்பினும், நேற்று டாஸ் வீசப்பட்டதில் இருந்தே இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

91 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய ரவீந்திர ஜடேஜா மற்றும் 48 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய முகமது சிராஜ் ஆகியோர் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யவில்லை.

ஜடேஜாவை நீக்கியதன் காரணம்

நியூசிலாந்து டாப் ஆர்டரில் நான்கு இடது கை பேட்டர்கள் இருப்பதால், அவர்களுக்கு எதிரான பந்துவீச்சு தாக்குதலுக்காக இடதுகை ஸ்பின்னர் ஜடேஜாவை தவிர்த்து, ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தரை எடுத்ததாக இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில் ஒரு லாஜிக் இருக்கிறது என்றாலும் கூட முகமது சிராஜை எடுக்காததற்கு லாஜிக்கே இல்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

கிரிக்கெட் வல்லுநர்கள், ரசிகர்கள் காட்டம்

முன்னாள் இந்திய வீரர்கள் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி, வாசிம் ஜாபர், ரவிசந்திரன் அஸ்வின் உள்பட தொடர்ந்து ஜடேஜா மற்றும் சிராஜை பிளேயிங் லெவனில் எடுக்காததற்கு இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதும்; டெஸ்ட் கேப்டன் சுப்மான் கில் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ரசிகர்களும் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

முதலிடத்தில் முகமது சிராஜ்

முகமது சிராஜ் நடப்பு 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முகமது சிராஜ் 43 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

கடந்தாண்டு இங்கிலாந்தில் நடந்த ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை சிராஜ் எடுத்திருந்தார். அந்த தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பௌலரும் அவர்தான். எனவே அவரை நீக்கியது அதிக விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

மேலும் படிக்க | Explained: 4 போட்டிகளில் வெறும் 30 ரன்கள்.. 2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவாரா? பிசிசிஐ திட்டம் என்ன?

இந்திய அணி தரப்பில் கூறப்பட்டது என்ன?

முகமது சிராஜை சேர்க்காதது குறித்து இந்திய அணி கேப்டன் சுப்மான் கில், பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் ஆகியோர் கூறியவற்றை இங்கு காணலாம்.

டாஸின் போது சுப்மான் கில்: மிகவும் கடினமான முடிவு, தெரியுமா.. எங்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக பந்துவீசி வருவதால் எந்த காம்பினேஷனை தேர்ந்தெடுப்பது என்று கடந்த ஒரு வாரக்காலமாக நாங்கள் யோசித்தோம். சிராஜ், குர்னூர் இருவருமே அணியில் இடம்பெறாமல் போவது மிகவும் கடினமான ஒன்று.

முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு சிதான்ஷு கோடக்: சிராஜிடம் எந்த தவறும் இல்லை. நாங்கள் அணியை தேர்ந்தெடுத்தபோது இதுதான் சிறந்த பிளேயிங் லெவன் என நினைத்தோம். சிராஜை அணியில் இருந்து நீக்கியது தவறான முடிவு என்று நான் நினைக்கவில்லை. இது வெறும் முதல் நாள்தான். நாங்கள் முதல் நாளுக்கு மட்டும் அணியை எடுக்கவில்லை. இரண்டு, மூன்று, நான்காம் நாட்களுக்கும் அணியைத் தேர்வு செய்கிறோம்.

Shitanshu Kotak Press Conference: Why Is Mohammad Siraj Out of the Playing XI .? https://t.co/59YEmrdRQg

— Nafees (@Nafees_018) November 19, 2026

அரசியல் தளத்திலும் சலசலப்பு

இந்தச் சூழலில், முகமது சிராஜை பிளேயிங் லெவனில் சேர்க்காதது அரசியல் தளத்திலும் சலசலப்பை உண்டாக்கி உள்ளது. முகமது சிராஜை நீக்கிய முடிவு பாரபட்சமானது என காங்கிரஸ் எம்பி இம்ரான் மசூத் குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், இந்த கருத்தே வெட்கக்கேடானது என பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டு என்ன?

ANI ஊடகத்திற்கு மசூத் பேசுகையில், சிராஜ் சிறப்பாக விளையாடிய போதிலும் அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை என்று அவரது பெயர் 'சிராஜ்' என இருப்பதால் அணியில் அவருக்கு இடமளிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டி உள்ளார்.

#WATCH | Delhi: On Cricketer Mohammed Siraj, Congress MP Imran Masood says, "It is being said that despite his good performance, he was not given a place in the team. His name is 'Siraj ', and that is why he was not given a place. If you are not selecting him despite his good performance, the discrimination is clear."

— ANI (@ANI) November 20, 2026

அதாவது சிராஜ் இஸ்லாமியர் என்பதால் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்படுவதாக மறைமுகமாக குற்றஞ்சாட்டி உள்ளார். அவர் சிறப்பாக விளையாடியபோதிலும், அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால், அது பாகுபாடு என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் சாடியிருந்தார்.

காங்கிரஸ் எம்.பி.யின் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக செய்தித்தொடர்பாளர் பிரதீப் பந்தாரி, இந்திய அணியின் வீரர்கள் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் தனது வாக்கு வங்கி அரசியல் விளையாட்டை விளையாடுகிறது என குற்றஞ்சாட்டி உள்ளார்.

பாஜக கொடுத்த பதிலடி

இதுகுறித்து பிரதீப் பந்தாரி அவரது சமூக வலைதளப் பக்கங்களில், "காங்கிரஸ் கட்சிக்கு வெட்கமே கிடையாதா... கிரிக்கெட் அணித் தேர்வில் கூட காங்கிரஸ் இப்போது வாக்கு வங்கி அரசியலை செய்கிறது. சிராஜ் ஒரு இஸ்லாமியர் என்பதால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக காங்கிரஸ் சொல்கிறது.

Shame on Congress! Congress now does vote bank politics even in Cricket team selection! Congress says -" Siraj was left out because he was a Muslim" Even Jadeja was left out! Every cricketer wears the jersey representing India! Stop dividing Indian cricket team for vote bank & communal politics!

— Pradeep Bhandari(प्रदीप भंडारी)🇮🇳 (@pradip103) November 20, 2026

ஜடேஜாவும் கூட நீக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் சீருடையை அணிகிறார்கள். வாக்கு வங்கி மற்றும் மத அரசியலுக்காக இந்திய கிரிக்கெட் அணியை துண்டாடுவதை நிறுத்துங்கள்" என பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட் முடிவா? மதப் பாகுபாடா?

ஒருபுறம் முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் புள்ளிவிவரங்கலைச் சுட்டிக்காட்டி சிராஜ் தேர்வு செய்யப்படாததற்கு தங்களின் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பிளேயிங் லெவன் தேர்வு விளையாட்டு சார்ந்த வியூக முடிவு என இந்திய அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில் மதப் பாகுப்பாடு இருப்பதாக காங்கிரஸ் எம்.பி., குற்றஞ்சாட்டி உள்ளார். இதனை பாஜக மறுத்துள்ளதுடன், அரசியல் ஆதாயத்திற்காக கிரிக்கெட் விவகாரம் பயன்படுத்தப்படுவதாகவும் விமர்சித்துள்ளது. இருப்பினும் சிராஜ் நீக்கப்பட்டதன் பின்னணியில் மதப் பாகுபாடு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை.

மேலும் படிக்க | IPL 2027 Mini-Auction Explained: ஐபிஎல் 2027 மினி ஏலம்.. தக்கவைப்பு, விடுவிப்பு மற்றும் டிரேட் விதிகள் என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Cricket Team
Explainer