• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /ஹர்திக் பாண்டியா டிரேட்... மும்பை இந்தியன்ஸ் போட்ட முக்கிய பதிவு - என்ன நடக்கும்?

ஹர்திக் பாண்டியா டிரேட்... மும்பை இந்தியன்ஸ் போட்ட முக்கிய பதிவு - என்ன நடக்கும்?

IPL Hardik Pandya Trade : ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா டிரேட் செய்யப்படுகிறார் என பரபரப்பாக பேசப்பட்டு வரும் வேளையில், மும்பை இந்தியன்ஸ் அணி அதன் சமூக வலைதளங்களில் முக்கிய பதிவை போட்டுள்ளது.

Written BySudharsan G
Published: Aug 20, 2026, 08:52 AM IST|Updated: Aug 20, 2026, 09:00 AM IST
joinshare
ஹர்திக் பாண்டியா டிரேட்... மும்பை இந்தியன்ஸ் போட்ட முக்கிய பதிவு - என்ன நடக்கும்?
Image Credit: Hardik Pandya Trade | Image Source : X/@mipaltan

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

57 மெட்ரோக்கள் மூடல்; அனைத்து ரயில்களும் ரத்து; பிரதமரை சாடும் CJP - டெல்லி நிலவரம் என்ன?

2

நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு... யார் இந்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண்?

3

பிரதமர் மோடி சென்னை வருகை: SPG குழுவின் கட்டுப்பாட்டில் சென்ற விமான நிலையம்

4

புறம்போக்கு நில வீடுகளுக்கு மின் இணைப்பு - தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு

5

அக்., 15 வரை தொடரும் மழை: இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

IPL Hardik Pandya Trade : ஐபிஎல் 2027 தொடர் மீதான பரபரப்பு தற்போதே தொற்றிக்கொள்ள தொடங்கியிருக்கிறது. மினி ஏலம் டிசம்பர் மாதத்திற்குள் நடைபெறும். அதன் முன்னர் வீரர்களின் டிரேட் குறித்துதான் அதிகம் பேசப்படுகிறது.

ஏற்கெனவே லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கேப்டனான ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு திரும்பியிருக்கிறார். ஆனால் அவரது ஐபிஎல் வருமானம் ரூ.27 கோடியில் இருந்து ரூ.15 கோடியாக குறைந்திருக்கிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு மாறியுள்ளார். இவரை கடந்த 2025 மெகா ஏலத்தில் ரூ.13.25 கோடிக்கு டெல்லி அணியால் தக்கவைக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது ஐபிஎல் வருமானம் ரூ.13.50 கோடியாக உயர்ந்துள்ளது.

ஹர்திக் பாண்டியா டிரேட்

இந்தச் சூழலில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் டிரேட் செய்யப்பட இருக்கிறார் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் என்றாலும் எக்கச்சக்கமான கதையாடல்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வல்லுநர்களும் கூட ஹர்திக் பாண்டியா டிரேட் குறித்த சாத்தியக்கூறுகளை அலசி ஆராய்ந்து வந்தனர்.

ஹர்திக் பாண்டியாவுக்கு ஹெவி டிமாண்ட்

ஹர்திக் பாண்டியா இந்தியாவின் நம்பர் 1 வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர். ஹிட்டர், பினிஷர் என ஹர்திக் பாண்டியாவுக்கு அதிக டிமாண்ட் இருப்பது உண்மைதான். எனவே, சரியான இந்திய ஆல்-ரவுண்டர்கள் இல்லாமல் திணறிவரும் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகள் ஹர்திக் பாண்டியாவை பெற பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.

ஹர்திக் பாண்டியாவுக்கு பதில்...

ஒருவேளை, மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய முன்வந்தாலும், பதிலுக்கு நிச்சயம் இரண்டு, மூன்று முக்கிய வீரர்களை அந்த அணியில் இருந்து தூக்கும் என்றும் பேசப்பட்டன.

உதாரணத்திற்கு சிஎஸ்கே என்றால் சிவம் தூபே உடன் ஆயுஷ் மாத்ரே, பிரெவிஸ்; கேகேஆர் என்றால் ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா; ராஜஸ்தான் ராயல்ஸ் என்றால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் கேட்கலாம் என கூறப்பட்டன. ஆனால் இதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்றும் பேசப்பட்டன.

மும்பை இந்தியன்ஸ் பதிவும்... பின்னணியும்...

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று (ஆகஸ்ட் 17) போட்ட ஹர்திக் பாண்டியா குறித்து போட்ட பதிவின் மூலம் அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. நேற்று மாலை 7 மணிக்கு ஹர்திக் பாண்டியாவின் 7 புகைப்படங்களை வெளியிட்டு, இது HP'o Clock என மும்பை இந்தியன்ஸ் அணி அதன் சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டிருந்தது.

Memo: Ma pic.twitter.com/eabVkzk6s1

— Mumbai Indians (@mipaltan) August 19, 2026

இந்த பதிவின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா தொடர்வார் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர். மற்ற அணிகளுடன் டிரேட் சாத்தியக்கூறுகள் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம் என பேசப்படுகிறது.

ஹர்திக் பாண்டியா கடந்து வந்த பாதை

2015ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா அறிமுகமானார். ஆனால், 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை விடுவித்தது. அப்போது புதிய அணியாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியா, 2022ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தை வென்றுகொடுத்தார். 2023ஆம் ஆண்டில் இறுதிப்போட்டிவரை குஜராத் அணியை வரவழைத்தார்.

இதனால் மீண்டும் 2024ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் மூலம் பாண்டியாவை பெற்றுக்கொண்டு அவரை கேப்டனாக்கியது.ஹர்திக் பாண்டியா தலைமையில் 2025 சீசனில் மும்பை பிளே ஆப் சென்று குவாலிபயர் 2 போட்டியில் தோல்வியைக் கண்டது.

ஆனால், 2024 மற்றும் 2026 சீசனில் பிளே ஆப் கூட வராமல் வெளியேறியது. எனவே, ஹர்திக் பாண்டியாவுக்கு கடைசியாக 2027 சீசனில் மும்பை இந்தியன்ஸ் ஒரு வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL