• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /ரோஹித் சர்மா vs ஜெய்ஸ்வால்: 2027 உலகக் கோப்பையில் யார் ஓபனர்? அகர்கர் முக்கிய முடிவு!

ரோஹித் சர்மா vs ஜெய்ஸ்வால்: 2027 உலகக் கோப்பையில் யார் ஓபனர்? அகர்கர் முக்கிய முடிவு!

ரோஹித் சர்மா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ள நிலையில், 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தொடக்க வீரர் தேர்வு குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.

Written ByR Balaji
Published: Sep 19, 2026, 11:57 AM IST|Updated: Sep 19, 2026, 11:59 AM IST
joinshare
ரோஹித் சர்மா vs ஜெய்ஸ்வால்: 2027 உலகக் கோப்பையில் யார் ஓபனர்? அகர்கர் முக்கிய முடிவு!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இந்திய கிரிக்கெட் அணியில் ஓபனர் இடம் தொடர்பான விவாதம் டி20 போட்டிகளை தொடர்ந்து தற்போது ஒருநாள் கிரிக்கெட்டிலும் எழுந்துள்ளது. டி20 அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இடையே இருக்கும் போட்டி போலவே, ஒருநாள் அணியில் ரோகித் சர்மா மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரில் யாரை நீண்ட கால தொடக்க வீரராக தேர்வு செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருவருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 2027ஒருநாள் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சேர்க்கை குறித்து விவாதம் தீவிரமடைந்துள்ளது.

ரோகித்திடம் பேசிய அகர்கர்

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவிடம் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

செப்டம்பர் 16 ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு பிறகு செப்டம்பர் 18 ஆம் தேதி இருவரும் தனியாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்கால இந்திய அணியின் திட்டங்களை கருத்தில் கொண்டு யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக பயன்படுத்துவது குறித்து ரோகித் பரிசீலிக்க வேண்டும் என அகர்கர் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகிறது.

இதன் மூலம், 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து அணிக்குள் ஆலோசனைகள் நடைபெற்று வருவது தெரிய வருகிறது.

ரோகித் குறித்து பிசிசிஐ என்ன நினைக்கிறது?

ஒருபுறம் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் எதிர்காலத்திற்கான ஓபனராக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக கூறப்படும் நிலையில், மறுபுறம் ரோகித் சர்மாவை 2027 உலக கோப்பைதிட்டத்தில் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தும் பிசிசிஐ தரப்பில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, ரோகித் சர்மாவை உடனடியாக ஒருநாள் அணியில் இருந்து விலக்க வேண்டும் என்ற நிலைப்பாடு பிசிசிஐக்கு இல்லை. அவர் தொடர்ந்து விளையாட விரும்பினால், அதற்கான வாய்ப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், ரோகித் தானாக ஓய்வு பெற முடிவு செய்தால், அந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில், பிசிசிஐ இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோகித் முடிவில் மாற்றமா?

2027 ஒருநாள் உலகக் கோப்பை குறித்து கடந்த ஆண்டு பேசியபோது, அந்த தொடரில் விளையாட வேண்டும் என்பதே தனது இலக்கு என்று ரோகித் சம்ரா கூறி இருந்தார். ஆனால் சமீபத்திய பேட்டியில் 2027 உலகக் கோப்பை நடைபெறுவதற்கு இன்னும் நீண்ட காலம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தனது எதிர்காலம் குறித்து ரோகித் சர்மா முன்பு தெரிவித்திருந்த உறுதியான நிலைப்பாட்டில் இருந்து மாற்றி உள்ளாரா என்ற விவாதம் எழுந்துள்ளது.

எனினும், இதை வைத்து அவர் உடனடியாக ஓய்வு பெற போகிறார் என்று உறுதியாக கூற முடியாது. அவரது இறுதி முடிவு மற்றும் எதிர்கால திட்டம் தெளிவாகும் வரை இந்த விவகாரம் தொடர்ந்து பேசுபொருளாகவே இருக்கும்.

மேற்கிந்திய தீவுகள் தொடரில் என்னநடக்கும்?

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி செப்டம்பர் 30ஆம் தேதியும், தொடரின் கடைசி போட்டி அக்டோபர் 3 ஆம் தேதியும் நடைபெறுகின்றன.

இத்தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் இடம்பிடித்துள்ளதால், தொடக்க வீரர்கள் கூட்டணி எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரோகித் சர்மா தொடக்க போட்டிகளில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை என்றால், அடுத்தடுத்த போட்டிகளில் யாஷஸ்விக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. குறிப்பாக, வாய்ப்பு கிடைத்த போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடினால், 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஓபனர் விவாதம் மேலும் முக்கியத்துவம் பெறக்கூடும்.

இதனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெறும் இருதரப்பு தொடராக மட்டுமல்லாமல், இந்திய அணியின் எதிர்கால தொடக்க வீரர்கள் குறித்து சில முக்கிய முடிவுகளுக்கும் களமாக மையுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Indian Cricket Team