2025 ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சனுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டதன் காரணமாக சாம்சன் அந்த அணியில் இருந்து வெளியேற வேண்டும் என நினைத்தார். இதனை அறிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்ஆர் அணியுடம் பேச்சுவார்த்தை நடத்தி ரூ. 18 கோடிக்கு வாங்கியது. பதிலுக்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரணையும் கொடுத்தது.
2026 ஐபிஎல்லில் சஞ்சு சாம்சனும் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். 13 போட்டிகளில் 47.70 சராசரியில் 477 ரன்களை அடித்து அசத்தினார். இதில் 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடங்கும். இந்த சூழலில், தற்போது சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியிடம் கேப்டன் பதவியை கேட்டு வருகிறார். ரசிகர்களும் ருதுராஜ் கேப்டன்சியில் திருப்தி இல்லாததால், சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவி கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவியை கொடுக்க தயக்கம் காட்டுகிறதாம். ருதுராஜ் கெய்க்வாட்டிடமே கேப்டன் பதவியை தொடரலாம் என்ற முடிவிலும் அவர்கள் இருப்பதாக தெரிகிறது. 2026 ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் 14 போட்டிகளில் விளையாடி 337 ரன்களை மட்டுமே அடித்தார். அதிலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் மிகவும் மோசமாக உள்ளது. இப்படி கடுமையாக சொதப்பிய ருதுராஜ்க்கு கொடுக்க முன் வரும் சிஎஸ்கே சிறப்பாக செயல்பட்ட தனக்கு ஏன் கேப்டன் பதவியை வழங்க முன்வரவில்லை என சஞ்சு சாம்சன் அதிருப்தியில் உள்ளாராம்.
சஞ்சு சாம்சனின் அதிருப்தியை அறிந்த மும்பை இந்தியன்ஸ் அணி அவரை டிரேட் மூலம் வாங்க முனைப்பு காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சஞ்சு சாம்சனை வாங்க மும்பை இந்தியன்ஸ் அணி அவரது நெருக்கமானவராக கருதப்படும் ஜுபின் பருசாவை வைத்து சிஎஸ்கே-விடம் பேசி வருகிறதாம். அதேசமயம் சஞ்சு சாம்சனிடமும் அவர் பேசி வருகிறாராம்.
மும்பை இந்தியன்ஸ் வந்தால் கேப்டன் பதவி
அதாவது, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது கேப்டன் ஒருவர் தேவைப்படுகிறார். அதனால் நீ வந்தால், உனக்கு கேப்டன் பதவி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி பேசி வருகின்றனராம். சஞ்சு சாம்சனும் சிஎஸ்கே அணி மீது அதிருப்தியில் இருப்பதால், MI அணிக்கு செல்வது குறித்து யோசித்து வருகிறாராம்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றால் கேப்டன் பதவி, தொடர்ச்சியாக ஓப்பனராக விளையாடலாம், மும்பையின் வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகம் என்பதால் ரன்களை குவித்து அசத்த முடியும். இதுபோன்ற பல ஆதாயங்கள் இருப்பதால், சஞ்சு சாம்சன் மும்பைஇந்தியன்ஸ் அணிக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவியை கொடுக்காமல் இன்னமும் ருதுராஜ் கெய்க்வாட்டை வைத்து அணியை வழிநடத்தலாம் என்ற சிஎஸ்கே நிர்வாகத்தின் திட்டம் சிஎஸ்கே வீரர்களுக்கே பிடிக்கவில்லையாம். சர்பராஸ் கான் உள்ளிட்ட சிலர் வெளிப்படையாகவே சஞ்சு சாம்சனைதான் கேப்டனாக்க வேண்டும் என்ற கருத்தை கூறி இருக்கின்றனராம்.