• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /TNPL 2026 இதுவரை நடந்தது என்ன? சேப்பாக்கத்தில் ரூ.100 டிக்கெட் - ஆன்லைனில் புக் செய்வது எப்படி?

TNPL 2026 இதுவரை நடந்தது என்ன? சேப்பாக்கத்தில் ரூ.100 டிக்கெட் - ஆன்லைனில் புக் செய்வது எப்படி?

TNPL 2026 : 10வது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் திண்டுக்கலில் திட்டமிடப்பட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில், மீதம் உள்ள அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளன. இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரில் இதுவரை நடந்தது என்ன?, 8 அணிகளின் நிலவரம் என்ன?, மீதம் உள்ள போட்டிகளின் அட்டவணை?, டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி உள்ளிட்ட விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.

Written BySudharsan G
Published: Aug 17, 2026, 13:08 IST|Updated: Aug 17, 2026, 13:44 IST
joinshare
TNPL 2026 இதுவரை நடந்தது என்ன? சேப்பாக்கத்தில் ரூ.100 டிக்கெட் - ஆன்லைனில் புக் செய்வது எப்படி?
Image Credit: TNPL 2026 | Image Source : TNPL Website, ChatGPT

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TNPL 2026 : 10வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 4ஆம் தேதி திண்டுக்கல் நகரில் இத்தொடர் தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.

மொத்தம் 8 அணிகள் மோதிவரும் நிலையில், ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் தலா 1 போட்டியில் மோதும். இதுவரை 20 லீக் போட்டிகள் நிறைவடைந்து, திண்டுக்கல் மைதானத்தில் திட்டமிடப்பட்ட அனைத்து போட்டிகளும் நிறைவடைந்தன.

சென்னையில் முக்கிய போட்டிகள்

இதையடுத்து, மீதம் உள்ள அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பதால் சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர்.

Counting down the Top moments from Dindigul as Shriram Capital TNPL 2026 heads to Chennai! 

Watch LIVE on Sony Sports Ten 4 Tamil & the TNPL YouTube Channel.

Book your tickets now on the District by Zomato app.#TNPL10 #TNPL2026 #NammaOoruNammaGethu

— TNPL (@TNPremierLeague) August 16, 2026

இன்னும் ஒவ்வொரு அணிக்கும் தலா 2 லீக் ஆட்டங்கள் என மொத்தம் 8 லீக் போட்டிகள் பாக்கி இருக்கின்றன. இதையடுத்து, புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும்.

பிளே ஆப் பார்மட்

  • முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதிபெறும்.
  • அதில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். தோல்வியடையும் அணி குவாலிபயர் 2 போட்டிக்குச் செல்லும்.
  • மற்ற இரண்டு அணிகள் எலிமினேட்டரில் மோதும். அதில் வெற்றிபெறும் அணி குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதிபெறும்.
  • குவாலிபயர் 1 போட்டியில் தோற்ற அணியும், எலிமினேட்டரில் வென்ற அணியும் குவாலிபயர் 2 போட்டியில் விளையாடும். அதில் வெற்றிபெறும் அணி, குவாலிபயர் 1 போட்டியில் வென்ற அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும்.

புள்ளிப்பட்டியல் (தற்போதைய நிலவரம்)

வ. எண்அணிபோட்டிகள்வெற்றிதோல்வி நெட் ரன்ரேட்புள்ளிகள்
1.மதுரை5 4 1 0.29 8
2.சென்னை53 2 0.472 6
3.திருப்பூர் 5 3 2 0.222 6
 4.நெல்லை 5 3 2 0.133 6
5. திருச்சி53 2 -0.304 6
6.கோவை5 23 1.2474
7.திண்டுக்கல்52 3 0.205 4
8.சேலம்5 0 5 -2.3920

மீதம் உள்ள லீக் போட்டிகளின் அட்டவணை

போட்டிதேதிநேரம்
சென்னை - கோவைஆகஸ்ட் 18 இரவு 7.30
திண்டுக்கல் - திருச்சிஆகஸ்ட் 19இரவு 7.30
மதுரை - திருப்பூர்ஆகஸ்ட் 20மாலை 3.30
நெல்லை - சேலம்ஆகஸ்ட் 20 இரவு 7.30
கோவை - திண்டுக்கல்ஆகஸ்ட் 21மாலை 3.30
திருச்சி - சென்னைஆகஸ்ட் 21 இரவு 7.30
திருப்பூர் - சேலம் ஆகஸ்ட் 22 மாலை 3.30
நெல்லை - மதுரை ஆகஸ்ட 22 இரவு 7.30

*அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும்.

பிளே ஆப் போட்டிகளின் அட்டவணை

போட்டி தேதி நேரம்
குவாலிபயர் 1ஆகஸ்ட் 23 இரவு 7.30
எலிமினேட்டர் ஆகஸ்ட் 24 இரவு 7.30
குவாலிபயர் 2 ஆகஸ்ட் 26 இரவு 7.30
இறுதிப்போட்டி ஆகஸ்ட் 28 இரவு 7.30

*அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும்.

TNPL போட்டிகளுக்கு டிக்கெட் எடுப்பது எப்படி?

ஆன்லைன்

  • District.in இணையத்தளம் மற்றும் District செயலியில் TNPL போட்டிகளுக்கான டிக்கெட்டை எடுக்கலாம்.
  • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் C Lower, D Lower, E Lower, I Lower, J Lower, K Lower உள்ளிட்ட கேலரிகளின் டிக்கெட்டை ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • இவை அனைத்திற்கு ஒரே டிக்கெட் விலைதான். ஒரு டிக்கெட் விலை 100 ரூபாய் ஆகும்.

 

 

 

 

View this post on Instagram

 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Tamil Nadu Premier League (@tnpremierleague)

ஆப்லைன்

  • TNPL போட்டிகளை சென்னை சேப்பாக்கத்தில் கண்டுகளிக்க நீங்கள் நேரில் சென்று கவுண்டரிலும் டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம்.
  • இன்று முதல் டிக்கெட் விற்பனை தொடங்கியிருக்கிறது.
  • 8வது கேட் நம்பரில் உள்ள கவுண்டரில் இன்று காலை 10.30 மணிமுதல் டிக்கெட் விற்பனை தொடங்கியிருக்கிறது.
  • 100 ரூபாயில் இருந்து டிக்கெட் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.

TNPL 2026 தொடரில் இதுவரை...

அதிகபட்ச ரன்கள்

1. சச்சின்.பி: VIDA கோவை கிங்ஸ் அணியைச் சேர்ந்த சச்சின்.பி. 5 போட்டிகளில் 310 ரன்களை அடித்து இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதில் 3 அரைசதங்கள் அடக்கம். 31 பவுண்டரிகள், 15 சிக்ஸர்கள் அடக்கம்.

2. நாராயணன் ஜெகதீசன்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் ஜெகதீசன் 5 போட்டிகளில் 301 ரன்களை அடித்து 2வது இடத்தில் உள்ளார். 3 அரைசதம், 22 பவுண்டரிகள், 21 சிக்ஸர்கள் அடக்கம்.

3. துஷார் ரஹேஜா: ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் ஓப்பனரான இவர் 5 போட்டிகளில் 296 ரன்களை அடித்து 3வது இடத்தில் உள்ளார். 2 அரைசதம், 1 சதம், 15 பவுண்டரி, 22 சிக்ஸர்கள் அடக்கம்.

அதிகபட்ச விக்கெட்டுகள்

1. தீபன் லிங்கேஷ்: VIDA கோவை கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபன் லிங்கேஷ் 11 விக்கெட்டை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

2.  கிஷோர் ஜி: VIDA கோவை கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கிஷோர் 9 விக்கெட்டை வீழ்த்தி 2வது இடத்தில் உள்ளார்.

3. சிலம்பரசன்: ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் வேகப்பந்துவீச்சாளர் சிலம்பரசன் 9 விக்கெட்டை வீழ்த்தி இப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.

பரபரப்பான கட்டத்தில் டிஎன்பிஎல்

  • இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் வென்று மதுரை பேந்தர்ஸ் அணி தொடரில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஏறத்தாழ பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துவிட்டது.
  • கடைசி இடத்தில் உள்ள சேலம் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது என்றே சொல்லலாம். மீதம் உள்ள 2 போட்டிகளில் வென்றால் கூட அவர்களால் முதல் நான்கு இடத்திற்கு வர இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஆனால் அதேநேரத்தில் சென்னை, திருப்பூர், நெல்லை, திருச்சி அணிகள் தலா மூன்று வெற்றிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் நிற்கின்றன. அதேபோல், கோவை மற்றும் திண்டுக்கல் அணிகள் தலா 2 வெற்றிகளுடன் 6வது, 7வது இடத்தில் உள்ளனர்.
  • இதனால், இந்த 6 அணிகளில் யார் வேண்டுமானாலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறலாம் என்பதால் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் அத்தனை போட்டிகளும் அனல் பறக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே உடனே டிக்கெட்டை போடுங்க.
Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket