• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /மீண்டும் CSK வரும் ரவீந்திர ஜடேஜா? இன்ஸ்டாகிராம் மூலம் சூசக தகவல்.. முழு விவரம்!

மீண்டும் CSK வரும் ரவீந்திர ஜடேஜா? இன்ஸ்டாகிராம் மூலம் சூசக தகவல்.. முழு விவரம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஒரு சூசக பதிவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜடேஜா.

Written ByR Balaji
Published: Sep 03, 2026, 13:58 IST|Updated: Sep 03, 2026, 14:04 IST
joinshare
மீண்டும் CSK வரும் ரவீந்திர ஜடேஜா? இன்ஸ்டாகிராம் மூலம் சூசக தகவல்.. முழு விவரம்!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரவீந்திர ஜடேஜா கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக விளையாடி உள்ளார். 2012 ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணியில் இணைந்த அவர், 2025 ஆம் ஆண்டு வரை அந்த அணியில் பயணித்துள்ளார். இதையடுத்து 2026 ஆம் ஆண்டில் சஞ்சு சாம்சனை வாங்க ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விட்டுக்கொடுத்தனர்.

இந்த சூழலில், கடந்த ஐபிஎல்லில் ஜடேஜா, ஆர்ஆர் அணிக்காக விளையாடினார். அவர் 14 போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 266 ரன்கள் அடித்தார். அதேபோல் பந்து வீச்சில் 10 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.  அந்த ஐபிஎல் தொடர் முடிந்தபிறகு பேசிய ஜடேஜா, சிஎஸ்கேவை விட்டு வெளியேறும் எண்ணம் என்னக்கு இல்லை. டிரேடிங் மூலம் என்னை அனுப்பப் போகிறார்கள் என்பது கடைசிவரை எனக்கு தெரியாது. இந்த விஷயம் தெரிந்ததும் நிர்வாகம் மற்றும் தோனியை தொடர்பு கொண்டேன்.. ஆனால் யாரும் எனது அழைப்பை எடுக்கவில்லை என கூறினார்.

இந்த நிலையில், 2027 ஐபிஎல் தொடருக்கான டிரேட் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஜடேஜா மீண்டும் சிஎஸ்கே அணிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை சூசகமாக ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் டீபி மூலம் வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். அதாவது ரவீந்திர ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் டீபியாக தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்துள்ளார். மேலும், பயோவில் மஞ்சள் நிற குதிரையும் வைத்துள்ளார். இதனால் ஜடேஜா மீண்டும் சென்னை அணிக்கு வர போகிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்ற பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது சிஎஸ்கே அணியின் சமீபத்திய செயல்பாடுகளில் மிகப்பெரிய குறையாக பார்க்கப்படுகிறது.

இந்த குறையை சரி செய்யும் வகையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களான வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்சர் படேல் ஆகியோரில் ஒருவரை அணிக்குள் கொண்டுவர சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், ஜடேஜா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜடேஜா மீண்டும் மஞ்சள் ஜெர்சிக்கு திரும்ப வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பையும் இந்த பதிவு ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சிஎஸ்கே தரப்பில் விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அடுத்த சீசன் அணியமைப்பை பார்க்கும்போது ஜடேஜாவின் இடம் கேள்விக்குறியாகும் வாய்ப்பும் உள்ளது. இம்பாக்ட் வீரர் விதிமுறை இல்லாத சூழல் ஏற்பட்டால், கேப்டன் ரியான் பராக் கூடுதலாக 4 ஓவர்கள் வீசக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதேபோல், வனிந்து ஹசரங்கா அணியில் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக உள்ளார்.

இதுதவிர, மகீஷ் தீக்‌ஷனா, விக்னேஷ் புதூர், ரவி பிஷ்னோய் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்களும் ராஜஸ்தான் அணியில் உள்ளனர். இதனால், 2027 ஐபிஎல் தொடரில் ஜடேஜாவை தொடர்ந்து அணியில் வைத்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை ஜடேஜாவை டிரேடிங் முறையில் மீண்டும் வாங்க சிஎஸ்கே முயற்சி செய்தால், அதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். தற்போது 37 வயதாகும் ஜடேஜா, தனது சிறப்பான உடற்தகுதி காரணமாக இன்னும் சில ஆண்டுகள் உயர்மட்ட கிரிக்கெட்டில் தொடர முடியும் என கருதப்படுகிறது.

2027 ஐபிஎல் முடிவில் ஜடேஜாவுக்கு 38 வயதாகிவிடும். அந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அவரை விடுவிக்கும் பட்சத்தில், 2028 மெகா ஏலத்தில் சிஎஸ்கே அவரை மீண்டும் வாங்க வேண்டும் என்பதே பல ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. சிஎஸ்கேவுடன் மீண்டும் இணைந்தால், ஜடேஜா ஒரு வீரராக மட்டுமின்றி, எதிர்காலத்தில் அணியின் பயிற்சியாளர் குழுவிலும் முக்கிய பங்கு வகிக்க முடியும். குறிப்பாக அவரது மிகப்பெரிய பலங்களில் ஒன்றான பீல்டிங் திறனை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் அவரை பீல்டிங் கோச்சாக பயன்படுத்தும் வாய்ப்பும் சிஎஸ்கேவுக்கு இருக்கிறது.

இதனால், ஜடேஜா மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்புவது என்பது ஒரு சாதாரண வீரர் மாற்றமாக மட்டுமின்றி, அணியின் எதிர்கால திட்டத்திற்கும் முக்கியமான முடிவாக அமையக்கூடும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
IPL