• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /விளையாட்டு
  • /கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி... 15 வயதில் மிகப்பெரிய பொறுப்பு - இஷான் கிஷனுக்கு காயம்

கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி... 15 வயதில் மிகப்பெரிய பொறுப்பு - இஷான் கிஷனுக்கு காயம்

Vaibhav Sooryavanshi: துலீப் டிராபி 2026 தொடரின் மத்திய மண்டல அணிக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டியில் கிழக்கு மண்டல அணி கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி செயல்பட்டார்.

Written BySudharsan G
Published: Aug 30, 2026, 15:45 IST|Updated: Aug 30, 2026, 16:06 IST
joinshare
கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி... 15 வயதில் மிகப்பெரிய பொறுப்பு - இஷான் கிஷனுக்கு காயம்
Image Credit: Vaibhav Sooryavanshi Captaincy Duleep Trophy 2026 | Screengrab : X/@BCCIDomestic

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Vaibhav Sooryavanshi, Duleep Trophy 2026: துலீப் டிராபி 2026 தொடரின் அரையிறுதிச்சுற்று இன்று பெங்களூருவில் தொடங்கியிருக்கிறது. காலிறுதிச் சுற்றிலேயே வடகிழக்கு மண்டலம் மற்றும் மேற்கு மண்டலம் அணிகள் வெளியேறியவிட்டன.

அந்த வகையில் இன்று இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் தொடங்கின. பெங்களூருவில் உள்ள பிசிசிஐ CoE முதல் மைதானத்தில் மத்திய மண்டலம் - கிழக்கு மண்டலம் அணிகள் முதலாவது அரையிறுதி போட்டியில் மோதி வருகின்றன. அதே 2வது மைதானத்தில் வடக்கு மண்டலம் - தெற்கு மண்டலம் அணிகள் 2வது அரையிறுதிப் போட்டியில் மோதி வருகின்றன.

மத்திய மண்டலம் vs கிழக்கு மண்டலம்

பிளேயிங் லெவன்

கிழக்கு மண்டலம்: அபிமன்யு ஈஸ்வரன், வைபவ் சூர்யவன்ஷி, குமார் குஷாக்ரா, சுதிப் குமார் கராமி, இஷான் கிஷன்(கேப்டன்), விராட் சிங், முகமது குனைன் குரைஷி, அனுகுல் ராய், அபிஜித் கே சர்கார், முகமது ஷமி, முகேஷ் குமார்.

மத்திய மண்டலம்: அமன் மொகடே, ஆர்யன் ஜுயல் (வாரம்), குணால் சண்டேலா, யாஷ் ரத்தோட், ரஜத் படிதார் (கேப்டன்), ரிங்கு சிங், சரண்ஷ் ஜெயின், ஹர்ஷ் துபே, அர்ஷத் கான், யாஷ் தாக்கூர், ஆர்யன் பாண்டே.

தற்போதைய நிலை

டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தார். மத்திய மண்டலம் அணி பேட்டிங் செய்து வருகிறது. 3வது செஷனில் மொத்தம் 60 ஓவர்கள் இதுவரை வீசப்பட்டிருக்கும் நிலையில், மத்திய மண்டலம் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை அடித்திருக்கிறது.

ரிங்கு சிங் 44 ரன்களில் பேட்டிங் செய்து வருகிறார். ஆர்யன் ஜூயஸ் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முகேஷ் குமார், அபிஜித் கே சர்கார் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். முகமது ஷமி, குனைன் குரைஷி தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.

தெற்கு மண்டலம் vs வடக்கு மண்டலம்

பிளேயிங் லெவன்

தெற்கு மண்டலம்: ரிக்கி புய், ஷேக் ரஷீத், கொடிமேலா ஹிமதேஜா, திலக் வர்மா (கேப்டன்), ரவிச்சந்திரன் ஸ்மரன், நாராயண் ஜெகதீசன், தனய் தியாகராஜன், ஷ்ரேயாஸ் கோபால், கவுரி சைதேஜா, வித்வத் கவேரப்பா, எம்.டி.நிதீஷ்,

வடக்கு மண்டலம்: கம்ரான் இக்பால், சனத் சங்வான், ஆயுஷ் தோசேஜா, ஆயுஷ் பதோனி, அப்துல் சமது, கன்ஹையா வாதவான், நிஷாந்த் சிந்து, அபித் முஷ்டாக், அன்ஷுல் கம்போஜ், குர்னூர் ப்ரார், அர்ஷ்தீப் சிங்.

195 ரன்களுக்கு ஆல்-அவுட்

வடக்கு மண்டலம் அணி கேப்டன் ரஜத் பட்டிதார் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். வடக்கு மண்டலம் அணி 59.1 ஓவர்களில் 195 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது. ஓபனர் கம்ரான் அக்மல் மட்டும் கடைசி வரை போராடினார். 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்த அவர் 76 ரன்களை அடித்திருந்தார். கேப்டன் கன்ஹையா 35, ஆயுஷ் தோசேஜா 23 என ஓரளவு ரன்களை அடிக்க மற்றவர்கள் கடுமையாக சொதப்பினர்.

Castled 🎯

MD Nidheesh picks up the final wicket as South Zone bowl North Zone out for 195!

Vidwath Kaverappa with 4⃣ wickets
Qamran Iqbal top-scored with 7⃣6⃣

Scorecard ▶️ https://t.co/AGjIStrDAT#DuleepTrophy | #SZvNZ pic.twitter.com/qeMI5Gzml5

— BCCI Domestic (@BCCIdomestic) August 30, 2026

கலக்கிய கவேரப்பா

தெற்கு மண்டலம் பந்துவீச்சில் வித்வத் கவேரப்பா 4 விக்கெட்டையும்; எம்டி நிதீஷ் மற்றும் தனய் தியாகராஜன் தலா 2 விக்கெட்டையும்; சாய்தேஜா மற்றும் ஷ்ரேயாஸ் கோப்ல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அடுத்து தெற்கு மண்டலம் பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது.

தெற்கு மண்டலம் அணிக்கு சூப்பர் சான்ஸ்

இரு போட்டிகளும் 4 நாள்கள் ஆட்டம் என்பதால் டிராவுக்கு அதிக வாய்ப்புள்ளது. எனினும் முதல் இன்னிங்ஸில் யார் முன்னிலை பெறுகிறார்கள் என்பது முக்கியம் அப்படியிருக்க, தெற்கு மண்டலம் அணி விக்கெட்டை விடாமல் ஓரளவு சிறப்பாக விளையாடினாலே முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுவிடலாம். கடந்த ஆண்டு போலவே இறுதிப்போட்டிக்கும் தகுதிபெறலாம்.

இஷான் கிஷனுக்கு காயம்

முன்னதாக, மத்திய மண்டலம் - கிழக்கு மண்டலம் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 19வது ஓவரில் பந்துவீச்சு அணியின் (கிழக்கு மண்டலம்) கேப்டனான கேப்டன் இஷான் கிஷனுக்கு காயம் ஏற்பட்டது. விக்கெட் கீப்பிங் செய்தபோது வலது கை மணிக்கட்டில் பந்து பலமாக தாக்கியது. அவர் பிஸியோக்கள் பரிசோதித்து பார்த்த நிலையில், வலி தாங்காமல் அவரும் பெவிலியன் திரும்ப நேரிட்டது.

கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி

இஷான் கிஷன் களத்தைவிட்டு சென்றதும் குமார் குஷாக்ரா விக்கெட் கீப்பிங்கை கவனித்துக்கொண்டார். கேப்டன்ஸியை துணை கேப்டனான வைபவ் சூர்யவன்ஷி கவனித்துக்கொண்டார். வெறும் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி சீனியர் வீரர்களை வழிநடத்திய காட்சிகளை இன்று பார்க்க முடிந்தது. குறிப்பாக இந்திய அணிக்காக விளையாடிய முகமது ஷமி, முகேஷ் குமார், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரை அவர் வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.

துலீப் டிராபி தொடரில் வைபவ் சூர்யவன்ஷிக்கு இது 2வது போட்டிதான். அது மட்டுமின்றி 10வது முதல் தர போட்டிதான். இவ்வளவு அனுபவமற்ற வீரர் துலீப் டிராபி போட்டியில் கேப்டனாக செயல்படுவது பாராட்டத்தக்கது என்றாலும், பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.

அவை ஒருபுறம் இருக்க, வைபவ் சூர்யவன்ஷி கேப்டன்ஸியை கவனித்துக்கொண்டிருந்தபோது, ஆர்யன் ஜூயல் நல்ல ரிதமில் விளையாடி வந்தார். முகேஷ் குமார் வீசிய பந்து அவரது பேட்டை உரசி சென்றாலும் கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை. டிஆர்எஸ் டைமர் ஓடிக்கொண்டிருக்க, வைபவ் சூர்யவன்ஷி இக்கட்டான சூழலில் சிக்கினார்.

Stand-in Captain Vaibhav Sooryavanshi goes for the review with 3 seconds remaining...and gets it right 👏

DRS done right as the set Aryan Juyal (46) is dismissed ✅

The celebrations say it all 🙌#DuleepTrophy pic.twitter.com/IwBQbr8hJQ

— BCCI Domestic (@BCCIdomestic) August 30, 2026

ஆனால், பிறரின் கருத்துக்கு மதிப்பளித்த அவர் கடைசிக்கு 3வது நொடியில் டிஆர்எஸ் எடுத்தார். அது அவருக்கு கைக்கொடுத்தது. ரிவ்யூவில் பேட்டில் பட்டது உறுதிப்படுத்தப்படவே அவுட் கொடுக்கப்பட்டது. கேப்டனாக சூர்யவன்ஷி எடுத்த முதல் முடிவே வெற்றிகரமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Cricket