• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /கங்காரூக்களை கதறவிட்ட புலிகள்... வங்கதேச அணிக்கு ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றி!

கங்காரூக்களை கதறவிட்ட புலிகள்... வங்கதேச அணிக்கு ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றி!

Bangladesh Historic Test Win : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

Written BySudharsan G
Published: Aug 16, 2026, 10:41 IST|Updated: Aug 16, 2026, 12:41 IST
joinshare
கங்காரூக்களை கதறவிட்ட புலிகள்... வங்கதேச அணிக்கு ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றி!
Image Credit: Bangladesh Team Historic Win Against Australia | Image Source : X/@BCBtigers

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Bangladesh Historic Test Win : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இது ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய மண்ணில் வங்கதேசம் பதிவு செய்யும் முதல் வெற்றி இதுவாகும்.

Bangladesh stun Australia to register landmark first Test victory Down Under  

— ICC (@ICC) August 16, 2026

SENA நாடுகளில் வங்கதேசம் அணி பெறும் 2வது டெஸ்ட் வெற்றி இது. கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் (மவுண்ட் மவுங்கானுய் மைதானம்) வங்கதேசம் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிய அணிகளில் வங்கதேசம் புதிய சாதனை

வங்கதேச அணி, ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடும் 3வது டெஸ்ட் போட்டி இதுதான். 2000ஆம் ஆண்டில் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற வங்கதேச அணி, 2003ஆம் ஆண்டில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட ஆஸ்திரேலியா சென்றது. அந்த 2 போட்டிகளையும் ஆஸ்திரேலியாவே வென்றது.

தற்போது இந்த போட்டியை வங்கதேசம் வென்றதன் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் மிகக் குறைந்த போட்டிகளில் விளையாடி, மிக விரைவாக முதல் வெற்றிபெற்ற ஆசிய அணி என்ற பெருமையை வங்கதேசம் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தான் கடைசியாக டெஸ்ட் போட்டியை வென்று 31 ஆண்டுகளாகிறது. இலங்கை அணி 1982ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதுவரை அதன் டெஸ்ட் வரலாற்றில் ஒரு போட்டியை கூட வென்றதில்லை. அந்த வகையில் வங்கதேச அணியின் இந்த வெற்றி மிகச் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

அசத்திய ஹசன் மஹ்மூது

ஆஸ்திரேலியாவுக்கு தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வங்கதேச அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வடக்கு ஆஸ்திரேலிய பகுதியில் உள்ள டார்வின் உள்ள மராரா மைதானத்தில் முதல் போட்டி கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 198 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. வங்கதேச வீரர் ஹசன் மஹ்மூது 6 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்களை அடித்திருந்தார். அடுத்து வங்கதேச அணிக்கு பேட்டிங் டன்ஸித் ஹசன் 101 ரன்கள், கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 84 ரன்களை குவித்தனர்.

57 ரன்கள் இலக்கு

வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 426 ரன்களை அடித்து ஆல்-அவுட்டானது. ஆஸ்திரேலியாவை விட வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 228 ரன்கள் முன்னிலை பெற்றது. ஹசில்வுட் 6 விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

தனியாளாக போராடி கேம்ரூன் கிரீன் 104 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். மெஹிடி ஹசன் மிராஸ் 5 விக்கெட், ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்டை வீழ்த்தினார். வங்கதேச அணிக்கு 57 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆட்ட நாயகன் ஹசன் மஹ்மூது

மாமினுல்  ஹக் 30, ஷத்மான் இஸ்லாம் 25 ரன்களை அடித்து வங்கதேச அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். மொத்தம் 8 விக்கெட்டை வீழ்த்திய ஹசன் மஹ்மூத் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 2வது டெஸ்ட் போட்டி குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள சௌத் மெக்கே நகரில் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கும்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket