• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /PAK கிரிக்கெட்டில் என்னதான் நடக்கிறது? ரிஸ்வான் முதல் மொஹ்சின் நக்வி வரை தொடரும் சர்ச்சைகள்!

PAK கிரிக்கெட்டில் என்னதான் நடக்கிறது? ரிஸ்வான் முதல் மொஹ்சின் நக்வி வரை தொடரும் சர்ச்சைகள்!

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தொடர் தோல்விகள், வீரர்கள் மீதான விசாரணைகள், திடீர் அணித் தேர்வு மற்றும் பயிற்சியாளர் மாற்றங்கள், நிர்வாக சர்ச்சைகள் என பல்வேறு பிரச்சினைகள் அவர்களை தொடர்ந்து வருகின்றன.

Written ByR Balaji
Published: Sep 19, 2026, 08:17 AM IST|Updated: Sep 19, 2026, 08:20 AM IST
joinshare
PAK கிரிக்கெட்டில் என்னதான் நடக்கிறது? ரிஸ்வான் முதல் மொஹ்சின் நக்வி வரை தொடரும் சர்ச்சைகள்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

கிரிக்கெட்டில் ஒரு அணி தடுமாறுவது என்பது புதிதல்ல. அதில் இருந்து எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வரலாம். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட்டை பொறுத்தவரை சமீப காலமாக களத்தில் நடக்கும் போட்டிகளை விட களத்திற்கு வெளியே நடக்கும் சம்பவங்களே அதிகமாக பேசப்படுகின்றன. வீரர்கள் மீதான விசாரணை, அணித் தேர்வில் திடீர் மாற்றம், பயிற்சியாளர் மாற்றம், நிர்வாக முடிவுகள் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தொடர்பான சர்ச்சைகள் என பல்வேறு விவகாரங்கள் அடுத்தடுத்து கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மொஹ்சின் நக்வியின் பல்வேறு பொறுப்புகளும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளன. அவர்  PCB தலைவராக இருப்பதுடன், பாகிஸ்தான் உள்துறை அமைச்சராகவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராகவும் உள்ளார்.

மறுபுறம், இங்கிலாந்து தொடருக்கு பிறகு முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் உள்ளிட்ட வீரர்கள் தொடர்பான விசாரணைகள் அணியில் செய்யப்பட்ட அதிரடி மாற்றங்கள் என நிலைமை மேலும் பரபரப்பானது. ரிஸ்வான் தொடர்பான NCCIA விசாரணைக்கு எதிரான மனுவை லாகூர் முதலில் சம்பந்தப்பட்ட நோட்டீஸுக்கு பதிலளிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. அப்படியானால், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் உண்மையில் என்னதான் நடக்கிறது? இந்த தொடர் சர்ச்சைகளுக்கு பின்னணி என்ன? அணியின் செயல்பாடு, வீரர்கள் மீதான விசாரணை மற்றும் நிர்வாக முடிவுகள் ஒன்றோடு ஒன்று எப்படி தொடபுபடுகின்றன? இதனை விரிவாக பார்க்கலாம்.

மொஹ்சின் நக்வியை சுற்றி ஏன் இவ்வளவு விவாதம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை வழிநடத்தும் மொஹ்சின் நக்வி, கிரிக்கெட் நிர்வாகத்துடன் மட்டும் தொடர்புடையவர் அல்ல. அவர் அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும் உள்ளார். அதோடு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை பொறுப்பையும் வகித்து வகிறார். இதனால் கிரிக்கெட் நிர்வாகமும் அரசு பொறுப்பும் ஒரே நபரிடம் இருப்பது விவாதங்களை கிளப்பி வருகின்றன.

மொஹ்சின் நக்வியின் கிரிக்கெட் மற்றும் அரசியல் பதவிகள் குறித்து முன்னாள் வீரர் முகமது கைஃப் உள்ளிட்ட சில கேள்வி எழுப்பி உள்ளனர். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் பொறுப்பில் இருக்கும் ஒருவரின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக விவாதம் நடந்துள்ளது.

இங்கிலாந்து தொடர்

பாகிஸ்தான் - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இந்த பிரச்சனையை மேலும் தீவிரமாக்கியது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் முழுமையாக தோல்வியடைந்தது. முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 194 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்த பாகிஸ்தான், கடைசி போட்டியையும் 8 விக்கெட் வித்தியாசத்தில் இழந்தது.

இந்த தொடர் தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் நிர்வாகம் எடுட்த்த முடிவுதான் கிரிக்கெட் உலகில் அதிக கவனம் பெற்றது.

ஒரே நேரத்தில் 7 வீரர்கள் நீக்கம்

இரண்டாவது டெஸ்ட் முடிந்த பிறகு, பாகிஸ்தான் 7 வீரர்களை அணியில் இருந்து விடுவித்தது. முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி ஆகா உள்ளிட்ட 7 பேர் இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பினர். அவர்களுக்கு பதிலாக 7 புதிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர். இதில் 5 பேர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரர்கள். அதே நேரத்தில் தலைமை பயிற்சியாளர் சர்ஃபராஸ் அகமது மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக மைக் ஹெசன் மற்றும் ஆஷ்லே நோஃப்கே கொண்டு வரப்பட்டனர்.

இவ்வளவு பெரிய மாற்றும் தொடரின் நடுவிலேயே செய்யப்பட்டதால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் திட்டமிடல் மற்றும் நீண்டகால அணிக் கட்டமைப்பு குறித்து கேள்விகள் எழுந்தன.

ரிஸ்வான், இமாம் மீது விசாரணை ஏன்?

இந்த மாற்றங்களுக்கு அடுத்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் ஒழுக்கம் மற்றும் நடத்தை தொடர்பாக விசாரனையை தொடங்கியது. முகமது ரிஸ்வான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோஅரின் மொபைல் போன்களில் இருந்து தகவல்கள் பெறப்பட்டதாகவும், அவர்களின் செயல்பாடுகள் தொடர்பாக விசாரனை விரிவுப்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த விசாரணையின் முழுமையான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

ரிஸ்வானுக்கு NCCIA சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில்,. அதனை எதிர்த்து லாகூர் உயர் நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தார். செப்டம்பர் 18 ஆம் தேதி நீதிமன்றம் அவரது மனுவை ஏற்காமல், முதலில் சம்பந்தப்பட்ட அமைப்பிடம் பதிலளிக்குமாறு கூறியது. இதையடுத்து நிஸ்வான், இந்த விவகாரம் தொடர்பாக ICC-யின் Anto Corruption-ஐ அணுகியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இமாம்-உல்-ஹக் விவகாரம் என்ன?

இங்கிலாந்து தொடரின்போது இமாம்-உல்-ஹக்கின் காயம் தொடர்பாகவும் கேள்விகள் எழுந்தன. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அவருக்கு இடது காலில் low-grade calf strain ஏற்பட்டதாக PCB அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

ஆனால், அவரது காயத்தின் தீவிரம் குறித்து அணிக்குள் கேள்விகள் எழுந்ததாக செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அவரது காயம், அணியில் இருந்து விலகிய விதம் உள்ளிட்ட விஷயங்களும் விவாதத்துக்கு வந்தன.

இம்ரான் கான் குடும்பம் தொடர்பான சர்ச்சையும் ஏன் வந்தது?

இங்கிலாந்து தொடரின் போது மற்றொரு பிரச்சனையும் உருவானது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது, முன்னாள் பாகிஸ்தான் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின் மகன்கள் காசிம் மற்றும் சுலைமான் ஆகியோரிடம் Sky Sports பேட்டி எடுத்தது.

அந்தப் பேட்டியில் இம்ரான் கானின் சிறை நிலை குறித்து அவரது மகன்கள் கருத்து தெரிவித்தனர். இதற்கு PCB கடும் எதிர்ப்பு தெரிவித்து Sky Sports மீது அதிகாரப்பூர்வ புகார் அளித்தது. மேலும், போட்டியின் இடைவேளைக்குப் பிறகு மைதானத்துக்கு திரும்பாமல் இருப்பது குறித்து பாகிஸ்தான் அணி பரிசீலித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆசிய கோப்பை சர்ச்சை

மொஹ்சின் நக்வியை சுற்றிய சர்ச்சை இங்கிலாந்து தொடரோடு நின்றுவிடவில்லை. 2025 ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்திய ஆண்கள் அணி நக்வியிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ளவில்லை. அதே நிலை 2026 மகளிர் ஆசிய கோப்பையிலும் தொடர்ந்தது.

2026 இறுதியில் இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி கோப்பையை வென்றபோதும், ACC தலைவரும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற இந்திய அணி மறுத்தது. இந்த நிலைப்பாடு இறுதிப்போட்டிக்கு முன்பே ACC-க்கு தெரிவிக்கப்பட்டதாக BCCI செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்தார்.

களத்திலும் சொதப்பும் சிக்கல்

பாகிஸ்தான் அணியின் கள செயல்பாடும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமான தோல்வியை சந்தித்த பின்னரே 7 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்பிறகும் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 3-0 என கைப்பற்றியது.

அந்த தொடரில் பாகிஸ்தானுக்கு கிடைத்த சில positive-களில் ஒன்று 21 வயதான ரஸாவுல்லாவின் அறிமுக செயல்பாடு. அவர் டெஸ்ட் அறிமுகத்திலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 63 பந்துகளில் 81 ரன்களும் குவித்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஸு புள்ளிகளில் கைவைத்த ஐசிசி

இங்கிலாந்து தொடரின் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர் வேகத்தை விட 11 ஓவர்கள் குறைவாக வீசியதற்காக, அணியின் வீரர்களுக்கு அதிகபட்சமாக 50 சதவீத போட்டிக் கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டதுடன், World Test Championship-ல் 11 புள்ளிகளும் குறைக்கப்பட்டன. இது அவர்களுக்கு மேலும் ஒரு பின்னடைவை கொடுத்தது.

பாகிஸ்தான் அணியில் இருக்கும் முக்கிய பிரச்சனை

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அடிக்கடி நிர்வாகிகள், தேர்வுக்குழுக்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணியமைப்பில் மாற்றங்கள் நடைபெறுவதாக முன்னாள் வீரர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இதுபோன்ற அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் நீண்டகால திட்டமிடலை பாதிக்கலாம் என்பதே அவர்களின் முக்கிய வாதமாக உள்ளது.

முன்னாள் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீஃப், சமீபத்திய தோல்வியை மட்டும் பார்க்காமல் தற்போதைய PCB நிர்வாகத்தின் செயல்பாடுகளையும் விமர்சித்துள்ளார். அதேபோல் வாசிம் அக்ரம், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக அடிப்படை ரெட்-பால் திறமையை வளர்ப்பதில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதிலிருந்து பார்க்கும்போது, பிரச்சனை ஒரு தோல்வியால் மட்டும் உருவானது என்று கூற முடியாது. அணியின் நீண்டகால திட்டம், வீரர்கள் தேர்வு, பயிற்சியாளர் மாற்றங்கள், நிர்வாக முடிவுகள் மற்றும் ஒழுக்கம் தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்ற விமர்சனமே தற்போது முன்வைக்கப்படுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு என்ன தேவை?

தற்போதைய சூழலில் பாகிஸ்தான் அணிக்கு உடனடி முடிவுகளை விட, நீண்டகால திட்டமிடல் முக்கியமானதாகிறது. ஒரே தொடரின் முடிவை வைத்து தொடர்ந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மாற்றுவதற்கு பதிலாக, எந்த வகையான கிரிக்கெட்டை விளையாட வேண்டும், எந்த வீரர்களை நீண்டகாலமாக உருவாக்க வேண்டும், தேர்வு மற்றும் பயிற்சி முறையை எப்படி நிலையானதாக மாற்ற வேண்டும் என்பதில் தெளிவான திட்டம் தேவைப்படுவதாக முன்னாள் வீரர்கள் கூறுகின்றனர்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer