இனி வாஷிங்டன் சுந்தருக்கு ஆப்பு... இடத்தை கப்புனு பிடித்த நமன் திர்
இனி ஓடிஐ மற்றும் டி20ஐ உள்ளிட்ட வொயிட் பால் பார்மட்களில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பிருக்காது என்றும் அவருக்கு பதில் இனி நமன் திர் இடம்பெறவே அதிக வாய்ப்புள்ளதாக கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
Naman Dhir Replaces Washington Sundar: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஓடிஐ தொடர் நிறைவடைந்து, டி20ஐ தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் போட்டி முடிந்திருக்கும் நிலையில், 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
வரும் அக். 9ஆம் தேதி 2வது போட்டி ராஞ்சியில் நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து, கடைசி மூன்று போட்டிகள் அக். 11, அக். 14, அக். 17 ஆகிய மூன்று தேதிகளில் முறையே இந்தூர், ஹைதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.
மேலும் படிக்க | சாமியார் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடி வாங்கினாரா விராட் கோலி...? உண்மை என்ன?
நமன் திர் எனும் வரப்பிரசாதம்
முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 43 பந்துகளில் சதம் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைத் தேடி தந்தாலும், பந்துவீச்சில் நமன் திர் மிகச் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 31 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். இதில் ஷாய் ஹோப், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோரின் விக்கெட்டும் அடக்கம்.
இந்திய அணிக்கு நீண்ட நாள் கழித்து மிடில் ஆர்டரில் பந்துவீசக்கூடிய சிறப்பான பேட்டர் கிடைத்திருப்பது ரசிகர்களுக்கும், இந்திய கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதன்மூலம், இந்திய அணியின் காம்பினேஷன் பலப்படும்.
நியூசிலாந்து செல்லும் வாஷிங்டன் சுந்தர்
இம்பாக்ட் வீரர் விதி இருப்பதால் ஐபிஎல் தொடரில் தான் பந்துவீசாவிட்டாலும், தொடர்ச்சியாக பந்துவீசி பயிற்சி பெற்று வந்ததாக நமன் திர் நேற்று போட்டிக்கு பின்னர் தெரிவித்திருந்தார். மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்த தொடரில் இந்திய அணி ஸ்குவாடில் நமன் திர் ஆரம்பத்தில் சேர்க்கப்படவில்லை.
வாஷிங்டன் சுந்தரே இடம்பெற்றிருந்தார். அதன்பின் டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராக வேண்டும் என்பதால் வாஷிங்டன் சுந்தருக்கு பதில் நமன் திர் ஸ்குவாடில் சேர்க்கப்பட்டார். மேலும் இம்மாத கடைசியில் இந்தியா ஏ அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நியூசிலாந்து ஏ அணியுடன் மூன்று அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்திய ஏ அணியில் முக்கிய வீரர்கள்
துருவ் ஜூரேல் தலைமையிலான இந்தியா ஏ அணியில் கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், தேவ்தத் படிக்கல், மானவ் சுதர், ஆகாஷ் தீப், முகேஷ் குமார், அன்சுல் கம்போஜ் உள்ளிட்ட டெஸ்ட் வீரர்கள் இந்தியா ஏ ஸ்குவாடில் இடம்பிடித்துள்ளனர். இதில் வாஷிங்டன் சுந்தரும் இடம்பிடித்துள்ளார்.
இனி வாஷிங்டன் சுந்தருக்கு இடமில்லை
அப்படியிருக்க, இனி வாஷிங்டன் சுந்தருக்கு வொயிட் பால் அணியில் இடமே இல்லையா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் அவரது Cheeky Cheeka யூ-ட்யூப் தளத்தில் விரிவாக பேசி உள்ளார்.
"வாஷிங்டன் சுந்தரின் இடத்திற்கு மாற்று வீரராக நமன் திர் வந்துள்ளார். வாஷிங்டன் சுந்தர் ஒவ்வொரு இரண்டு போட்டிகளுக்குப் பிறகும் காயமடைந்து வருகிறார். இப்போது அவருக்குப் பதிலாக வந்த நமன் திர் , அவர் ஓரங்கட்டிவிட்டார்.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து இப்போது நமன் தீர் எப்படி நீக்க முடியும்? அவர் உடனடியாக அந்த இடத்தைப் பிடித்துவிட்டார். இனி வாஷிங்டன் சுந்தரால் இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட முடியும்" என்றார்.
புத்திசாலி பௌலர் நமன் திர்
மேலும், அவர் வேகமாக பந்துவீசும்போது, சிக்ஸர்கள் அடிக்கிறார்கள். அதனால் அவர் உடனடியாக பந்தின் வேகத்தைக் குறைக்கிறார். இது அவர் மிகவும் புத்திசாலியான ஒரு பந்துவீச்சாளர் என்பதை காட்டுகிறது. டி20 கிரிக்கெட்டுக்கு அவர் மிகவும் பொருத்தமானவர்.
அவர் தான் பேட்டிங் செய்யும்போது, மற்றவர்கள் தனக்கு எப்படி பந்துவீசுவார்கள் என்பதையும் மனக்கண்ணில் கண்டவாறே பந்துவீசுகிறார். அந்த அளவுக்கு அவர் ஒரு சிந்தனைமிக்க கிரிக்கெட் வீரராக தெரிகிறார். அதனால்தான் அவர் ஒரு புத்திசாலியான பந்துவீச்சாளர் ஆவார்" என பேசியிருக்கிறார்.
இனி இந்திய அணி ஆப்-ஸ்பின் ஆல்-ரவுண்டராக நமன் திர் ஓடிஐ மறறும் டி20ஐ தொடர்களிலும்; வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் தொடரிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | அதிருப்தியில் அபிஷேக் சர்மா.. SRHல் இருந்து MI செல்கிறாரா? ரூ. 30 கோடிக்கு டிரேட்?