• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாகும் ஜெஸ்வால்? MI பக்கா பிளான்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாகும் ஜெஸ்வால்? MI பக்கா பிளான்!

கேப்டன் பதவி விவகாரத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யாஷஸ்வி ஜெய்ஸ்வால் வெளியேறி, மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written ByR Balaji
Published: Oct 15, 2026, 01:57 PM IST|Updated: Oct 15, 2026, 02:01 PM IST
joinshare
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாகும் ஜெஸ்வால்? MI பக்கா பிளான்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அனிருத்-காவ்யா திருமணத்தை அன்றே கணித்த பெண்! வைரலாகும் வீடியோ..

அனிருத்-காவ்யா திருமணத்தை அன்றே கணித்த பெண்! வைரலாகும் வீடியோ..

2

மக்களை சமூக அந்தஸ்தை வைத்து பிரித்து பார்த்த அமைச்சர்..டிடிவி தினகரன் கண்டனம்!

3

Aippasi Matha Rasi Palan 2026: இன்று முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! ஒரு மாதத்திற்கு கவலையே வேண்டாம்

4

‘டோரதி’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

5

டிகிரி படித்தவர்களுக்கு அரசின் சூப்பர் வேலை.. கைநிறைய சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ஐபிஎல் 2027 சீசனை முன்னிட்டு வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கவனம் ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, ஹர்திக் பாண்டியா, அபிஷேக் சர்மா உள்ளிட்ட வீரர்களின் எதிர்காலம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் குறித்தும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கேப்டன் பதவியை எதிர்பார்க்கும் அவர், ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளும் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹர்திக் பாண்டியா டிரேட் என்ன ஆச்சு?

2026 ஐபிஎல் சீசன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் அணிக்கு கொண்டுவருவது தொடர்பாக பேச்சுகள் எழுந்தன. இருப்பினும், அவருக்கு பதிலாக தரமான வீரரை விடுவிக்க மற்ற அணிகள் தயாராக இல்லாததால், அந்த முயற்சி முன்னேறவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில், வாஷிங்சன் சுந்தர் அல்லது சாய் கிஷோர் ஆகியோரில் ஒருவரை அணிக்குள் கொண்டுவர சிஎஸ்கே நிர்வாகம் ஆர்வம் காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கேப்டன் பதவி பிரச்சனை.. அணி மாற நினைக்கும் ஜெய்ஸ்வால்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மாவின் எதிர்காலம் குறித்த பேச்சுகள் ஒருபுறம் இருக்க, தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பெயரும் டிரேடிங் வட்டாரத்தில் அடிபடுகிறது. அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற விருப்பம் ஜெய்ஸ்வாலுக்கு இருப்பதாகவும் அந்த வாய்ப்பு கிடைக்காததால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வேறு அணிக்கு செல்ல அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர் உண்மையிலேயே அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

ஜெய்ஸ்வால் அதிருப்திக்கு மற்றொரு காரணம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டங்கள் அதிக கவனத்தை பெற்று வருகின்றன. குறைந்த பந்துகளில் அதிக ரன்களை குவிக்கும் அவரது திறமை, அணியின் தொடக்க ஆட்டத்தை பற்றிய விவாதங்களில் முக்கிய இடம்பிடித்துள்ளது. இதனால், மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வாலுக்கு கிடைக்கும் கவனம் குறைவதாக அவர் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன் கேப்டன் பதவி மீதான எதிர்பார்ப்பும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், ஜெய்ஸ்வாலுக்கு தலைமை பொறுப்பை வழங்குவது குறித்து ராஜஸ்தான் நிர்வாகம் சாதகமான முடிவை எடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு கேப்டனாக போதிய அனுபவம் இல்லை என்பதும் களத்தில் உணர்ச்சிவசப்பட்டு செயல்படும் தன்மை குறித்த மதிப்பீடுகளும் இதற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.  

கேப்டனை மாற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐபிஎல் 2027 வரை ரியான் பராக் அல்லது ரவீந்திர ஜடேஜா அகிய ஒருவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு, 2028 சீசனுக்கான அணிக் கட்டமைப்பை உருவாக்கும்போது நீண்டகால தலைமை பொறுப்புக்கு ஏற்ற வீரரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது 24 வயதாகும் ஜெய்ஸ்வாலை கேப்டனாக நியமித்தால், அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளுக்கு அணியின் தலைமை பொறுப்பை நிலையாக வைத்திருக்க முடியும் என்பது ஒரு பார்வையாக உள்ளது. அதே நேரத்தில், கேப்டனாக செயல்படுவதற்கான அனுபவம் மற்றும் அழுத்தமான சூழல்களை கையாளும் திறன் போன்ற விஷயங்களையும் அணி நிர்வாகம் கணிக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் வீரர்கள் அணியில் இருப்பதால், எதிர்கால அணிக் கட்டமைப்பை வேறு விதமாக உருவாக்க ராஜஸ்தான் நிர்வாகம் திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.

ஜெய்ஸ்வாலை குறிவைக்கிறதா மும்பை இந்தியன்ஸ்?

இந்த சூழலில், யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தொடர்புகொண்டு பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை அணிக்குள் கொண்டு வந்து, 2028 சீசனில் கேப்டன் பொறுப்பை வழங்குவது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

ரோகித் சர்மாவுக்கு பிறகு அணியின் தொடக்க ஆட்டத்தில் முக்கிய பங்காற்றக்கூடிய இந்திய வீரரை நீண்ட கால அடிப்படையில் உருவாக்க வேண்டிய தேவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உள்ளது. அந்த வகையில், இளம் வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் கவனம் பெற்றுள்ள ஜெய்ஸ்வால் அணிக்கு பொருத்தமான தேர்வாக இருக்கக்கூடும்.

இருப்பினும், இந்த டிரேடிங் தொடர்பாக இரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. பேச்சுவார்த்தை உண்மையாக முன்னெடுக்கப்படுகிறதா, ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் அணியிலேயே தொடர்வாரா அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் செல்வாரா என்பது அடுத்தகட்ட நகர்வுகளைப் பொறுத்தே தெரியவரும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL