Duleep Trophy 2026: துலீப் கோப்பை 2026 தொடர் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கியது. பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்தில் உள்ள இரண்டு மைதானங்களில் ஒரே நேரத்தில் போட்டிகள் நடைபெற்றன.
வடக்கு மண்டல அணி, வட கிழக்கு மண்டல அணி, கிழக்கு மண்டல அணி, மத்திய மண்டல அணி, மேற்கு மண்டல அணி, தெற்கு மண்டல அணி என 6 அணிகள் துலீப் கோப்பை 2026 தொடரில் மோதுகின்றன. அதில் மத்திய மண்டல அணியும், தெற்கு மண்டல அணியும் கடந்தாண்டு இறுதிப்போட்டியில் மோதியதை தொடர்ந்து இந்தாண்டு அவர்கள் நேரடியாக இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற்றனர்.
காலிறுதிச்சுற்று போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று பெங்களூருவில் தொடங்கின. பிசிசிஐ சிறப்பு மையத்தின் முதல் மைதானத்தில் வடக்கு - மேற்கு அணிகளும்; 2வது மைதானத்தில் கிழக்கு மண்டலம் - வடகிழக்கு மண்டலம் அணிகள் மோதின.
Victory for North Zone 🙌
They bowl West Zone out for 234 to win by 52 runs and enter the semis 👌
Scorecard ▶️ https://t.co/cATggoXuky#DuleepTrophy pic.twitter.com/EgdEtRJxnK— BCCI Domestic (@BCCIdomestic) August 26, 2026
East Zone win 👏
Another excellent stumping from Ishan Kishan 👌
A 5⃣-wicket haul for Anukul Roy 🖐️
A commanding performance as they beat North East Zone by an innings and 210 runs to enter the semis 🙌
Scorecard ▶️ https://t.co/XJFhfvvTIU#DuleepTrophy pic.twitter.com/5J2QUTU1uG— BCCI Domestic (@BCCIdomestic) August 25, 2026
ஆகஸ்ட் 30: மத்திய மண்டலம் vs கிழக்கு மண்டலம் - பெங்களூரு CoE முதல் மைதானம்.
ஆகஸ்ட் 30: தெற்கு மண்டலம் vs வடக்கு மண்டலம் - பெங்களூரு CoE 2வது மைதானம்.
செப்டம்பர் 6: 2ஆம் சுற்றில் வெற்றிபெறும் அணிகள் மோதும் - சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.