SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அர்ஷ்தீப் சிங் ஏன் அவசியம்...? இந்திய டெஸ்ட் அணியில்... கவாஸ்கர் சொல்லும் காரணம்

அர்ஷ்தீப் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மட்டுமின்றி சிவப்பு பந்து கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்றும்; இந்திய அணி அவருக்கு டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார், இதை அஜிங்கயா ரஹானே ஆமோதித்துள்ளார்.

Written By Sudharsan G
Published: Nov 05, 2026, 12:49 AM IST | Updated: Nov 05, 2026, 12:55 AM IST
Join

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 டி20ஐ போட்டிகள், 5 ஓடிஐ போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டி20ஐ தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வென்றது.

தற்போது ஓடிஐ தொடர் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் இந்தியா வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நவம்பர் 15ஆம் தேதிவரை ஓடிஐ தொடர் நடைபெறும். நவம்பர் 19ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதிவரை டெஸ்ட் தொடர் நடைபெறும்.

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா டிரேட்... அடுத்த 2 நாட்கள் ரொம்ப முக்கியம் - முட்டிமோதும் பஞ்சாப், ராஜஸ்தான்

இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ தொடர்

இதற்கிடையே இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிது. முதல் இரண்டு போட்டிகளும் டிராவில் முடிந்த நிலையில், கடைசி போட்டி மற்றும் 3வது போட்டி வரும் நவ. 7ஆம் தேதி தொடங்குகிறது.

3வது போட்டியில் இந்திய டெஸ்ட் ஸ்குவாடில் இடம்பெற்றுள்ள துருவ் ஜூரேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சாய் சுதர்சன், அன்சுல் கம்போஜ், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.

அர்ஷ்தீப் சிங் கலக்கல் பந்துவீச்சு

இந்தச் சூழலில், இந்திய டெஸ்ட் அணியில் அர்ஷ்தீப் யாதவ் நிச்சயம் இடம்பெற வேண்டும் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்றைய முதல் ஓடிஐ போட்டியில் 10 ஓவர்களை வீசி 70 ரன்களை கொடுத்திருந்தாலும் அவர் 2 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

அதுவும் முதல் 5 ஓவர்களில் அவர் 25 ரன்களை கொடுத்து அந்த 2 விக்கெட்டை எடுத்திருந்தார். புதிய பந்தில் அவரது சிறப்பான பந்துவீச்சை பார்த்தே சுனில் கவாஸ்கர் போட்டியின் வர்ணனையில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் படிக்க | முடிந்தது ஹர்திக் பாண்டியா டிரேட்? பதிலுக்கு 2 வீரர்களை தரும் ஐபிஎல் அணி! முழு விவரம்

ஏன் டெஸ்ட் போட்டியில் அர்ஷ்தீப் வேண்டும்?

சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் வர்ணனையில் பேசிய சுனில் கவாஸ்கர், "அவரால் பந்தை உள்நோக்கியும் வெளிநோக்கியும் என இரு திசைகளிலும் ஸ்விங் செய்ய முடிகிறது. எந்த பந்து எங்கு வருகிறது என்பதில் பேட்ஸ்மேன்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இன்று அவரது லெந்த் மிகச் சிறப்பாக இருந்தது.

எப்படியிருந்தாலும் பந்துவீச்சின் திசை நன்றாக இருந்தது. அவர் வலது கை பேட்ஸ்மேன்களை மிடில் மற்றும் ஆஃப் ஸ்டம்பில் இருந்து குறுக்காக (Across) ஷாட்களை ஆட வைத்தார்.

அவர் வீசிய பந்துகள் அவ்வப்போது பந்தும் உள்நோக்கி வந்தது. அவர் மிக நன்றாகப் பந்துவீசினார். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக அவரை பார்த்த நான், அவரை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் பரிசீலிக்க வேண்டும் என்று எப்போதும் கூறி வருகிறேன். அவர் வெள்ளைப் பந்தையே இவ்வளவு ஸ்விங் செய்தால், சிவப்புப் பந்தை எவ்வளவு ஸ்விங் செய்வார்?" என்றார்.

ஆமோதித்த அஜிங்கயா ரஹானே

அதே விவாதத்தில் இடம்பெற்றிருந்த இந்திய முன்னாள் டெஸ்ட் கேப்டன் அஜிங்கயா ரஹானே, "அவருக்கு (அர்ஷ்தீப் சிங்) நிச்சயம் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அவர் வெள்ளைப் பந்தை இன்ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங் முறையில் கையாளும் விதம், அவரிடம் உள்ள திறமை மற்றும் விக்கெட் எடுக்கும் ஆற்றலை காட்டுகிறது. அது அவருக்கு சிவப்பு பந்திலும் உள்ளது" என்றார்.

"ஒரு இடது கை வேகப்பந்துவீச்சாளராக அவர் வித்தியாசமான கோணத்தையும் உருவாக்குகிறார். உங்களிடம் சுழற்பந்துவீச்சாளர் இருந்தால், இவரால் (அர்ஷ்தீப்) ஆடுகளத்தில் வித்தியாசமான கால் தடம் உருவாகும். எனவே அர்ஷ்தீப்பிடம் சிவப்பு பந்தில் பந்துவீசும் அந்த திறமை இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்" என்றார்.

அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்காக 104 டி20ஐ போட்டிகளில் விளையாடியிருந்தாலும், 19 ஓடிஐ போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடியதில்லை. இருப்பினும் 24 முதல் தர போட்டிகளில் விளையாடி உள்ளார்.

மேலும் படிக்க | விராட் கோலி வெறியாட்டம்... ரசிகர்களுக்கு பர்த் டே ட்ரீட்... இந்திய அணி வெற்றி

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES